இரண்டாவது T20 போட்டியில் பங்களாதேஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணியினருக்கு இடையில் நேற்று (06) இடம்பெற்ற இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியினர் 8 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளனர். அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்ததோடு, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 37 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும், ஏஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றனர். … Read more