மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட்! அமைச்சர் அறிவிப்பு..!

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு புகழ்மிக்க உலக செஸ் போட்டியான, செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அதற்கான தேதிகள் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை அருகே உள்ள கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்  போட்டிகள் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். 2ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் ‘செஸ் ஒலிம்பியாட்’  போட்டி நடப்பாண்டில் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. அதற்கான ஒப்பந்தத்தை தமிழகஅரசு பெற்றுள்ளது. உலக அளவில் … Read more

சொத்து வரி செலுத்தாக சென்னை ஆல்பர்ட் தியேட்டர் ‘ஜப்தி’! சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை: சொத்து வரி செலுத்தாக பிரபல தியேட்டரான ஆல்பர்ட் தியேட்டருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்து, ஜப்தி நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு சொத்து வரியை வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள வரிகளையும் வசூலிக்க அறிவுறுத்தி உள்ளது. அதன்பேரில் சென்னையிலும் சொத்து வரியை வசூலிக்க ஆங்காங்கே முகாம்களை சென்னை மாநகராட்சி அமைத்து வரி வசூலை தீவிரப்படுத்தி உள்ளது. 2021-ம் ஆண்டுக்கான 2வது தவணைக்கான வரி கட்டுவதற்கு இன்றே (மார்ச் 31ந்தேதி) கடைசி … Read more

வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் ரத்து சரியே! உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் தமிழகஅரசின் சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியே என உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகமான வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் மாநில இடஒதுக்கீடு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரண … Read more

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்றம் அருகே ஆர்ப்பாட்டம்!

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இன்று காலை அக்கட்சியின் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த 10 நாட்களாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் 3 கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து வரும் … Read more

எரிபொருட்கள் விலை உயர்வை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்!

சென்னை: எரிபொருட்கள் விலை உயர்வை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. நாடு முழுவதும் மார்ச் 22 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.தொடர்ந்து இன்றும் 10வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல் விலை.. டீசல் விலையும் உயர்வு இன்று 76 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  மத்திய பாஜக. அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை கடுமையாக … Read more

சென்னை இரண்டாம் விமான நிலையம் : இரு இடங்கள் தேர்வு

போபால் சென்னை இரண்டாம் விமான நிலையம் அமைக்க இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்று போபால் சென்னை – போபால் நேரடி விமான சேவை தொடங்கப்பட்டது.  இதை மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதித்ராதிய சிந்தியா, இணை அமைச்சர் விகே சிங் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  தொடக்க விழாவில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், மத்திய இணை அமைச்சர் எல் முருகன், சென்னை வடக்கு மக்களவை உறுப்பினர் வீராசாமி கலாநிதி … Read more

ஜூலை 17 ஆம் தேதி நீட் தேர்வு : தேசிய தேர்வு முகமை

டில்லி மருத்துவ இளநிலை பட்டப்படிப்புக்களுக்கான நீட் தேர்வு ஜூலை 17 நடைபெற உள்ளது. இந்தியாவில் மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  இந்த தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளனர்.   பல்வேறு தரப்பினருக்கும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி மாநில சட்டசபையில் ஒரு தீர்மானம் இயற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.   தீர்மானம் அனுப்பிப் பல … Read more

போக்குவரத்து துறையைத்தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை: திருச்சி துணைஆட்சியர் ரூ.40லட்சம் லஞ்சப்பணத்துடன் கைது….

சென்னை:  திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் துணை ஆட்சியராக பணிபுரியும் சரவணக்குமார் ரூ.40 லட்சம் லஞ்சப்பணத்துடன் சென்னை சென்றபோது விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்து துறை துணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.  இந்த நிலையில், இன்று திருச்சி துணை ஆட்சியர் ரூ.40 லட்சம் லஞ்சப்பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியராக … Read more

சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவராக திமுக போட்டி வேட்பாளர் தேர்வு! சான்றிதழை வழங்க நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: கோவை அடுத்த பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவராக திமுக போட்டி வேட்பாளர் வனிதா என்பவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு தேர்வு சான்றிதழை உடனே வழங்கு தேர்தல் அலுவலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்ற நிலையில், மார்ச் 4ந்தேதி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைமை பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றன. இதில் பல இடங்களில் குளறுபடிகள் நடைபெற்றன. திமுக வேட்பாளரை எதிர்த்தும், … Read more

நீதிபதிகளுக்கு மிரட்டல்: தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த 9பேரின் ஜாமின் மனுக்களின் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு…

மதுரை: கர்நாடகா உயர்நீதிமன்றம் வழங்கிய ஹிஜாப்  தீர்ப்பை எதிர்த்து நடத்திய தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது சர்ச்சையான நிலையில், 9 பேரின் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரண முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் வழக்கில் அளித்த தீர்ப்புக்கு எதிர்த்து இஸ்லாமிய அமைப்பான தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர். பல இடங்களில் … Read more