'ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே வழித்தடம்' என்பதே எங்களது நோக்கம்: உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

டெல்லி: சர்வதேச சோலார் கூட்டமைப்பின் வழியாக ‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே வழித்தடம்’ என்பதே எங்களது நோக்கம் என டி.இ.ஆர்.ஐ. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். எப்போதும் உலகளாவிய கட்டமைப்பிலிருந்து தூய்மையான ஆற்றல் கிடைப்பதை உறுதிசெய்ய நாம் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார். அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் எரிசக்தி தேவை இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். இந்த எரிசக்தியை மறுப்பது என்பது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மறுப்பதற்கு சமம் என … Read more

பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 7ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும்: அண்ணா பல்கலை

சென்னை: பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 7ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது. ஜூன் 11ஆம் தேதி வரை தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடைபெறும் என கூறியுள்ளது. ஜூன் 13ஆம் தேதி செய்முறைத் தேர்வும், ஜூன் 22ஆம் தேதி செமஸ்டர் எழுத்துத் தேர்வும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சோலார் கூட்டமைப்பின் வழியாக 'ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே வழித்தடம்' என்பதே எங்களது நோக்கம் : மோடி

டெல்லி: சர்வதேச சோலார் கூட்டமைப்பின் வழியாக ‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே வழித்தடம்’ என்பதே எங்களது நோக்கம் என டி.இ.ஆர்.ஐ. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் எரிசக்தி தேவை இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். இந்த எரிசக்தியை மறுப்பது என்பது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மறுப்பதற்கு சமம் என தெரிவித்தார்.

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

கொல்கத்தா: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பாஜகவுக்கு ஓட்டுபோடவில்லை என்றால் புல்டோசரை விட்டு ஏற்றுவோம்! : தெலங்கானா எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

ஐதராபாத்: உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கூறுகையில், ‘உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் அதிகளவில் மக்கள் வாக்களித்துள்ளனர். இதனால் யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக அதிகளவில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து வாக்களித்துள்ளதாக சிலர் தகவல்களை பரப்பி வருகின்றனர். அவ்வாறு யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக வாக்களிப்பவர்கள் யார் என்பதை கண்டு, நாங்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் அவர்களை மாநிலத்தை விட்டு வெளியேற்றுவோம். எங்களுக்கு … Read more

பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை போலீசார் பதிவு செய்த வழக்கு ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை போலீசார் பதிவு செய்த வழக்கு ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை நீதிமன்ற விசாரணை அறிக்கையில் நடிகர் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால் வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

பாஜகவுக்கு வாக்களிக்காதோர் வீடுகளை ஜே.சி.பி. கொண்டு இடித்து தள்ளுவோம்!: உ.பி. தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை..!!

லக்னோ: பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்றால் அவர்களுடைய வீடுகள் ஜே.சி.பி. கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்படும் என அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் கௌஷா மகர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.-வான ராஜாசிங் பேசிய சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், உத்திரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்காத வாக்காளர்களுக்கு அவர் மிரட்டல் விடுத்துள்ளார். உத்திரப்பிரதேச முதலமைச்சரான யோகி ஆதித்யநாத் ஆயிரக்கணக்கான ஜே.சி.பி. வாகனங்களை கொள்முதல் செய்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். பாஜகவுக்கு வாக்களிக்காதோர் … Read more

பெரம்பலூர் அருகே பட்டியலின சிறுவர்களை மலம் அல்ல வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே பட்டியலின சிறுவர்களை மலம் அல்ல வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அபினேஷ்(22), சிலம்பரசன்(27), செல்வகுமார்(25) ஆகியோருக்கு தல ரூ.1000 அபராதமும் விதித்து பெரம்பலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாடு முழுவதும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணிவது கட்டாயம்

டெல்லி: நாடு முழுவதும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள்,  இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஹெல்மெட் அணிவது கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அறிவிப்பு வெளியான நாளில் இருந்து ஓராண்டு கழித்து புதிய வழிகாட்டு நெறிமுறை நடைமுறைக்கு வரும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 4வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிக்கும் இரு சக்கர வாகனத்தை மணிக்கு 40 கி.மீ வேகத்திற்கு மேல் இயக்க கூடாது என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

வாக்கு எண்ணிக்கையை எங்கு நடத்துவது என மாநில தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் : ஐகோர்ட் கருத்து

சென்னை : வாக்கு எண்ணிக்கையை எங்கு நடத்துவது என மாநில தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. சோளிங்கரில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கக் கோரி அமமுக வேட்பாளர் சீனிவாசன் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் நீதிபதிகள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.கடைசி நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.