‘லைட்டா சாப்பிடுங்க’ அவுன்ஸ் கணக்கு இனி இல்லை… மதுபான அளவு கட்டுப்பாட்டை நீக்கி டிரம்ப் அரசு புதிய வழிகாட்டுதல்

அமெரிக்காவில் இதுவரை நடைமுறையில் இருந்த “ஆண்களுக்கு தினமும் 2 டிரிங்க்ஸ் (3 அவுன்ஸ் மது பானம்), பெண்களுக்கு 1 டிரிங்க்ஸ்” என்ற ஆலோசனையை டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு கைவிட்டுள்ளது. 2025–2030 காலத்துக்கான புதிய உணவு மற்றும் ஊட்டச்சத்து வழிகாட்டுதல்களில், மதுபானம் குறித்து தெளிவான அளவு குறிப்பிடப்படாமல், “மதுபானம் குறைவாக குடித்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்” என்ற பொதுவான அறிவுரை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் மருத்துவ ஆலோசனைகள், பள்ளி மதிய உணவுத் திட்டங்கள் உள்ளிட்ட பல … Read more

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை மையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக  இந்திய வானிலை மையம்  தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  இலங்கை பொத்துவில்லுக்கு 200 கி.மீ. தொலைவில் நிலவுகிறது. இந்த காற்றழுத்தம் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக,  தமிழ்நாட்டில்  இன்றும், நாளை (9, 10)யும் டெல்டா மாவட்டம் உள்பட கடற்கரை மாவட்டங்களில்,  12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு … Read more

பொங்கல் ஜல்லிக்கட்டு: மதுரை போட்டிகளில் பங்கேற்க 12000 காளைகள், 5,000 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு…

மதுரை: பொங்கலையொட்டி, மதுரையில்  நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 12,000 காளைகள், 5,000 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ்பெற்ற  அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 16ம் தேதியும் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க  12,000 காளைகள், 5,000 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் 12,000க்கும் மேற்பட்ட … Read more

ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை வழங்கி தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை:  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று பொங்கல் பரிசுத்தொகை, தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.  அத்துடன் விலை யில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.  ஆலந்தூர் நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் முதல்வர் பயனர்களுக்கு  தெராக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி  திட்டத்தை தொடங்கிவைத்தார் இதன்மூலம்  சென்னையில் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 ரொக்கடத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு  கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பாக  ரூ.3ஆயிரம் ரொக்கப் … Read more

சென்னை வர்த்தக மையத்தில் UmagineTN- 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: சென்னை நத்தம்பாக்கத்தில் உள்ள  வர்த்தக மையத்தில் umagine TN- 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  இந்த மாநாட்டில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. சென்னை நத்தம்பாக்கத்தில்  உள்ள வர்த்தக மையத்தில்,  தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை  சார்பில், umagine TN- 2026 தகவல் தொழில்நுட்ப  2 நாள் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநாட்டை … Read more

ஜனநாயகன் ரிலீஸ் எப்போது ? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பால் விநியோகிஸ்தர்கள் குழப்பம்… வழக்கு முழு விவரம்…

விஜய் நடித்துள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படும் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’  ஜனவரி 9, 2026, வெள்ளிக்கிழமை அன்று வெளியாகாது என்றும், தங்களின் புதிய வெளியீட்டுத் திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நேற்றிரவு அறிவித்தது. தயாரிப்பு நிறுவனம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கில் ஜனவரி 9 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் தேதி குறிப்பிடாமல் வெளியீட்டை ஒத்திவைத்திருப்பதால் விநியோகிஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனி … Read more

தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை! அமித்ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி விளக்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை – ஒபிஎஸ், சசிகலாவுக்கு இடமில்லை டெல்லியில் உள்துறை அமைச்சர்  அமித்ஷாவை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். உள்துறை அமைச்சர் இரண்டு தமிழ்நாட்டில் முகாமிட்டிருந்தபோது சந்தித்து பேசாத அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷா டெல்லி சென்ற பிறகு, அங்கு சென்று எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அதிமுக கூட்டணியில் ஒபிஎஸ், சசிகலா, டிடிவி அணிகள் இணைய வாய்ப்பு … Read more

66 சர்வதேச அமைப்புகளில் இருந்து விலக அமெரிக்கா முடிவு – டிரம்ப் அதிரடி உத்தரவு

உலகளாவிய ஒத்துழைப்பில் இருந்து மேலும் பின்வாங்கும் வகையில், அமெரிக்கா 66 சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து விலக முடிவு செய்துள்ளது. இந்த அமைப்புகள் வெறும் லெட்டர் பேட் அமைப்புகள் என்று டிரம்ப் நிர்வாகம் வர்ணித்துள்ள நிலையில் இதிலிருந்து விலகுவதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி 7, 2026 அன்று கையெழுத்திட்டுள்ளார். இந்த அமைப்புகளில் பெரும்பாலானவை ஐக்கிய நாடுகள் சபை (UN) சார்ந்த நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் ஆலோசனை அமைப்புகள் ஆகும். குறிப்பாக காலநிலை … Read more

அன்புமணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – அவருடன் எடப்பாடி பேசியது தெருக்கூத்து! ராமதாஸ்

சென்னை: “தந்தைக்கு துரோகம் செய்த அன்புமணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்”  என்று கூறிய பாமக நிறுவனர்  ராமதாஸ் அவருடன் கூட்டணி குறித்து  எடப்பாடி பழனிச்சாமி பேசியது நீதிமன்ற அவமதிப்பு என கூறினார். அன்புமணி ஒரு மோசடிப்பேர்வழி. அன்புமணி யாருடன் கூட்டணி பேசினாலும் செல்லத்தக்கதல்ல. அன்புமணியுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேசியது நீதிமன்ற அவமதிப்பு  என்றவர்,  கூட்டணி குறித்து பேச கட்சி நிறுவனரின் அனுமதி பெறவேண்டும் என கட்சி விதிகளில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி சந்திப்பு ஒரு … Read more

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது!

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக இன்றுமுதல் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் – தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஜனவரி 5ந்தேதி  … Read more