கர்நாடகாவில் ஒரு வாரத்திற்கு பின் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..ஹிஜாபை அகற்ற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்!!

பெங்களூரு : கர்நாடகாவில் ஒரு வாரத்திற்கு பின் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு வந்த இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாபை அகற்ற மறுத்து போராட்டத்தில் இறங்கினர். கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு எதிராகவும் ஆதரவாகவும் போராட்டங்கள் வெடித்தன. சில இடங்களில் போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கில் கல்வி நிறுவனங்களுக்கு மதம் சார்ந்த உடைகளை அணிந்து வர கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து … Read more

திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் 2 பள்ளிகளுக்கு நோட்டீஸ்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா நடவடிக்கை

திருவண்ணாமலை: திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா 2 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக 2 தனியார் பள்ளிகள் விளக்கமளிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபர் கைது

டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள அஜித் தோவல் இல்லத்திற்குள் நுழைய முயன்ற நபரிடம் காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு திமுக வேட்பாளர் மரணம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு திமுக வேட்பாளர் எம்.ஐயப்பன் என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் அதிகாலையில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அதிகாலையில் லேசான நிலநடுக்கம்  உணரப்பட்டது. பால்காமிலிருந்து 15 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது.

திமுக நிர்வாகிகள் மேலும் 19 பேர் கட்சியிலிருந்து நீக்கம் : துரைமுருகன் அறிவிப்பு

சென்னை : திமுக நிர்வாகிகள் மேலும் 19 பேர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார் .தலைமை அறிவித்த வேட்பாளர்கள் எதிர்த்து போட்டியிட்ட நிர்வாகிகள், கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக செயல்படுவோர் என தற்போது 19 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபி நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழப்பு : விவசாயிகளை தூண்டிவிட்டதாக இருமுறை கைது செய்யப்பட்டவர்!!

சண்டிகர் : விவசாயிகளின் போராட்டத்தின் போது, டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய பஞ்சாப் நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் செங்கோட்டையை நோக்கி விவசாயிகள் முன்னேறினர். செங்கோட்டையில் இருந்த கம்பத்தில் விவசாயிகள் கொடி ஏற்றியதில் சர்ச்சையாகி பாதுகாப்புப் படையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. போராட்டத்தில் உடன் இருந்து விவசாயிகளை தூண்டிவிட்டதாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் தீப் … Read more

பிப்-16: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கடலில் பாதி மூழ்கிய இலங்கை படகு மீட்பு இந்தியாவில் தீவிரவாத அமைப்பு ஊடுருவலா: ஆந்திராவில் கடற்படை அதிகாரிகள் விசாரணை

திருமலை: ஆந்திராவில் கடலில் பாதி மூழ்கிய நிலையில் படகு மீட்கப்பட்டது. இதனால், தீவிரவாத அமைப்பை சேர்ந்த யாராவது ஊடுருவினார்களா? என கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள நிஜாம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கடலில் இருந்து 4.4 கி.மீட்டர் தொலைவில் ஒரு படகு பாதி மூழ்கிய நிலையில் இருப்பதை கண்டனர். இது குறித்து துறைமுகத்தில் உள்ள மரைன் போலீசார், கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு தகவல் … Read more

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு ஏன்? உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

புதுடெல்லி: ‘தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோரின் முன்னேற்றத்துகாகவே 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது,’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு, ராமதாஸ், ஜி.கே.மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி, பாமக உள்ளிட்டோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தங்கள் தரப்பு வாதங்களையும் விசாரணையின் போது கேட்க வேண்டும் என்று பாலமுரளி, வி.வி.சாமிநாதன், முக்குலத்தோர் … Read more