தீபாவளி பட்டாசு: சென்னையில் காற்று மாசு கடும் உயர்வு…

சென்னை: தீபாவளியை கொண்டாடும் விதமாக சென்னையில் அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் சென்னையில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து உள்ளதாகவும், காறறு மாசு அதிகரித்துள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் காற்றுமாசு அதிகரித்து வருவதால், தலைநகர் டெல்லி உள்பட சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்க முழு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் சுமார் 2மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் … Read more

சில்லறை விற்பனை கடைகளில் விற்கப்படும் இனிப்பு பொருட்கள் மீது Best Before Date கட்டாயமில்லை… FSSAI புதிய அறிவிப்பு

இனிப்பு கடைகளில் விற்கப்படும் பொருட்கள் மீது ‘எந்த தேதி வரை பயன்படுத்தலாம்’ (Best Before Date) என்ற குறியீடு கட்டாயமில்லை என்று இந்திய உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தமாதம் 7ம் தேதி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது : இனிப்பு கடைகளில் சில்லறை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களின் கண்டெய்னர்கள் மீது Best Before Date என்று குறிப்பிடவேண்டும் என்று 25-9-2020 ல் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதன் சாத்தியக்கூறு மற்றும் அறிவியல் பூர்வமாக இதனை உறுதிப்படுத்த … Read more

ஆர் சுந்தர்ராஜனை கலாய்த்த அவரது மகன் அசோக் சுந்தரராஜன்…

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஆர் சுந்தர்ராஜனை அவரது மகன் அசோக் சுந்தரராஜன் கலாய்த்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. 1982 ம் ஆண்டு மோகன் நடிப்பில் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஓடி சாதனை படைத்த பயணங்கள் முடிவதில்லை படத்தில் துவங்கி பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியவர் ஆர். சுந்தர்ராஜன். வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, மெல்லத் திறந்தது கதவு, ராஜாதி ராஜா உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய இவர் 2000 ஆண்டு … Read more

பாஜக அரசின் தவறான நிர்வாகத்தால் ஒவ்வொரு இந்தியரின் தலையிலும் ரூ. 1 லட்சம் கடன்…

பாஜக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் ரூ.117 லட்சம் கோடி கடன் வாங்கி இந்தியாவை உலகின் மிகப்பெரிய கடன்கார நாடாக மாற்றியுள்ளது. ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ரூ. 400 மதிப்புள்ள கொரோனா தடுப்பூசியை இந்திய மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவசமாக வழங்கியதாக பாஜக ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இலவசம் என்ற பெயரில் பாஜக அரசு மக்களை ஏமாற்றி … Read more

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: நாளை முதல் தொடர்மழைக்கு வாய்ப்பு..!

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதால்,  நாளை முதல் தொடர்மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை உட்பட 8 மாவட்டங்களில்  மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் நாளை அதாவது நவம்பர் 14ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்றும் இன்னும் ஒரு … Read more

இரட்டை கருப்பை கொண்ட பெண்… இரண்டிலும் கர்ப்பம் தரித்திருக்கும் அபூர்வம்…

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது இரண்டு கருப்பையிலும் இரண்டு கருக்களை சுமந்து வருகிறார். டிசம்பர் மாத இறுதியில் குழந்தை பிறக்க உள்ள நிலையில் இதுகுறித்து மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். கெல்சி ஹாட்சர் என்ற பெண் கருவுற்றதை அடுத்து மருத்துவமனை சென்றுள்ளார் பரிசோதனையில் அவருக்கு இரண்டு கருப்பைகள் இருப்பதும் அவை இரண்டிலும் தனித்தனி கரு உருவாகி இருப்பதும் தெரியவந்தது. பிறப்பில் இருந்தே இரண்டு கருப்பைகள் கொண்ட கெல்சி ஹாட்சர் இதுபோல் இரண்டிலும் கருவுற்றிருப்பதை அறிந்து … Read more

திரையரங்கில் பட்டாசு வெடித்த சம்பவம்… ரசிகர்களுக்கு சல்மான் கான் வேண்டுகோள்…

சல்மான் கான் நடித்த டைகர் 3 திரைப்படம் நேற்று வெளியானது. இந்தப் படத்தில் ஷாருக்கான் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இதனால் ரசிகர்களிடையே டைகர் 3 திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் மலேகான் நகரில் உள்ள மோகன் திரையரங்கில் நேற்று படம் பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்து ரகளையில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. I’m hearing about … Read more

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது…

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. பக்தர்கள் அரகரா கோஷடத்தில் கந்த சஷ்டி விழா தொடங்கி உள்ளது. கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 18-ம் தேதி நடைபெறுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் 2வது வீடாக திகழ்வது திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவுக்கு உலகம் முழுவதும்  இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அழகனின் அருளாசி பெற்று செல்வார்கள். ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று … Read more

குடிகார மாநிலமாக மாறி வரும் தமிழ்நாடு: தீபாவளி மதுவிற்பனை எவ்வளவு தெரியுமா?

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் தமிழ்நாடு விரைவில் குடிகாரர்களைக் கொண்ட மாநிலமாக மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு மட்டும் ரூ.467 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. நடப்பாண்டு,  தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களில் தமிழ்நாட்டில் ரூ.467 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட கூடுதலாகும். நண்பகல் 12 மணி முதல் இரவு … Read more

தமிழ்நாட்டில் தீபாவளி பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பலி – 669 பேர் காயம் / 364 தீ விபத்துக்கள்!

சென்னை: தமிழ்நாட்டில் தீபாவி பட்டாசு வெடிப்பு காரணமாக பல இடங்கள் தீ விபத்து சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், ராணிப் பேட்டையில், பட்டாசு வெடித்த  4 வயது சிறுமி பரிதாபமாக பலியானார். மாநிலம் முழுவதும்  பட்டாசு வெடிப்பு காரணமாக 364 தீ விபத்துக்கள் நடைபெற்றுள்ள நிலையில், சிறுமி ஒருவர் பலியாகி உள்ளார். 669 பேர் காயமடைநதுள்ளனர். நாடு முழுவதும்  தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் … Read more