இந்தூர் விபத்து: குடிபோதையில் இருந்த ஓட்டுநர் லாரியை கூட்டத்தினர் மீது மோதியதில் 3 பேர் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கலானி நகரில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று மக்கள் மீது மோதியதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் காவல் துணை ஆணையர் கிருஷ்ணா லால்சந்தானி தெரிவித்தார். ‘இந்தச் சம்பவம் திங்கள்கிழமை இரவு நடந்தது. குடிபோதையில் இருந்த லாரி ஓட்டுநர் ராமச்சந்திரா நகர் அருகே முதலில் இரண்டு பைக்குகளை மோதினார். பின்னர் படா கணபதி பகுதியில் … Read more

வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவின் சில விதிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை! முழு விவரம்…

டெல்லி:  வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மசோதாவுக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், இன்று இடைக்கால உத்தரவை  உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதன்படி சில விதிகளை மட்டும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளது. வக்பு சட்டத்திற்கு தடை விதிக்க தேவையில்லை என குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், இந்த சட்டத்தின் சில பிரிவுகளுக்கு மட்டும் தடை விதித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர். தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி. மாசி ஆகியோர் … Read more

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் – விலைகுறையும் பொருட்கள் எவை! பட்டியலை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை: மத்திய நிதியமச்சர் நிர்மலா சீத்தாராமன், சென்னையில்  நடைபெற்ற  ஜிஎஸ்டி தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது,  ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும்   என்றும் கூறியதுடன், ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் எவை?  என்ற பட்டியல் அடங்கிய புத்தகத்தையும் வெளியிட்டார. இந்​தியா முழு​வதும் ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் என்​பது வரும் 22-ம் தேதி அமல்​படுத்​தப்பட உள்​ளது. இதனால் பல்​வேறு பொருட்​களின் விலை குறைய இருக்​கின்​றன. இதையொட்டி தமிழகத்​தின் வளர்ச்​சிக்​கான ஜிஎஸ்டி சீர்​திருத்​தங்​கள் குறித்த ஜிஎஸ்டி 2.0 … Read more

தமிழக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தவர் அண்ணா! விஜய்

சென்னை: தமிழக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தவர் அண்ணா , அண்ணா பிறந்தநாளையொட்டி, திமுகவை மறைமுகமாக சாடி தவெக தலைவர் விஜய்  குறிப்பிட்டள்ளார். முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி, தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தவர் அண்ணா என  குறிப்பிட்டுள்ளார்.  விஜய் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாநில உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பியவர். இருமொழிக் கொள்கையைத் தமிழகத்திற்குத் தந்தவர். தமிழ்நாடு என்று சட்டப்படி பெயர் மாற்றியவர். சமூக … Read more

பாமக தலைவர் அன்புமணிதான், அவருக்கே ‘மாம்பழம் ‘! தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாமக  பாலு விளக்கம்

சென்னை: பாமக தலைவர் அன்புமணிதான்,  அன்புமணிக்கே மாம்பழம் சின்னம் என  இந்திய தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாமக  பாலு விளக்கம் அளித்தார். அதற்கான ஆதாரங்கள் என கடிதங்களையும் செய்தியாளர்களிடம் காட்டினார். பாமகவில் தந்தை மகனுக்கு இடையே  எழுந்துள்ள மோதல் காரணமாக பாமக இரண்டாக சிதறுண்டு கிடக்கிறது. பாமகவில் இருந்து அன்புமணியை முழுமையாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அவர்மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார். மேலும், விரைவில் பாமக பொதுக்குழு கூட்டப்பட இருப்பதாகவும் அறிவித்துள்ளார். … Read more

விஜய் வருகையால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் வாக்குகளும் சிதறும்! கார்த்தி சிதம்பரம் கணிப்பு…

சிவகங்கை:  நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால்,  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் வாக்குகளும் சிதறும் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்  தெரிவித்துள்ளார். சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், இன்று மானாமதுரை அருகே  கட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.   ப.சிதம்பரம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.53.50 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில்,  கார்த்தி சிதம்பரம் எம்.பி. அடிக்கல் நாட்டினார். ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட … Read more

பி.எட்., எம்.எட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 30-ந்தேதி வரை அவகாசம்! அமைச்சர் கோவி செழியன் தகவல்..

சென்னை: பி.எட்., எம்.எட் போன்ற தொழிற்பிரிவு  பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க வரும் 30ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக,   உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி 20.6.2025 அன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26-ம் ஆண்டிற்கான பி.எட். மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணைய தள விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. அரசு மற்றும் … Read more

தரமற்ற சாலைகள் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக அவதி… சாலைகளை விரைந்து சீரமைக்க பள்ளி மாணவர்கள் கோரிக்கை…

தரமற்ற சாலைகள் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக தினமும் பணிக்குச் செல்பவர்கள் மட்டுமன்றி பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த இரு தினங்களுக்கு முன் பெங்களூரின் பாணத்தூர்-பாலகெரே பகுதியில் ஒரு பள்ளி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக, மாணவர்கள் பின் கதவு வழியாக தப்பித்தனர். இந்நிலையில் பெங்களூரு சாலையில் பள்ளி பேருந்தில் செல்லும் மாணவிகள் எடுத்த வீடியோவில் சாலைகளின் மோசமான நிலை மற்றும் அவர்கள் ஒவ்வொரு நாளும் கடந்து வரும் சோதனைகள் பற்றி பேசியுள்ளனர். “உலகத் தரம் … Read more

செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு! தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து…

டெல்லி: செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என  தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என கூறியதுடன், அதுகுறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளது. முன்னதாக,  தமிழ்நாடு அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் … Read more

‘அன்புக் கரங்கள்’ : பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2000 உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை  வழங்கும் ‘அன்புக் கரங்கள்’  தமிழ்நாடு அரசின் திட்டத்தை  அண்ணா பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) முதல்வர் தொடக்கி வைத்தார். அத்துடன், பெற்றோர் இருவரையும் இழந்து பிளஸ் 2 வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மடிக்கணினிகளையும் வழங்கினார். இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தொடக்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையை வழங்கினார். மடிக்கணினிகளை வழங்கும் … Read more