கர்ப்பமுற்ற பெண் ஊர் காவல் படை ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்படும்: அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரி: கர்ப்பமுற்ற பெண் ஊர் காவல் படை ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். 974 வீரர்களுடன் இரண்டாவது ஐ.ஆர்.பி.என். உருவாக்கப்படும். 200 கடலோர ஊர்க் காவல் படை வீரர்கள் பணியிடமும் இந்த ஆண்டுக்குள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

பொதுபாதையை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு: ஜாக்கிகள் வரவழைக்கப்பட்டு வீட்டை நகர்த்திய உரிமையாளர்

விருதுநகர்: பொது பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டதாக கூறி ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் வீட்டின் உரிமையாளர் வீட்டை இடிக்காமல் 14 அடிக்கு நகர்த்தி வைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் பனையூரை சேர்ந்தவர் லக்ஷ்மணன் இவரது மனைவி பஞ்சவர்ணம் 2001 முதல் 2006 வரை பிள்ளையார் நத்தம் ஊராட்சிமன்ற தலைவராக இருந்தார். அப்போது ஏற்பட்ட தேர்தல் பகை தான் நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அவர் … Read more

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா மீதான வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை

சென்னை: நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா மீதான வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விசாரணைக்கு தடை கோரி தனுஷ், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகைபிடிக்கும் காட்சிகளின்போது எச்சரிக்கை வாசகம் குறித்துவழக்கு தொடந்துள்ளனர். புகைபிடிக்கும் காட்சிகளின் போது எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறவில்லை என வழக்கு தொடந்துள்ளனர்.

விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 384 அத்தியாவசிய மருந்துகளின் விலை 11% உயர்வு: ஏப். 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

புதுடெல்லி: விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 384 அத்தியாவசிய  மருந்துகள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின்  விலைகள் 11 சதவீதக்கும் அதிகமாக உயர்த்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவ துறையில் மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில்,  தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள மருந்துகளின்  விலைகள் ஆண்டுதோறும் உயர்த்தப்படும். அந்த வகையில் 384 அத்தியாவசிய  மருந்துகள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின்  விலைகள் 11 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்த்தப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 1ம் … Read more

மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் 31.66 லட்சம் உண்டியல் காணிக்கை

மாங்காடு: மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் புதன்கிழமை அன்று பக்தர்கள் முன்னிலையில் உண்டியல் திறப்பு நடைபெற்றது. மேற்படி உண்டியல் திறப்பில் காணிக்கையாக ரூபாய் 31,66,363/-  (ரூபாய் முப்பத்து ஒன்று இலட்சத்து அறுபத்து ஆறாயிரத்து 3 முன்னூற்று அறுபத்து மூன்று மட்டும்) கிடைக்கப்பெற்றது. மேலும் பொன் இனங்கள் 320 கிராம் மற்றும் வெள்ளி இனங்கள் 450 கிராம் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது. மேற்படி உண்டியல் திறப்பில் திருக்கோயில் பரம்பரை தர்மகர்த்தா டாக்டர் மணலி ஆர். சீனிவாசன், திருக்கோயில் துணை … Read more

தமிழ்நாட்டில் மேலும் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை 34, செங்கல்பட்டு 13, சேலம் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது

நீதிமன்றம் தண்டனையை அறிவித்த பின்னர் ராகுலுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியது யார்? காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றிய அமைச்சர் கேள்வி

புதுடெல்லி: ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக பாஜக – காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், ஒன்றிய பாஜக அமைச்சர் அனுராக் தாக்கூர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘அவதூறு வழக்கில்  ராகுல் காந்தி குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்த பின்னர், காங்கிரஸ் கட்சியின் பிரபல  வழக்கறிஞர்கள் யாரும் அவருக்கு உதவாதது ஏன்? ேவண்டுமென்றே அவருக்கு உதவவில்லையா? அல்லது காங்கிரசுக்குள் ஏதேனும் சதி உள்ளதா? கடந்த சில வாரங்களுக்கு முன் வழக்கு … Read more

புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கோவை இளைஞர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

கோவை: பசுமையை பேணிக்காக்க வலியுறுத்தியும், புவி வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை இளைஞர் ஒருவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4,200 கி.மீ விழிப்புணர்வு சாதனை பயணத்தை மேற்கொண்டுள்ளார். கோவை அடுத்த தொண்டாமுத்தூர் கலிக்க நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவசூரியன் செந்தில்ராமன் (28). கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி ஆன இவர் குஜராத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அவர் கடந்த 3ம் தேதி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சாதனை விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டார். … Read more

கோட்டைப்பட்டினம் முன்னாள் ஜமாத் தலைவருக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை: கோட்டைப்பட்டினம் முன்னாள் ஜமாத் தலைவருக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்தது. மீன் ஏலம் தொடர்பான தகராறில் கோட்டைப்பட்டினம் முன்னாள் ஜமாத் தலைவருக்கு 2ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கீழமை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

290 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: 290 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 17 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது; 17 பேரில் 11 பேருக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டுள்ளது.