கடவுளுக்கு எதிராக போர் செய்கிறீர்கள்; போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்

தெஹ்ரான், ஈரான் நாட்டின் தலைவராக அயோதுல்லா அலி காமேனி இருந்து வருகிறார். அந்நாட்டில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வருகிறது. அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை ஆகியவற்றால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. மாகாணங்கள், நகரங்கள் என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 13 நாட்களாக இந்த ஆர்ப்பாட்டம் நீடிக்கிறது. … Read more

திருப்பதி: பாதாம் பாலில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு

திருமலை, திருப்பதி நகரம் பழைய மாநகராட்சி அலுவலக பின்பக்க தெருவில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன். இவரின் மனைவி விஜயா (வயது 63). இவர், 2-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொர்க்க வாசல் தரிசனத்துக்காக வந்தார். இலவச தரிசன வரிசையில் சென்றபோது, உடன் வந்த ஒரு பெண் நைசாகப் பேச்சு கொடுத்தார். அந்தப் பெண்ணுடன் விஜயா பேசிக்கொண்டே இருந்தார். இருவரும், சகஜமாகப் பழகினர். 3-ந்தேதி காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் 2-ல் 20-வது கம்பார்ட்மெண்டில் 2 பேரும் ஓய்வெடுத்தனர். … Read more

ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

வதோதரா, நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கழுத்து வலியால் பாதியில் விலகிய கேப்டன் சுப்மன் கில் உடல் தகுதியை எட்டியதால் அணிக்கு திரும்பி இருக்கிறார். 20 … Read more

வெனிசுலா அதிபரை போல புதினை கடத்த திட்டமா? அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில்

வாஷிங்டன், உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடங்கி 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்து வரும் அமைதி ஒப்பந்தங்களை ஏதேதோ காரணங்கள் கூறி ரஷிய அதிபர் புதின் நிராகரித்து வருகிறார். இதனால் போர் நிறுத்தம் தொடர்பாக தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது. அண்மையில், வெனிசுலா நாட்டிற்குள் அமெரிக்கா ராணுவத்துறையினர் அதிரடியாக நுழைந்து அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை மனைவியுடன் … Read more

அருணாச்சல பிரதேசத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்

இட்டாநகர், அருணாச்சல பிரதேசத்தின் காமெங் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 5.34 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 27.53 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.85 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு … Read more

3வது டி20: இலங்கை – பாகிஸ்தான் நாளை மோதல்

கொழும்பு, டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் பிப்.7 முதல் மார்ச்.8 வரை இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன. இதற்கிடையில், பாகிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாட இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ளது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற இருந்தது. மழையால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், … Read more

துப்பாக்கி முனையில் பலாத்கார முயற்சி; சிறுமி, பாதிரியார் உள்பட 6 பேர் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் கொடூரம்

மிஸ்ஸிஸிப்பி, அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் ஜாக்சன் பகுதியில் இருந்து 150 மைல்கள் வடமேற்கே வெஸ்ட் பாயிண்ட் என்ற இடத்திற்கு மேற்கே செடார்பிளப் என்ற இடத்தில் வசித்து வரும் 24 வயது வாலிபர் ஒருவர் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் தந்தை, மாமா மற்றும் சகோதரரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, சகோதரரின் காரை திருடி கொண்டு, பிளேக் ரோடு பகுதியில் சென்றுள்ளார். அப்போது, அந்த பகுதியில் துப்பாக்கி முனையில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய … Read more

பாஜகவின் சித்தாந்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல; நிதின் கட்காரி பேச்சு

நாக்பூர், மராட்டியத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு வருகிற 15-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தனது சொந்த ஊரான நாக்பூரில் நடைபெற்ற பா.ஜனதா பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசியதாவது:- பாஜக சித்தாந்தம் சாதி, மதம் மற்றும் மொழி பாகுபாடின்றி அனைவருக்கும் பணியாற்றுவதையே கற்றுக்கொடுக்கிறது. தான் ஒரு தீவிர பா.ஜனதா தொண்டனாக இருந்தாலும், தனக்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்காதவர்கள் என அனைவருக்கும் பொதுவான மக்கள் பிரதிநிதியாகவே பணியாற்றுகிறேன். … Read more

மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணிக்கு 196 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை

நவிமும்பை, 5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை – டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜெமிமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு … Read more

டிரோன் மூலம் கண்காணித்ததாக குற்றச்சாட்டு – தென்கொரியாவை எச்சரித்த வடகொரியா

பியாங்யாங், வடகொரியா, தென்கொரியா இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதில் தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ள நிலையில், எதிர்ப்புகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. வடகொரியாவை மிரட்டும் வகையில், அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா அவ்வப்போது கூட்டு ராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தங்கள் வான் எல்லைக்குள் டிரோன்களை அனுப்பி முக்கிய ராணுவ தளங்களை கண்காணித்ததாக தென்கொரியா மீது வடகொரியா குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக வடகொரிய ராணுவம் … Read more