ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

ஆப்கானிஸ்தானில் இன்று நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் பைய்ஜாபாத்தில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. பூமிக்கடியே 79 கிலோ மீட்டர் தூர ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அங்குள்ள கட்டிடங்கள் பலமாக குலுங்கின. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்பட்டன. Source link

துருக்கியில் இன்று மீண்டும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு..!

மத்திய கிழக்கு நாடான துருக்கியில் இன்று மீண்டும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியமான தேர்தலாக பார்க்கப்படும் இந்தத் தேர்தலில், கடந்த 14-ம் தேதி  வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் அந்நாட்டு சட்டப்படி போட்டியிட்ட வேட்பாளர்கள் யாருமே 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெறாததால் இன்று மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிபர் தாயிப் எர்டோகனை எதிர்த்து, 6 எதிர்க்கட்சிகள் சார்பில் பொது … Read more

செங்கோல் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளித்து கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

புதிய நாடாளுமன்றம் காலத்தின் கட்டாயம் என்றும், நாட்டு மக்கள் அனைவரின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில்  அமைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஒரே இந்தியா, வலிமையான இந்தியா என்பதை பிரதிபலிக்கும் புதிய நாடாளுமன்றம் கட்டிடம், 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி நாட்டிற்கு அளிக்கப்பட்ட பரிசு என்றார். மக்களவையில் நிறுவப்பட்டுள்ள பெருமைவாய்ந்த செங்கோல் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளித்து கொண்டிருக்கும் எனறும் பிரதமர் குறிப்பிட்டார். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த … Read more

கூட்டு குடிநீர் திட்டக் குழாய் உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி….!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே கூட்டு குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டக் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராஜவீதி வழியாகச் செல்லும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு அதிகளவில் தண்ணீர் வெளியேறி பல வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. மேலும் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் உள்ள சாலையிலும் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. கனரக … Read more

மல்யுத்த வீரர்கள் பேரணியாக செல்ல முயற்சி.. போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு..!

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள், புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போது, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்யக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தை நோக்கி, இன்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக செல்ல முயன்ற போது … Read more

நாளை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி.- எஃப்12 ராக்கெட்

தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிப்பதற்கான என்.வி.எஸ் – 01 செயற்கைக் கோள், ஜி.எஸ்.எல்.வி.- எஃப்12 ராக்கெட் மூலம் நாளை காலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அமெரிக்காவின் ‘ஜி.பி.எஸ்.’ போல், இந்தியாவுக்கு பிரத்யேக வழிகாட்டியாக ‘நேவிக்’ தொழில்நுட்பம் வடிவமைக்கப்படுகிறது. அதற்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ, 1பி, 1சி, 1ஜி உள்ளிட்ட செயற்கைக்கோள்கள் ஏற்கனவே ஏவப்பட்டன. கடைசியாக 2018ஆம் ஆண்டில் 1ஐ செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 1ஜி செயற்கைக் கோளுக்கு மாற்றாக அதிநவீன என்விஎஸ்-01 செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. … Read more

அரிசி கொம்பனின் ஆட்டத்தை அடக்க பொள்ளாச்சியிலிருந்து கும்கி யானை வரவழைப்பு..!

தேனி மாவட்டம் கம்பத்தில் சுற்றித்திரிந்த அரிசி கொம்பன் யானை, அங்கிருந்து சுருளிப்பட்டிக்கு இடம்பெயர்ந்த நிலையில், அதை பிடிக்க கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. கம்பம் பகுதியில் நேற்று அந்த யானை சுற்றி திரிந்ததால், முன்னெச்சரிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கிருந்து அருகிலுள்ள சுருளிப்பட்டிக்கு இடம்பெயர்ந்துள்ள யானை, அங்கு தோட்டங்களுக்குள் புகுந்து பலா உள்ளிட்டவற்றை சேதப்படுத்திவிட்டு, திராட்சை தோட்டத்தில் தஞ்சமடைந்துள்ளது. தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வரும் அரிசி கொம்பன் யானையை பிடிக்க பொள்ளாச்சியில் இருந்து சுயம்பு என்ற … Read more

சீனா உருவாக்கிய C919 எனப்படும் முதல் பயணிகள் விமானம் இன்று முதல் தனது சேவையை தொடங்கியது..!

சீனா சொந்தமாக உருவாக்கியுள்ள C919 எனப்படும் முதல் பயணிகள் விமானம் இன்று தனது சேவையை தொடங்கியது. ஷாங்காயின் ஹாங்கியாவோ சர்வதே விமான நிலையத்திலிருந்து 130 பயணிகளுடன் தலைநகர் பெய்ஜிங்கிற்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. ஏர்பஸ் A320neo மற்றும் போயிங் 737 MAX ஜெட் விமானங்களுக்கு போட்டியாக C919 விமானத் திட்டம் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  கமர்ஷியல் ஏவியேஷன் கார்ப்பரேசன் ஆஃப் சீனா நிறுவனம் உருவாக்கிய இந்த விமானம், சீனாவின் சிறந்த புதுமையான சாதனைகளில் ஒன்று என … Read more

ஹெராயின் போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய 2 டிரோன்களை சுட்டு வீழ்த்திய ”பிஎஸ்எப்” படையினர்…!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய 2 டிரோன்கள் எல்லை பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. குர்ட் மாவட்டம் தனோவா கிராமத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் நேற்றிரவு ஆளில்லா டிரோன் பறப்பதை கண்டுபிடித்து எல்லை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் நொறுங்கி விழுந்த டிரோனை  எடுக்க பாதுகாப்புப் படையினர் சென்றபோது, அங்கிருந்து 3 பேர் ஓடுவதை பார்த்து விரட்டிச் சென்று ஒருவனை … Read more

ஜப்பானில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புல்லட் ரயிலில் பயணம்…!

ஜப்பானில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புல்லட் ரயிலில் பயணம் செய்தார். ஓசாகா நகரில் இருந்து தலைநகர் டோக்கியோ வரை சுமார் 500 கிலோ மீட்டர் தூரத்துக்கு தனது மனைவி துர்கா மற்றும் அதிகாரிகளுடன், ரயிலின் வசதிகளை கேட்டறிந்தபடி அவர் சென்றார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்டில், உருவமைப்பில் மட்டுமல்லாது வேகத்திலும், தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்றார். ஏழை எளிய நடுத்தர மக்கள் இத்தகைய ரயில்கள் மூலம் பயனடைந்து, … Read more