சென்னை விமான நிலையத்தில் ரூ.64.84 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.64.84 லட்சம் மதிப்புடைய 1.4 கிலோ தங்கம், மற்றும் ரூ.46.29 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 5 பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேச துரோக செயல்பாடு: ஐபிஎஸ் அதிகாரி கைது

புதுடெல்லி: லஷ்கர் இ தொய்பா இயக்கத்துக்கு தகவல்களை கசிய விட்ட என்.ஐ.ஏ.வை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்டார். தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அமைப்பில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் அரவிந்த் திக்விஜய் நேகி.  ஹுரியத் பயங்கரவாத இயக்கத்திற்கு நிதி வழங்கிய வழக்கில் புலனாய்வு செய்ததற்காக 2017ம் ஆண்டு வீரதீர விருது பெற்றவர். ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்துக்கு மிக முக்கிய தகவல்களை கசிய விட்டது … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விதிமீறலில் ஈடுபட்ட அதிமுகவினர்!: நடவடிக்கை கோரி திமுகவினர் சாலை மறியல்..!!

சென்னை: சென்னை மாநகராட்சி 179வது வார்டில் அதிமுகவினர் விதிமீறலில் ஈடுபட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோரி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருவான்மியூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் பயணிகள் மகிழ்ச்சி: மத்திய ரயில்வே வழித்தடத்தில் கூடுதலாக 36 மின்சார ரயில்

மும்பை: மகாராஷ்டிராவில் மத்திய ரயில்வே வழித்தடத்தில் கூடுதலாக 36 மின்சார ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மத்திய ரயில்வேயில் மின்சார ரயில்கள் காலை, இரவு நேரங்களில் அதிக கூட்ட நெரிசலுடன் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகளின் வசதிக்காக மத்திய ரயில்வே, மெயின் வழித்தடத்தில் கூடுதலாக 36 மின்சார ரயில் சேவைகள் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தானே – திவா இடையே 5, 6-வது வழிப்பாதையை நேற்று பிரதமர் மோடி தொடங்கி … Read more

எழுத்துப்பிழையால் தவறு நிகழ்ந்துவிட்டது: கள்ளஓட்டு பதிவானதாக அண்ணாமலை புகார் தெரிவித்த நிலையில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் விளக்கம்

சென்னை: எழுத்துப்பிழையால் தவறு நிகழ்ந்துவிட்டதாக ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார். கள்ளஓட்டு பதிவானதாக அண்ணாமலை புகார் தெரிவித்த நிலையில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கள்ளவாக்கு செலுத்தப்படவில்லை என தேர்தல் அலுவலர், தம்மிடம் தெரிவித்ததாக கூறினார். சற்று நேரத்தில் வாக்களிக்க இருப்பதாகவும் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

சொப்னாவின் வேலை ஒரே நாளில் பறிப்பு

திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கைதானவர் சொப்னா. ஒரு வருடத்துக்கு மேல் சிறையில் இருந்தவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் தாய், குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எச்ஆர்டிஎஸ் (ஹை ரேஞ்ச் ரூரல் டெவலப்மன்ட் சொசைட்டி) என்ற என்ஜிஓ நிறுவனத்தில் சொப்னாவுக்கு ₹ 43,000 சம்பளத்தில் அதிகாரியாக வேலை கிடைத்தது. பாஜ, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் மதியம் 1 மணி நிலவரப்படி 23.42% வாக்குகள் பதிவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் மதியம் 1 மணி நிலவரப்படி 23.42 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. காலை 9 மணிக்கு 3.96 சதவீதம், 11 மணிக்கு 17.88 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் 1 மணிக்கு 23.42 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கிறது. காலை முதல் மந்தமான வாக்குகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்துள்ளது.

ஆந்திரா கல்லூரியிலும் ஹிஜாப் அணிய தடை

திருமலை: கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள்  ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. தற்போது, ஹிஜாப் அணிவதற்கு இம்மாநில உயர் நீதிமன்றமே தடை விதித்துள்ளது. சீருடைய அணிந்து மட்டுமே பள்ளிக்கு அனைவரும் வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால், ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆந்திராவிலும் ஹிஜாப் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. விஜயவாடாவில் உள்ள லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து … Read more

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவு: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69 சதவீதம்  வாக்குகள் பதிவாகியுள்ளது. மாநகராட்சிகளில் குறைந்த அளவாக தாம்பரத்தில் 6.95 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்திலேயே குறைந்த அளவாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 10.65 சதவீதமும், அதிகளவாக அரியலூர் மாவட்டத்தில் 30.79 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,270 பேருக்கு கொரோனா; மேலும் 325 பேர் உயிரிழப்பு.! ஒரே நாளில் 60,298 பேர் டிஸ்சார்ஜ்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,270 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 325 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,28,06,155 ஆக உள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 25,920 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 22,270 ஆக குறைந்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 3,650 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,28,06,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா இறப்பு எண்ணிக்கை … Read more