குவைத் திணறல்…. வெளிநாட்டு தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை

கொரோனா பரவல் துவங்கியதில் இருந்து இதுவரை லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் குவைத்தை விட்டு நிரந்தரமாக வெளியேறி உள்ளனர். தொற்று பரவல் நேரத்தில் நிலவிய கட்டுப்பாடுகளால் பலர் தங்கள் விசாவை புதுப்பிக்க முடியாமல் சொந்த நாட்டிலேயே தங்கவும் நேர்ந்தது. இந்நிலையில் தற்போது திறமை வாய்ந்த தொழிலாளர்களுக்கு அங்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட திறன் அடிப்படையிலான தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அந்நாட்டு நாளிதழ் ஒன்று முக்கிய செய்தியாக பதிவிட்டுள்ளது. குறிப்பாக ரமதான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில், அரபிகள் … Read more

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யுஸ்வேந்திர சாஹல் விவகாரம் தொடர்பாக ஜேம்ஸ் பிராங்கிளினிடம் விசாரிக்க துர்ஹாம் அணி முடிவு…

அஸ்வின் ரவிச்சந்திரனுடன் “கம்பாக் டேல்ஸ்” என்ற தலைப்பில் கருண் நாயர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்ட வீடியோ ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது. யுஸ்வேந்திர சாஹல் இதில் பேசிய சாஹல் 2011 ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தான் விளையாடிய போது தன்னை ஜேம்ஸ் பிராங்கிளின் மற்றும் ஆண்ட்ரூ சைமெண்ட்ஸ் இருவரும் சேர்ந்து தன்னை உடல் ரீதியாக கேலி செய்ததாகவும், பின்னர் தன்னை கை … Read more

பாகிஸ்தான் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தம்பி ‘ஷெபாஸ் ஷெரீப்’ தேர்வு…

இஸ்லாமாபாத்: நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்த் நிலையில், பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக, எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் இன்று  தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியாவார்.  இதற்கு எதிர்ப்பதெரிவித்து, அவையில் இருந்து இம்ரான்கான் தனது ஆதரவாளர்களுடன் வெளிநடப்பு செய்தார். பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக,  பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அவரது அரசை கவிழ்க்க முயற்சி செய்தன. இதற்கு ஆதரவாக இம்ரான்கான் ஆதரவு கட்சிகள் இரண்டு, … Read more

ஊட்டி மலர் கண்காட்சி மே 20ந்தேதி தொடங்குகிறது…

நீலகிரி: ஊட்டி மலர் கண்காட்சி மே 20ந்தேதி 24ந்தேதி வரையிலான 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு வருடங்களாக தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சியை காண லட்சக்கணக்கானோர் ஊட்டியில் குவிவார்கள் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் தொடங்கி உள்ள நிலையில், விடுமுறை நாட்களில் மக்கள் கோடை வாசஸ்தலங்களை நாடிச் செல்வது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான சூழலை … Read more

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 53 லட்சமாக அதிகரிப்பு! சட்டப்பேரவையில் அன்பில் மகேஷ் தகவல்…

சென்னை: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 53 லட்சமாக அதிகரித்துள்ளதாக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று பள்ளி, கல்லூரி தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பதில் அளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,  , அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து, 53 லட்சமாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், அரசு தொடக்கப்பள்ளிகளில் ரூ.150 கோடி செலவில், 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என்றும்,  … Read more

கொரோனா விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான 4 வழக்குகள் ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள், திமுக தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீது ஏராளமான வழக்குகள் போடப்பட்டிருந்தன. அந்த வழக்குகள் அனைத்தும், திமுக பதவி ஏற்றதும்,  வாபஸ் பெறப்பட்டன. இதில் பல ஊழல், முறைகேடுகள் தொடர்பான வழக்குகளும் ரத்து செய்யப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கும் ரத்து செய்யப்பட்டது. செந்தில்பாலாஜி மீது ஏற்கனவே … Read more

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு

மனித குலத்தில் கொடூரமான முறையில் நடைபெற்று வரலாற்றில் மறைக்கப்பட்ட இரண்டு உண்மை சம்பவங்களை மையப்படுத்தி, இரண்டு திரைப்படங்களை தயாரிப்பதற்காக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் நிறுவனமும், ஐ அம் புத்தா புரொடக்சன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனமும் ஒன்றிணைகின்றன. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தினை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஐ அம் புத்தா புரொடக்ஷன்ஸ் எனும் இரண்டு நிறுவனங்களும் இணைந்து வழங்கின. இந்தப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மேலும் இரண்டு … Read more

சட்டவிரோதமாக மணல் கடத்தல்: ஏற்கனவே 5 பாதிரியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் முன்னாள் கனிமவளத் துறை அதிகாரியும் கைது…

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு, கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் என்ற பெயரில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் செய்த வழக்கில், ஏற்கனவே  கேரளாவைச் சேர்ந்த பிஷப் உள்பட 5 பாதிரியார்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு உதவிய முன்னாள் கனிமவளத் துறை உதவி இயக்குனர் சஃபியா கைது செய்யப்பட்டு உள்ளார். திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே, சட்டவிரோதமாக மணல் அள்ளிய வழக்கில் கேரளாவைச் சேர்ந்த பிஷப் மற்றும் 5 பாதிரியார்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில், தற்போத  … Read more

நவம்பர் 15 – 22ந்தேதிவரை பள்ளிச் சிறார்கள் பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரம்! சட்டப்பேரவையில் தகவல்..

சென்னை: பள்ளிச் சிறார்கள் பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரமாக ஆண்டுதோறும் நவம்பர் 15 – 22ம் நாள் வரை கடைபிடிக்கப்படும் என பள்ளிக் கல்விதுறை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரி தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. முன்னதாக பள்ளிக் கல்வித் துறை கொள்கை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டது அதில் கூறப்பட்டுள்ளதாவது, பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து சேவைகளும் கணினி மயமாக்க நடவடிக்கை. போக்சோ … Read more

சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும்! நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு…

சென்னை: சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுகவை கைப்பற்றி விடலாம் என்ற கனவுடன் களத்தில் இறங்கிய சசிகலாவுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் ஆக பதவி ஏற்றுக் கொண்ட சசிகலாவை, எடப்பாடி, ஒபிஎஸ் தலைமையிலான அதிமுக நீக்கி நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து சசிகலா தரப்பில் தொடரப்பட்ட வழக்கும், அதை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும்,  அதிமுக … Read more