2030-க்குள் ‘உங்கள் கனவ நனவாக்க’ நான் பாடுபடுவேன்! இதுவே என் வாக்குறுதி! முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: 2030-க்குள் அவற்றை நனவாக்க நான் பாடுபடுவேன்! இதுவே என் வாக்குறுதி!  உங்கள் கனவ சொல்லுங்க திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். முதல்வர் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் மேலும் தொடர ஓரணியில் நின்று வெல்வோம் என திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்களின் தேவைகளைக் கேட்டு, அதனைத் திட்டங்களாகக் கொடுப்பதே மக்களாட்சியின் உண்மையான நோக்கம்; அதனை நிறைவேற்றுவதே #DravidianModel! “#உங்க_கனவ_சொல்லுங்க” என்று … Read more

சென்னையில் 10 மற்றும் 11ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்!

சென்னை: சென்னையில்  பொங்கலுக்கு முன்னதாக வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு  வெளியிட்டு உள்ளது. அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள  4,079 வாக்குச்சாவடிகளில் முகாம் நடக்கிறது இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 19ம்தேதி வெளியிடப்பட்டது. … Read more

‘ஜனநாயகன்’ விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு…

சென்னை: விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தணிக்கை வாரியத் தலைவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. விஜயின் ஜனநாயகன் படத்துக்கு U/A தணிக்கை சான்று வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு – ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் KVN தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா ஆணை பிறப்பித்தார். விசாரணையின்போது,  ஒரு உறுப்பினரின் புகாரை கொண்டு எப்படி ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக்கு … Read more

தொகுதி பங்கீடு- பிரதமர் வருகை: எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு…

சென்னை: அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தொகுதி பங்கீடு, பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை குறித்தும்  விவாதித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில், தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில், அதிமுகவில் இணைந்துள்ள பாஜக, மேலும் சில  கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு இன்று காலை  பாஜக மாநில தலைவர் … Read more

“உங்க கனவ சொல்லுங்க” என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்….

 சென்னை: “உங்க கனவ சொல்லுங்க” என்ற திட்டத்தினை  செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்‘. தமிழ்நாடு அறிவித்துள்ள புதிய திட்டமான  “உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தினை திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   இன்று காலை (டிசம்பர் 9) தொடங்கி வைத்தார். திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை, தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்கள் வரை பயன்பெறும் வகையில் பல்வேறு சமூக நலத் திட்டங்களை … Read more

திமுக அமைச்சர் நேரு மீதான ரூ.1,020 கோடி ஊழல் புகார்: விசாரணை தொடங்கிவிட்டதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை தகவல்..

சென்னை:  திமுக அமைச்சர் நேரு மீதான  ரூ.1,020 கோடி பணி நியமன ஊழல்  மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஊழல்  போன்ற புகார்  தொடர்பாக விசாரணை தொடங்கி விட்டதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை   தெரிவித்து உள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், அதிகாரிகள் விசாரணை தொடங்கி விட்டதாக தெரிவித்துள்ளனர். திமுக அரசில்,  தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக உள்ளார் கே.என்.நேரு . இவர்  லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கண்டு அரசு பணி நியனமம் ஆர்டர் … Read more

போகி பண்டிகை: புகையில்லாமல் கொண்டாட மாசுக் கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்!

சென்னை: போகி பண்டிகையை புகையில்லாமல் கொண்டாட பொதுமக்களுக்கு  மாசுக் கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. போகி பண்டிகை என்பது பொங்கல் திருநாளின் முதல் நாள் (மார்கழி மாதக் கடைசி நாள்), பழையன கழித்து புதியன புகுவதைக் குறிக்கும் ஒரு விழா; இந்த நாளில் வீட்டில் உள்ள பழைய, தேவையில்லாத பொருட்களை எரித்து, வீட்டை சுத்தம் செய்து, மாக்கோலமிட்டு, மங்களகரமாக அலங்கரித்து, இந்திரனுக்காகவும், செழுமைக்காகவும் கொண்டாடப்படு கிறது, இது பொங்கலுக்கான தொடக்க விழாவாகும்.  இந்த பண்டிகையன்று பொதுமக்கள் தங்களது … Read more

திமுக கூட்டணியில் சேருகிறது ராமதாஸ் தலைமையிலான பாமக….! வேட்பு மனு வழங்கும் நிகழ்ச்சியில் சூசகம்…

சென்னை:  டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமகவில் வேட்பு மனு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ்,  மு.க.ஸ்டாலின் ஆட்சி நன்றாகத் தான் இருக்கிறது,  அரசியலில் எதுவும் நடக்கலாம் என கூறினார். இதன் மூலம்   பாமக நிறுவனர் ராமதாஸ்  திமுக கூட்டணியில் சேருவது உறுதியாகி உள்ளது. பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக பாமக இரு பிரிவு பிரிந்து கிடக்கிறது. பாமக தலைவர் அன்புமணி தலைமையிலான பாமகவே அதிகாரப்பூர்வமானது என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனால், அன்புமணி, … Read more

2026 சட்டமன்ற தேர்தல்: தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு அமைத்தார் தவெக தலைவர் விஜய்…

சென்னை: தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,  தமிழக வெற்றிக்கழகம் சார்பில்,   தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழுவை அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்து உள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. மக்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியில், திமுக,  அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் தீவிரமாக செயலாற்றி வரும் நிலையில், தவெகவும் தேர்தல் அறிக்கை தயாரிகக 12 … Read more

சென்னை எழும்பூர் பகுதியில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்..

சென்னை:  சென்னைஎழும்பூர் பகுதியில்  இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை எழும்பூர் பகுதியில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாவும், இந்த  போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு சென்னை போக்குவரத்து போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- சென்னை பெருநகர போக்குவரத்து காவல், எழும்பூர் போக்குவரத்து காவல் நிலையத்திற்குட்பட்ட பாந்தியன் ரவுண்டானா பகுதியானது 5 முனை சந்திப்பு மற்றும் இரண்டு ரவுண்டானாக்கள் உள்ளதால், போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த தற்காலிகமாக இன்று முதல் … Read more