ஏப்ரல் 9ம் தேதி முதுமலைக்கு பிரதமர் மோடி வருகை

டெல்லி: ஏப்ரல் 9ம் தேதி கோவை மாவட்டம் முதுமலைக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். ஆஸ்கர் விருது வென்ற The Elephant Whisperers ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளியை சந்தித்து கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி என ஒன்றிய அமைச்சர் பூபேந்திர யாதவ் தகவல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே மரத்தின் மீது அரசுப்பேருந்து மோதி விபத்து: 20 பேர் காயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே மரத்தின் மீது அரசுப்பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையிலிருந்து அரசுப்பேருந்து 30 பயணிகளுடன் கீரனூர் நோக்கி சென்றுள்ளது. கீரனூர் அடுத்த ஒடுக்கம்பட்டி அருகே உள்ள மங்கதேவன்பட்டி என்ற இடத்தில் சென்றபோது சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது.   பேருந்து புளியமரத்தில் அதிவேகமாக மோதியதில் மரம் வேரோடு சாய்ந்தது. பேருந்தில் பயணித்த 20 பேர் காயமடைந்தனர். … Read more

அரசு நிலத்திற்கான ரூ.31.09கோடி குத்தகை பாக்கியை சத்யா ஸ்டுடியோவிடம் வசூலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசு நிலத்திற்கான ரூ.31.09கோடி குத்தகை பாக்கியை சத்யா ஸ்டுடியோவிடம் வசூலிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மீட்கப்பட்ட அரசு நிலத்தை வேலி அமைத்து பாதுகாக்கவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீட்கப்பட்ட நிலத்தில் அரசு திட்டமிட்டபடி இணைப்பு பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது. 1968ல் சத்யா ஸ்டுடியோவுக்கு குத்தகைக்கு தந்த 93,540 சதுரஅடி நிலத்தை 2008ல் அரசு எடுத்துக்கொண்டது. நிலத்தை மீண்டும் எடுத்த மயிலாப்பூர் வட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்ய கோரி சத்யா ஸ்டுடியோ வழக்கு தொடர்ந்தது.

இந்தூர் கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து உயிரிழந்த 13 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

ம.பி: இந்தூர் கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து உயிரிழந்த 13 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 13 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க -மத்திய பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்த மணக்குள விநாயகர் கோயில் யானையின் தந்தத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் ஒப்படைப்பு!

புதுச்சேரி: உயிரிழந்த மணக்குள விநாயகர் கோயில் யானையின் தந்தத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் வனத்துறை ஒப்படைத்தது. மணக்குள விநாயகர் கோயில் யானை லெட்சுமி கடந்த ஆண்டு நவ. 30-ம் தேதி உயிரிழந்த நிலையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் தந்தம் அகற்றப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

சென்னை கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை தந்த பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி சக மாணவ, மாணவிகள் போராட்டம்

சென்னை: சென்னை கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை தந்த பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி சக மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். பாலியல் புகார் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் நேரில் விசாரணை நடத்திய நிலையில் மாணவிகள் ஆவேசம் அடைந்தனர். பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்று கலாஷேத்ரா மாணவிகள் முழக்கம் எழுப்பியுள்ளனர்.

குமரியில் கடற்கரை முகப்புப்பகுதி மேம்பாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு விருது: அமைச்சர் கிஷன் ரெட்டி வழங்கினார்

டெல்லி: கன்னியாகுமரியில் கடற்கரை முகப்புப்பகுதி மேம்பாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.ஜி.கிஷன் ரெட்டி விருதினை வழங்கினார். புதுதில்லியில் ஒன்றிய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் கடந்த 28ம் தேதி அன்று  நடைபெற்ற ஒருங்கிணைப்பு மற்றும் பொது தனியார் துறை கூட்டாண்மை குறித்த தேசிய பயிலரங்கத்தில்,  மாண்புமிகு ஒன்றிய  சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.ஜி.கிஷன் ரெட்டி அவர்கள் சுவதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரியில் கடற்கரை முகப்புப்பகுதி மேம்பாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக … Read more

பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் காரணமாக விருதுநகர் ஆவின் நிர்வாக குழு கலைப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாக குழு கலைக்கப்படுவதாக பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாக குழு அமைக்கப்பட்டது. பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் காரணமாக விருதுநகர் ஆவின் நிர்வாகம் கலைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஆவின் நிறுவனதிற்கு தலைவர் துணை தலைவர் உள்ளிட்ட 17 உறுப்பினர்களை கொண்ட நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. 2020-21-ம் ஆண்டு 2 மேலாளர், பால் … Read more

அமெரிக்க பத்திரிகை நிருபர் ரஷ்யாவில் கைது

மாஸ்கோ: அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிகையின் நிருபர் இவான் ஜெர்ஷ்கோவிச் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி அந்நாட்டு பத்திரிகை நிருபரை ரஷ்ய உளவு அமைப்பு கைது செய்துள்ளது. யூரல் பிரதேசத்தில் உள்ள எகத்தெரின்பெர்க் நகரில் ஜெர்ஷ்கோவிச்சை கைது செய்து ரஷ்ய உளவுத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்ற 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்!

டெல்லி: யானைகள் பற்றிய குறும்படத்திற்காக ஆஸ்கர் வென்ற இயக்குநர், தயாரிப்பாளர் பிரதமர் மோடியை சந்தித்தனர். இயக்குநர் கார்த்திகி, தயாரிப்பாளர் குனீத் மோங்கா டெல்லியில் பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஹாலிவுட் திரைப்படங்களுக்கான 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் கடந்த மார்ச் 13ம் தேதி நகரில் நடைபெற்றுது. இதில் யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண குறுப்படம் ஆஸ்கர் விருதை வென்றது. முதுமலை … Read more