உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க AICTE உத்தரவு

சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசின் ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம்,உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அண்டை நாடுகள் வழியாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.அந்த வகையில்,இதுவரை 17,400 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். எனினும்,உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.அந்த வகையில்,வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்திற்கு … Read more

தமிழக சட்டசபையில் இன்று பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையில், இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டடங்கள், பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது. துறை அமைச்சர் வேலு, விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னை இன்று பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகள், டீசல் விலை 100 ரூபாய் 94 காசுகள் என்ற விலையிலும் விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி தொடர்ந்து வருகிறது. இதன்படி, சென்னையில் இன்றைய பெட்ரோல் … Read more

11/04/2022: தமிழ்நாட்டில் இன்று 28 பேருக்கு கொரோனா பாதிப்பு, 27 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: தமிழகத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதே வேளையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  நேற்று 30 பேருக்கு பாதிப்பு உறுதியான  நிலையில் இன்று 28ஆக குறைந்துள்ளது. 28 மாவட்டங்களில் பாதிப்பு ஏதும் இல்லாத நிலை உருவாகி உள்ளது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று 28 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து … Read more

தமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளியுடன் 4 நாட்கள் தொடர் விடுமுறை! பள்ளிக்கல்வி துறை

சென்னை:  தமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளியுடன் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 16ந்தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருந்த நிலையில், அன்றைய தினமும்  அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதுபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வரும் 14 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும் 15 ஆம் தேதி புனித வெள்ளி … Read more

“இஸ்லாமியர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்” : கர்நாடகாவில் வகுப்புவாத பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர எடியூரப்பா அழைப்பு

“முஸ்லிம்களை அமைதியாகவும் மரியாதையாகவும் வாழ விடுங்கள்” என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இந்துத்துவா அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் பழ வண்டிகளை சேதப்படுத்தியது தொடர்பாக ஸ்ரீ ராம சேனா அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், எடியூரப்பா இவ்வாறு கூறியுள்ளார். ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள இந்து கோயில்களில் இஸ்லாமியர்கள் கடை வைக்க அனுமதிக்கக் கூடாது, முஸ்லீம் ஓட்டுனர்களின் டாக்ஸி ஆட்டோக்களில் ஏறக்கூடாது, ஹலால் இறைச்சியைப் … Read more

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு புதிய செல்போன் எண்கள்! மேயர் பிரியா அசத்தல்

சென்னை: பொதுமக்கள் எளிதில் கவுன்சிலர்களை தொடர்புகொள்ளும் வகையில், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு புதிய போன் எண்கள் வழங்கி, அதை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும்படி வெளியிட்டுள்ளார் மேயர் பிரியா ராஜன். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. இதையடுத்து சென்னை மாநகராட்சி மேயராக பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தி வரும் மேயர், சென்னையின் 200 வார்டு … Read more

உக்ரைன் தொடர்பாக பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை..!

டெல்லி: உக்ரைன் தொடர்பாக பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலோசனையின் போது, இருதரப்பு உறவு, ரஷ்யா – உக்ரைன் விவகாரம், இந்தோ பசிபிக் பிராந்திய பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, அமெரிக்காவும், இந்தியாவும் உலகின் மிகச்சிறந்த … Read more

அனைத்து சர்வதேச மன்றங்களிலும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவோம்! பாகிஸ்தான் பிரதமராக தேர்வாகி உள்ள ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: அனைத்து சர்வதேச மன்றங்களிலும் காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் எழுப்புவோம் என புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள  ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான்கான் அரசு வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த நிலையில், பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரும், முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப்  அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதேபோல், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் … Read more