பெரியகுளம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து குளிக்க அனுமதி

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.

குட்டி யானை அஜீரண குறைபாடு மற்றும் லேசான நிமோனியா காரணமாக உயிரிழந்தது: புலிகள் காப்பக இயக்குநர் தகவல்

தருமபுரி: குட்டி யானை அஜீரண குறைபாடு மற்றும் லேசான நிமோனியா காரணமாக உயிரிழந்தது: புலிகள் காப்பக இயக்குநர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். நுரையீரலில் நிமோனியா தொற்றும் லேசாக ஏற்பட்டதாக பிரேத பரிசோதை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

வடமாநிலங்களில் ராம நவமி கொண்டாட்ட பேரணியில் வன்முறை: பல இடங்களில் வாகனங்கள், வீடுகள் தீவைத்து எரிப்பு

மும்பை: வடமாநிலங்களில் ராம நவமி கொண்டாட்ட யாத்திரைகளில் கலவரம் வெடித்ததால் பதற்றமான சூழல் நிலவுகின்றது. மராட்டிய மாநிலம் சத்திரபதி சம்பாஜி நகரில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது இரு மதத்தை சேர்ந்த ஏராளமானோர் சாலையில் நின்று கற்களை வீசி தாக்கிக்கொண்டதால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. மேற்கு வாங்க மாநிலம் ஹௌராவில் உள்ள ஷீபூர் பகுதியில் ராம நவமியை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் தீடிரென கலவரம் வெடித்தது. இரு தரப்பும் கல்வீசி தாக்கிக்கொண்டதில் ஏராளமானோர் காயமடைந்தனர். குஜராத் … Read more

கோடை வெயிலின் தாக்கம்; கொடைக்கானலில் குளிர் சீசனை அனுபவிக்க வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

கொடைக்கானல்: கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட, கொடைக்கானலின் குளிர் சீசனை அனுபவிக்க வெளிமாநில சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கோடை காலம் தொடங்கும் முன்பே நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட, கொடைக்கானலுக்கு வெளி மாநில சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த சில நாட்களாகவே அதிகரித்துள்ளது. சுற்றுலா இடங்களான பிரையன்ட் பூங்கா, ரோஸ் கார்டன், குணா குகை, மோயர் சதுக்கம், பசுமை பள்ளத்தாக்கு, தூண் பாறை, பைன் பாரஸ்ட், … Read more

மதுராந்தகம் அருகே செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன் கொள்ளை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. கடமலைபுத்தூர் பகுதியில் சரண்ராஜ் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

டெல்லி வாசிர்பூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

டெல்லி: டெல்லி வாசிர்பூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 25 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

உதகையில் கோடை சீசன் தொடங்கியதை அடுத்து முக்கிய சுற்றுலா தலங்களில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த தடை..!!

நீலகிரி: உதகையில் கோடை சீசன் தொடங்கியதை அடுத்து முக்கிய சுற்றுலா தலங்களில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உட்பட 7 முக்கிய சுற்றுலா தலங்களில் சினியா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உதகை வரும் சுற்றுலா பயணிகளின் சிரமத்தை தவிர்க்க சூட்டிங்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தோட்டக் கலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மணப்பாறை முறுக்கு, மானாமதுரை தேன், ஆத்தூர் வெற்றிலை உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

டெல்லி: மணப்பாறை முறுக்கு, மானாமதுரை தேன், ஆத்தூர் வெற்றிலை உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 11 பொருட்களுக்கு ஒன்றிய அரசின் புவிசார் குறியீடு பதிப்பகம் புவிசார் குறியீடு வழங்கியது.

ஆஸ்கர் ஆவண படம் புகழ் பொம்மன் – பெள்ளி தம்பதியினர் பராமரித்து வந்த 4 மாத குட்டி யானை உயிரிழந்தது: சோகத்தில் தெப்பக்காடு

தருமபுரி: தமுதுமலையைச் சேர்ந்த பொம்மன் – பெள்ளி தம்பதிக்கு, பராமரிப்பிற்காக வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட 4 மாத குட்டி யானை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் தருமபுரியில் தாயை பிரிந்த இந்த குட்டி யானை இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள கோடுபட்டி அருகே காட்டிலிருந்து தாயைப் பிரிந்து அந்தப் பகுதியில் உள்ள 30 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் தவறுதலாக விழுந்தது. இதனையறிந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். … Read more

பேராசிரியர் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசுக்கு கலாஷேத்ரா மாணவிகள் கடிதம்!!

சென்னை: பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசுக்கு திருவான்மியூர் கலாஷேத்ரா மாணவிகள் கடிதம் எழுதியுள்ளனர்.மாணவ-மாணவிகள் நேற்று மாலை முதல் உள்ளிருப்பு  போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து போலீஸ் விசாரிக்க உத்தரவிட்டதை பள்ளி நிர்வாகம் திரும்பப் பெற்றது ஏன்? நீண்ட நாட்களாக நடைபெற்ற சம்பவத்தை ஒன்றிய அரசு மூடி மறைப்பது ஏன் எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.