டெல்லியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மற்றும் தலைவர்களுடன் சந்திப்பு – ஆடியோ

டெல்லியில் திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்காக டெல்லியில் முகாமிட்டு உள்ள  முகாமி தமிழக முதல்வர் ஸ்டலின், அங்கு சோனியா காந்தி மற்றும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து, தமிழக தேவைகள் குறித்தும் மனு கொடுத்தார். அத்துடன் கட்சி பேதமின்றி அனைத்து கட்சித் தலைவர்களையும்  திமுக அலுவலகம் திறப்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். https://patrikai.com/wp-content/uploads/2022/04/Pari-Audio-2022-04-01-at-12.01.52-PM.ogg

மது அருந்துபவர்கள் மகா பாவிகள்! பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

பாட்னா: மது அருந்துபவர்கள் மகா பாவிகள், மகாத்மா காந்தி சொன்னதை கேட்காதவன் மகா பாவி அவர்கள் இந்தியர்களே அல்ல,  பீகார் முதல்வர் நிதிஷ் குமார் காட்டமாக விமர்சித்துள்ளார். பீகார் மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு மதுவிலக்கு மற்றும் கலால் சட்டம்,  அமல்படுத்தப்பட்டது. இருந்தாலும் அங்கு மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் உள்ளது. திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெறுவதும், அதை குடிக்கும் பலர் கைது செய்யப்படு வதும் வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், பீகார் சட்டப்பேரவையில்  நேற்றுமதுவிலக்கு மற்றும் … Read more

அரசு விரைவு பேருந்தில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி! தமிழகஅரசு

சென்னை: தொலைதூரம் பயணம் செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில், வெளிமாவட்ட பயணங்களுக்கு இருக்கை வசதி, படுக்கை வசதி மற்றும் குளர்சாதன வசதிகளுடன் கூடிய டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், ஏசி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில்  படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகளில் பெண்களுக்கு தனிப் படுக்கை வசதி ஒதுக்கி தமிழகஅரசு போக்குவரத்து … Read more

போலீசாரை மிரட்டிய திமுக கவுன்சிலர் கணவர் சஸ்பெண்டு! கைது செய்யப்படுவாரா?

சென்னை: போலீசாரை கேவலமாக திட்டி மிரட்டிய திமுக கவுன்சிலர் கணவர் கட்சியில் இருந்த சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளதாக திமுக தலைமை அறிவித்து உள்ளது. இவர் எப்போது  கைது செய்யப்படுவார், காவல்துறை திமுகவினரை கைது செய்யாதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் ராயபுரம் தொகுதிக்குட்பட்ட 51 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் நிரஞ்ஞனா, இவரது கணவர் ஜெகதீசன். இவர் சென்னை வடக்கு மாவட்டத்தின் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் … Read more

ஹவுத்தி தீவிரவாதிகளுக்கு ஆதரவாக நிதி… 2 இந்தியர்கள் உள்ளிட்ட 25 பெயர்களை வெளியிட்டது சவுதி அரேபியா..

ஏமன் அரசுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பவர்களின் பட்டியலை சவுதி அரேபியா வெளியிட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சவுதி வெளியிட்டுள்ள 25 பெயர்களை கொண்ட பட்டியலில் சிரஞ்ஜீவ் குமார் சிங் என்ற இந்தியர் முதல் இடத்தில் உள்ளார். பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 25 பெயரில் 10 தனி நபர்கள் மற்றும் 15 நிறுவனங்கள் அடங்கும், இதில் … Read more

வார ராசிபலன்: 1.4.2022 முதல் 7.4.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் ஆஃபீஸருங்களோட ஆதரவும், சலுகைகளும், ஹெல்ப்பும், சப்போர்ட்டும் கெடைக்குங்க. உங்களோட சுய முயற்சியால வீட்ல மகிழ்ச்சி பொங்கும். பழைய முயற்சிகளால புதிய சக்ஸஸ் வரும். உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். அதிக லாபத்தோட புதிய பணி/ பிசினஸ் வாய்ப்பு வந்து சேரலாம். நண்பர்களுக்கு உதவி செய்து நெகிழ்ச்சியளிப்பீங்க. பெண்களால் நன்மையடைவீங்க. இந்த வாரம் புதன்கிழமை நல்ல நியூஸ் ஒண்ணு வரும். பரபரப்புகள் குறைந்து நிம்மதி அதிகரிக்கும். உற்சாகமான.. ஹாப்பியான .. குதூகலமான வாரம். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. … Read more

காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு ஏப்ரல் 15 வரை நீடிப்பு

புதுடெல்லி: சிறப்பு உறுப்பினர் இயக்கத்தை நீடிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா ஒப்புதல் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் நாடு தழுவிய உறுப்பினர் சேர்க்கைக்கான மார்ச் 31 காலக்கெடுவை ஏப்ரல் 15 வரை நீட்டித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கிய காங்கிரஸின் உறுப்பினர் சேர்க்கை ஆன்லைன் மற்றும் உடல் பயன்முறையில் மார்ச் 31 வரை தொடர இருந்தது. உறுப்பினர்களின் எண்ணிக்கை 1.2 கோடியைத் தாண்டியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. … Read more

காசநோய்க்கு எதிரான தடுப்பூசியை 2024-ல் இந்தியா பெறும்: விஞ்ஞானிகள் தகவல்

புதுடெல்லி: காசநோய்க்கு எதிரான தடுப்பூசியை இந்தியா 2024 இல் பெறலாம் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். புனேவின் தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (NARI) விஞ்ஞானி டாக்டர் சுசித் காம்ப்ளே தெரிவிக்கையில், “இந்தியாவில் காசநோய் பரவும் சுமையைக் குறைக்கும் ஒரு நல்ல தடுப்பூசியை இந்தியா நிச்சயமாகப் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தனர். ஐசிஎம்ஆர் இந்தியாவில் 18 துணை தளங்களில் 3-ம் கட்ட இரட்டை குருட்டு மருந்துப்போலி கட்டுப்பாட்டு சோதனைகளை நடத்தத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவில், ICMRNARI … Read more

பிரதமர் உடனான சந்திப்பு மன நிறைவு அளிக்கிறது – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பிரதமர் உடனான சந்திப்பு மன நிறைவு அளிக்கிறது என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில், திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர்கள் என பலரை சந்தித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதலமைச்சராக பதவியேற்ற பின் எனது மூன்றாவது டெல்லி பயணம் இது. இன்று பிற்பகல் … Read more

செங்கல்பட்டு மனைகளுக்கு இனி சி.எம்.டி.ஏ அனுமதி வாங்க வேண்டும் – மாவட்ட ஆட்சியர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மனைகளுக்கு இனி சி.எம்.டி.ஏ அனுமதி வாங்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனைத்து ஊராட்சி தலைவர்கள், வட்டார வளர்சி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், வீடு மட்டும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரால் மான்ய கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் எல்லையை செங்கல்பட்டு மாவட்டம் முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.