2-வது போட்டி: ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா? தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்

ராய்ப்பூர், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. டெஸ்ட் தொடரை இழந்ததால் விமர்சனத்திற்குள்ளான இந்திய அணியினர் ஒரு நாள் தொடரை … Read more

இங்கிலாந்தில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம் – மறுபரிசீலனை செய்ய அரசு வலியுறுத்தல்

லண்டன், இங்கிலாந்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அங்குள்ள டாக்டர்கள் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி கடந்த மாதம் வேலை நிறுத்த போராட்டத்தில் டாக்டர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்ட குழுவினருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. எனவே இந்த மாதம் மேலும் 5 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு முதல் அவர்கள் நடத்தும் 14-வது வேலை நிறுத்த … Read more

பணம் வராததால் ஆத்திரம்.. ஏ.டி.எம். எந்திரத்தை அடித்து நொறுக்கிய தொழிலாளி

துமகூரு, கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் துருவகெரே மெயின் ரோட்டில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. கடந்த மாதம்(நவம்பர்) 27-ந் தேதி இரவில் அங்கு பணம் எடுக்க ஒரு நபர் வந்தார். பின்னர் திடீரென்று அவர், ஏ.டி.எம். எந்திரம், அங்கிருந்த கண்ணாடி, பிற பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு சென்று விட்டார். மறுநாள் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்ற மக்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி துருவகெரே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் … Read more

முழு உடல் தகுதியை எட்டிய ஹர்திக் பாண்டியா

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்- ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் போது இடது காலில் காயம் அடைந்தார். அவர் அதன் பிறகு எந்த போட்டியிலும் ஆடவில்லை. ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மையத்தில் மேற்கொண்டு வந்தார். அவருடைய உடல் தகுதியை ஆய்வு செய்த கிரிக்கெட் வாரிய மருத்துவ கமிட்டியினர், முழு … Read more

இந்தோனேசியாவில் புயல், வெள்ள பாதிப்புக்கு 500 பேர் பலி; 500 பேர் மாயம்

ஜகார்த்தா, ஆசியாவின் ஒரு பகுதியாக உள்ள இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட பெருவெள்ளம் தொடர்ச்சியாக, 3 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே ஆகிய 3 மாகாணங்களில் 14 லட்சம் பேர் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளனர். அரிய நிகழ்வாக மலாக்கா ஜலசந்தியில் ஏற்பட்ட சென்யார் என்ற சூறாவளி புயலால் கனமழை பெய்தும், நிலச்சரிவு ஏற்பட்டும் மக்கள் பலர் பலியாகி உள்ளனர். இதுவரை 500 பேர் உயிரிழந்து உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் … Read more

அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: சபரிமலையில் 15 நாட்களில் ரூ.92 கோடி வருமானம்

சபரிமலை, சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. தொடக்கத்தில் தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவு மூலம் 20 ஆயிரம் பேரும் என மொத்தம் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். அந்த சமயத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்ததால் உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் வரை 13 லட்சம் பக்தர்கள் … Read more

23 வயதுக்குட்பட்டோர் மாநில கிரிக்கெட்: தமிழக அணி சாம்பியன்

மும்பை, 23 வயதுக்குட்பட்டோருக்கான மாநில ‘ஏ’ கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்தது. இதில் பங்கேற்ற 31 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. இதில் ‘டி’ பிரிவில் இடம் பிடித்த தமிழக அணி 5 வெற்றி, 1 தோல்வியுடன் முதலிடத்தை பிடித்து ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது. கால்இறுதியில் ஆந்திராவையும், அரைஇறுதியில் பெங்காலையும் வீழ்த்திய தமிழக அணி இறுதி ஆட்டத்தில் உத்தரபிரதேசத்தை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று சந்தித்தது. இதில் முதலில் பேட் … Read more

டிட்வா புயலால் பாதிப்பு: இலங்கைக்கு நிதி உதவி அறிவித்த சீனா

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட தமிழக – புதுவை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயலால் இலங்கையில், 2,66,114 குடும்பங்களைச் சேர்ந்த 9,68,304 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சீனா அவசரகால நிதியுதவியாக 10 லட்சம் டாலர் அளித்துள்ளது. கடுமையான இழப்பைச் சந்தித்துள்ள இலங்கைக்கு இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவை கொழும்பு நகரை சென்றடைந்தன. இலங்கையுடன் மீட்புப்பணிகளில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள … Read more

டி.கே.சிவக்குமார் வீட்டில் சித்தராமையாவுக்கு இன்று காலை விருந்து

பெங்களூரு, கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி எழுந்த நிலையில் இறுதியில் சித்தராமையா முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். முதல்-மந்திரி பதவியை 2 பேரும் ஆளுக்கு 2½ ஆண்டுகள் வீதம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அப்போது ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி சித்தராமையா ஆட்சி அதிகாரத்தில் 2½ ஆண்டுகள் நிறைவு செய்துவிட்டதால் முதல்-மந்திரி பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் … Read more

ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: இந்திய பெண்கள் அணி வெற்றி

சான்டியாகோ, 11-வது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) சிலி நாட்டின் தலைநகர் சான்டியாகோவில் நேற்று தொடங்கியது. வருகிற 13-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி, 2-வது இடத்தை பிடிக்கும் சிறந்த இரு அணி என மொத்தம் 8 அணிகள் காலிறுதி சுற்றை எட்டும். இதில் இந்திய அணி ‘சி’ பிரிவில் … Read more