உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான விசேட வர்த்தமானி வெளியீடு!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 25.04.2023 அன்று நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்து ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரிகளாலும் விசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 2322/28 முதல் 2322/52 வரையிலான சிறப்பு வர்த்தமானி மூலம் ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரியும் மேற்படி தேர்தலை நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

தீவிரமடையும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்று – இந்தியாவில் முதல் மரணம் பதிவு

இந்தியாவில் H3N2 வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு காரணமாக, இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கமைய, முதல் மரணம் கர்நாடக மாநிலத்திலும், 2 ஆவது மரணம் அரியானா மாநிலத்திலும் பதிவாகியுள்ளன. ஹாங்காங் காய்ச்சல் என்றும் அழைக்கப்படும், இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 வைரஸால் பாதிக்கப்பட்ட 90 பேர் கடந்த காலங்களில் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளனர். நோய் அறிகுறிகள் இந்த இன்ஃப்ளூயன்ஸா H3N2 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கோவிட் அறிகுறிகளுடன் பல ஒற்றுமைகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல், இருமல், … Read more

ஹரக் கட்டா உட்பட போதைப்பொருள் கடத்தல்காரர்களை நாட்டிற்க்கு அழைத்து வர நடவடிக்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் நாளை (11) மடகஸ்கர் நோக்கி பயணிக்கவுள்ளனர். மடகஸ்கரில் கைது செய்யப்பட்ட ´ஹரக் கட்டா´ மற்றும் ´குடு சலிந்து´ ஆகிய இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களை  நாட்டிற்க்கு அழைத்து வரும் நோக்கிலேயே அவர்கள் பயணிக்கவுள்ளனர். குறித்த இருவர் உள்ளிட்ட 8 பேர் கடந்த 01 ஆம் திகதி மடகஸ்கரில் உள்ள இவாடோ விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஹரக் கட்டாவின் மனைவியும் … Read more

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு தேடி அலையும் இளைஞர், யுவதிகளுக்கு முக்கிய தகவல்

இஸ்ரேல் நாட்டில் தாதியர் வேலை வழங்குவதாக கூறி ஒருவரிடம் இருந்து 1,195,000.00 ரூபாவை மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட பெண் ஒருவர் உட்பட இருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேல் நாட்டில் தாதியர் சேவை வேலை வழங்குவதாக வரக்காபொல பிரதேசத்தில் வசிக்கும் அரச தாதி ஒருவரிடம் இந்தப் பெண் பணம் பெற்றுள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்ட பெண் உரிய வேலை வழங்கப்படாததால் இது தொடர்பில் பணியக விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டிற்கமைய, கைது … Read more

ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு! இலங்கை மத்திய வங்கி

இலங்கை ரூபாவிற்கு நிகராக இன்று (10.03.2023) பதிவாகியுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.  அதன்படி அமெரிக்க டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் விலையில் மாற்றம் அந்த வகையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு விலை 311.62 ரூபாவாகவும், விற்பனை விலை 328.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி டொலரின் கொள்வனவு விலை 307.36 ரூபாவாகவும் விற்பனை விலை 325.52 … Read more

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் இன்று அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு (Live)

எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் (10.03.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.  மேலும் தெரிவிக்கையில், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வடைந்து வருகின்றது. புதிய எரிபொருள் இருப்புக்கள் கொள்வனவு அண்மைய நாட்களில் ரூபாயின் பெறுமதி வலுவடைந்து வருவதால், புதிய எரிபொருள் இருப்புக்கள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படும். அத்துடன், கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்படும் சரக்குகள் குறைந்த விலையில் இறக்குமதி … Read more

இலங்கையில் ஒரே வாரத்தில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்! கொழும்பில் இன்று பதிவாகியுள்ள நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஒரு வாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி தங்கப்பவுணொன்றின் விலை ஒரு வாரத்தில் சுமார் 39,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தங்கத்தின் விலை இதேவேளை, தங்கத்தின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் நகைக்கடைகளில் நெருக்கடி நிலை பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்துள்ளதன் காரணமாக உலக தங்கத்தின் விலையுடன் … Read more

390 என்ற மோசமான பெறுமதியை அடைவுள்ள இலங்கை ரூபாய்

 அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என ஃபிட்ச் நிறுவன மதிப்பீடுகள் கணித்துள்ளது. சமகாலத்தில் அமெரிக்க டொலருக்கு எதிரான வலுவான நாணயமாக இலங்கை ரூபாய் மாறியுள்ளது, ஆனால் வருட இறுதியில் இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சியடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 20 வீதத்தால் வீழ்ச்சியடையும் என ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட … Read more

இத்ததாலியில் வேலை தேடும் இலங்கைர்களுக்கு முக்கிய தகவல்

 இத்ததாலியில் தொழில்வாய்ப்பிற்காக இலங்கையர்கள் நேரடியாக விண்ணபிக்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை இத்தாலிக்கான இலங்கை தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்திடம் அறிவித்துள்ளது. இத்தாலிய அரசாங்கம் வருடாந்தம் வழங்கும் கோட்டா முறையிலான தொழில் வாய்ப்புக்களுக்கான விண்ணப்பம் இத்தாலியிலுள்ள தொழில் வழங்குனர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களினால் செய்யப்பட வேண்டும். அந்த தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இத்தாலியில் உள்ள தொழில் வழங்குனர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய இந்த வேலைகளைப் … Read more

காஷ்மீரில் தொடரும் பதற்றம்! இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் போர் ஏற்படும் அபாயம்

காஷ்மீரில் தொடரும் பதற்றம் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் போர் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அச்சுறுத்தல் ஆய்வு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த ஆய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் செயற்பாடு இந்தியாவுக்கு எதிராக செயற்படும் பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் போக்கை கொண்ட நீண்டகால வரலாற்றை பாகிஸ்தான் கொண்டுள்ளது. இருப்பினும், பாகிஸ்தானின் தூண்டுதல்களுக்கு, பிரதமர் மோடி தலைமையின் … Read more