இளையோர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா

பெனோனி, இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்கா சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.இதில் நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் முகமது பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் … Read more

2 கச்சா எண்ணெய் கப்பல்களை பறிமுதல் செய்த அமெரிக்கா

வாஷிங்டன், வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த சில நாட்களுக்குமுன் தாக்குதல் நடத்தியது. மேலும், வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கா கைது செய்துள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, வெனிசுலாவில் செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் … Read more

மத்திய மந்திரி அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

புதுடெல்லி, சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. மீண்டும் இணைந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி மத்திய மந்திரி அமித்ஷா முன்னிலையில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முடிவானது. இதையடுத்து தமிழகத்தில் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய மந்திரி பியூஸ் கோயல் தலைமையிலான குழுவை பா.ஜனதா தேசிய தலைமை அமைத்தது. அந்த குழுவினர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தொகுதி பங்கீடு … Read more

முதல் டி20 ; இலங்கை அணிக்கு எதிராக பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

சென்னை, டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் பிப்.7 முதல் மார்ச்.8 வரை இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன. இதற்கிடையில், பாகிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாட இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. … Read more

வங்காளதேசம், பாகிஸ்தான் இடையே நேரடி விமான சேவை வரும் 29ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்

டாக்கா, வங்காளதேசத்தில் 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து அந்நாட்டில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்று ஆட்சி செய்து வருகிறது இதனிடையே, ஷேக் ஹசீனா பிரதமராக இருந்த போது வங்காளதேசம் , பாகிஸ்தான் இடையே நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது. 2012ம் ஆண்டு முதல் இருநாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவை செயல்படவில்லை. இந்நிலையில், வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான புதிய அரசு … Read more

ஜெர்மனி அதிபர் 2 நாள் பயணமாக இந்தியா வருகை

புதுடெல்லி, ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ், அடுத்த வாரம் 2 நாள் பயணமாக இந்தியா வருகை தர உள்ளார். வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த பயணத்தை அவர் மேற்கொள்வதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பயணம் ஜெர்மனி அதிபர் மெர்சின் முதல் பயணம் என்றும், அவரை 12-ந் தேதி ஆமதாபாத்தில் பிரதமர் மோடி வரவேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருக்கும் அவர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என … Read more

3 மாசம் தான்னு சொன்னாங்க…புற்றுநோயை வென்று வந்தது பற்றி யுவராஜ் சிங் உருக்கம்

சென்னை, புற்றுநோயை வென்று மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பிய அனுபவத்தைப் பற்றி யுவராஜ் சிங் உருக்கமாகப் பேசியுள்ளார். புற்றுநோய் காரணமாக 3 முதல் 6 மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பீர்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக அவர் கூறினார். அவர் பேசுகையில், “நீங்கள் 3 முதல் 6 மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பீர்கள் என்று உங்களிடம் சொல்லும் போது, நாம் இறக்கப் போகிறோம் என்ற எண்ணமே முதலில் மனதில் தோன்றும். என்னுடைய நுரையீரலும் இதயத்துக்கும் இடையே இருந்த கட்டி நரம்பு … Read more

மோடி என் மீது வருத்தத்தில் உள்ளார் – டிரம்ப்

வாஷிங்டன், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக இந்தியா மீது அதிக வரியை விதித்து கடுமையாக நடந்து கொண்டார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பாக தொடர்ந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் அவர், தற்போது மீண்டும் இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் மேலும் வரியை உயர்த்தப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்து உள்ளார். வாஷிங்டனில் இருந்து புளோரிடாவுக்கு செல்லும் … Read more

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. தரிசனம் செய்ய 5 முதல் 8 மணி நேரம் வரை காத்திருப்பு

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்​பன் கோவி​லில் வரும் 14-ம் தேதி மகர​விளக்கு பூஜை நடை​பெற உள்​ளது. இதற்​காக கடந்த 30-ம் தேதி மாலை கோவில் நடை திறக்​கப்​பட்​டது. உற்சவ நிகழ்ச்​சிக்கு இன்​னும் ஒரு வாரமே உள்​ள​தால் பக்தர்​கள் கூட்​டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடை திறந்து இதுவரை 42 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதன்படி சபரிமலை வழித்​தடங்​களில் இது​வரை இல்​லாத கூட்​டம் காணப்படுகிறது. எரி​மேலி​யில் இருந்து பெரு​வழிப்​பாதை, பம்​பை, கணபதி கோவில், மரக்​கூட்​டம், … Read more

இன்னும் 138 ரன்கள்…ஒருநாள் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா நிகழ்த்த இருக்கும் சாதனை

சென்னை, நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த அணியில், ஜடேஜா இடம் பிடித்திருக்கிறார். இந்நிலையில், இந்த நியூசிலாந்து தொடர் அவரது ஒருநாள் கெரியருக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது. இந்த ஒருநாள் தொடரில் விளையாட இருக்கும் ரவீந்திர ஜடேஜா மேலும் 138 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த இருக்கிறார். 138 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களையும், … Read more