மெலிஸ்சா புயலால் பாதித்த கியூபாவுக்கு நிவாரண உதவி: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன் டி.சி., கரீபியன் நாடுகளான ஹைதி, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளை கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் மெலிஸ்சா என பெயரிடப்பட்ட புயல் தாக்கிது. இதில், கியூபாவும் சிக்கியது. இதனால், 150 ஆண்டுகளில் இல்லாத வகையில் கியூபாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த சூறாவளி புயலால் தொடர் மழை, பலத்த காற்று ஆகியவற்றுடன் நிலச்சரிவுகளும், வெள்ளமும் ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் பேரிடர்களும் ஏற்பட்டன. வெள்ளம், நிலச்சரிவால் அந்நாடுகளின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்தியா தரப்பில் இருந்து கியூபாவுக்கு … Read more

தெருநாய் கடித்து குதறியதில் 5-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் நவநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு அலைனா லோகா (வயது 10) என்ற மகள் இருந்தாள். சிறுமி நவநகர் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் சிறுமி கடந்த மாதம் டிசம்பர் 27-ந் தேதி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக வந்த தெருநாய் ஒன்று சிறுமியை பார்த்ததும், அவள் … Read more

"ராகுல் டிராவிட்டைப்போல''…- கே.எல்.ராகுல் சதம் விளாசியது குறித்து முகமது கைப் பெருமிதம்

சென்னை, இன்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், கே.எல். ராகுல் (112*) சதம் விளாசி அசத்தினார். ரோகித் சர்மா 24 ரன்கள், விராட் கோலி 23 ரன்கள் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்கள் என சீனியர் வீரர்கள் அடுத்தடுத்து ஏமாற்றம் அளித்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபக்கம் கே.எல். ராகுல் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 92 பந்துகளைச் சந்தித்த அவர், 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 112 ரன்கள் … Read more

75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு

வாஷிங்டன், அமெரிக்காவில் பொது நலத்திட்டங்களை அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில், 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான குடியேற்ற விசா செயலாக்கத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் ஈரான், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், ரஷியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை தனது ‘எக்ஸ்‘ தள பக்க பதிவில் கூறியிருப்பதாவது:- “அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை அதிக அளவில் சாரும் குடியேற்றவர்களை கொண்ட 75 நாடுகளிலிருந்து வரும் விசா விண்ணப்பங்கள் … Read more

பொங்கல் பண்டிகை நமது பண்பாட்டின் உயரிய மதிப்புகளை பிரதிபலிக்கிறது: பிரதமர் மோடி

புதுடெல்லி, தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடைகள் உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு தை மகளை தமிழர்கள் வரவேற்று வருகின்றனர். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பொங்கல் திருநாளை முன்னிட்டு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மக்களை ஒன்றிணைத்து, நம் சமூகத்தில் அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்கும் பொங்கல் பண்டிகையைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், உழைப்பின் மரியாதையையும் நினைவூட்டும் இந்தத் திருநாள், … Read more

டேரில் மிட்செல் அதிரடி சதம்… இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி

ராஜ்கோட், இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் வதோதராவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி … Read more

அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் – டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, கிரீன்லாந்து உலகின் எட்டாவது பெரிய அரிதான கனிமங்களைக் கொண்டுள்ளது; அத்துடன் எண்ணெய் மற்றும் எரிவாயு, தங்கம், நிக்கல் மற்றும் கோபால்ட் போன்றவை அங்கு உள்ளன. சூப்பர் கண்டக்டர் சிப்புகள், மின்சார வாகனங்கள், பசுமை எரிசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் ராணுவத் தொழில்நுட்பங்கள் தயாரிப்பதற்கு இந்த அரிதான கனிமங்கள் மிக அவசியமானவை. வகைப்படுத்தப்பட்ட 34 அரிதான கனிமங்களில், சுமார் 23க்கும் மேற்பட்ட அரிய கனிம வளங்கள் கிரீன்லாந்தில் உள்ளன. தற்போது, இந்தத் தனிமங்களின் … Read more

கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

நீலகிரி, நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அத்திப்பாளி பகுதியை சேர்ந்தவர் சங்கரன். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 73). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது முகமூடி அணிந்து 2 பேர் விஜயலட்சுமியின் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவரின் செல்போனை கேட்டனர். அப்போது முகமூடி அணிந்து வந்த நீங்கள் யார்? என்று விஜயலட்சுமி கேட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள், மூதாட்டியிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்றனர். மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் விஜயலட்சுமியின் கழுத்தில் … Read more

மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணிக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயித்த உபி வாரியர்ஸ்

மும்பை, 5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக்கில் நவி மும்பையில் இன்று நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் உத்தரபிரதேச வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, உ.பி. அணி களமிறங்கி பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் உ.பி.வாரியர்ஸ் வீராங்கனைகள் … Read more

எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானியரை மணந்த சீக்கிய பெண் கைது

இஸ்லாமாபாத், குருநானக்கின் பிறந்தநாள் விழா தொடர்பான விழாக்களில் கலந்து கொள்வதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் இருந்து வாகா எல்லை வழியாக 2 ஆயிரம் சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு சென்றனர். அதில் 48 வயதான சரப்ஜீத் கவுர் என்ற பெண்ணும் சென்றிருந்தார். திருவிழா முடிந்து சீக்கியர்கள் அனைவரும் இந்தியா திரும்பிய நிலையில், சரப்ஜீத் கவுர் மட்டும் திரும்பி வரவில்லை. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானின் ஷேக்புரா மாவட்டத்தை சேர்ந்த நசீர் ஹுசைன் என்ற நபரை சரப்ஜீத் … Read more