ஏழைகள் நல மாநாட்டில் பங்கேற்க இமாச்சல் பிரதேச செல்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: ஏழைகள் நல மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இமாச்சல் பிரதேச மாநிலம் செல்கிறார். மோடி தலைமையிலான ஆட்சி 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க செப். 15 கடைசி நாள்: ஒன்றிய அரசு

டெல்லி: 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க, பரிந்துரைக்க செப்டம்பர் 15ம் தேதி கடைசி நாள் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட உள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 15ம் தேதிக்குள் பத்ம விருதுகள் 2023க்கான பரிந்துரைகள் வரவேற்பு; ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.!

டெல்லி: 2023ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவிற்கு அடுத்த நிலையில் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் உள்ளன. இவை பத்ம விருதுகள் என்று அழைக்கப்படுகின்றன. அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், சினிமா, பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த … Read more

நாகை கருவேலங்காடை கிராமத்தில் உள்ள கல்லாறு வாய்க்காலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

நாகை: நாகை கருவேலங்காடை கிராமத்தில் உள்ள கல்லாறு வாய்க்காலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். விவசாயிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறைகளையும் கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களிலும் முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார்.

காஷ்மீரின் அவந்திப்போரா பகுதியில் 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது பாதுகாப்புப் படை!!

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் அவந்திப்போராவில் உள்ள ராஜ்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதனை தொடர்ந்து வீரர்கள் தந்த பதிலடியில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.சம்பவ இடத்தில் … Read more

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,037 கன அடியில் இருந்து 2,770 கன அடியாக குறைப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,037 கன அடியில் இருந்து 2,770 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்இருப்பு 88.13 டிஎம்சியாக இருக்கிறது. மேட்டூர் அணையின் இருந்து பாசன தேவைக்காக விநாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளில் படிப்பை தொடர நடவடிக்கை : ஒன்றிய அரசு

டெல்லி : உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர்கள் அதன் அண்டை நாடுகளில் படிப்பை தொடர நடவடிக்கை எடுத்து வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் போர் தீவிரம் அடைந்ததால் அந்த நாட்டில் மருத்துவம் படித்து வந்த 10,000த்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் தாயகம் அழைத்து  வரப்பட்டனர். அவர்களில் 1900க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். 3 மாதத்திற்கு மேலாக போர் நடந்து வருவதால் தங்களது படிப்பை தொடர முடியாத … Read more

வேலூர் காட்பாடி ரயில்வே மேம்பாலம் பழுதடைந்தால் இன்று முதல் ஒரு மாதத்திற்கு போக்குவரத்துக்கு தடை

வேலூர்: வேலூர் காட்பாடி ரயில்வே மேம்பாலம் பழுதடைந்தால் இன்று முதல் ஒரு மாதத்திற்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் பாதுகாப்பு கருதி போக்குவரத்துக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வேலூரிலிருந்து ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு மாற்று வழியில் வாகனங்கள் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வயதை எதிர்த்து போராடுகிறேன்: ராதிகா ஆப்தே

மும்பை: வயதாகிக் கொண்டே செல்கிறது. அதை எதிர்த்துதான் போராடுகிறேன் என்றார் ராதிகா ஆப்தே.தமிழில் ரஜினியுடன் கபாலி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. அவர் கூறியது:விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறேன். வயதாக ஆக, முகப்பொலிவு இழப்பது வாடிக்கைதான். ஆனால் அதுதான் எனக்கு பெரும் போராட்டமாக இருக்கிறது. எனக்கு தெரிந்து பாலிவுட்டில் உள்ள பலர், அழகுக்காக ஆபரேஷன் செய்துகொள்கிறார்கள். இதுபோல் முகத்திலும் உடலிலும் ஆபரேஷன் செய்த பலரை … Read more

மே-31: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.