ரஷ்ய படைகளின் தாக்குதல்: ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தீ விபத்து! – உக்ரைன் தகவல்

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 9வது நாளாக போர் நீடித்து வருகிறது . இந்த நிலையில் தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணுமின் நிலையம் மீது இன்று அதிகாலை ரஷ்ய படைகள் நேரடியாக தாக்குதல் நடத்தின. அப்போது சபோரோஷியாவிலுள்ள அணுமின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதான் ஐரோப்பியாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமாகும். 1986-ல் சோவியத் யூனியனில் இருந்த செர்னோபில் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து உயிரிழப்பிலும், பொருளாதாரத்திலும் வரலாற்றில் இன்றுவரை மிகப்பெரிய பேரழிவாக … Read more

குண்டாஸ் போடாமல் இருக்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டாரா?! – வைரலான ஆடியோ; பதவியை ராஜினாமா செய்த எஸ்.ஐ

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சூரங்குடி, குளத்தூர், எப்போதும்வென்றான், மாசார்பட்டி, சாயர்புரம், குரும்பூர், கயத்தாறு, சேரகுளம், திருச்செந்தூர், புதுக்கோட்டை தட்டார்மடம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் திருடு போனதால் அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளை போலீஸார் பார்வையிட்ட போது, ஒரு கும்பல் காரில் வந்து ஆடுகளை திருடிச் சென்றது. இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி வாகனச் சோதனையின் போது அந்த கும்பல் … Read more

இன்றைய ராசி பலன் | 04/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

உக்ரைன் விவகாரம்: `ஐ.நா-வில் இந்தியாவின் குரல் முக்கியமானது!' – பிரான்ஸ் தூதர்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்த் தாக்குதலால் அந்த நாடு மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தொடர்ந்து ரஷ்யாவுக்குக் கண்டனம் தெரிவித்தும், பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகின்றன. இந்த நிலையில், ஐ.நா. சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவின் குரல் முக்கியமானது என இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “உக்ரைனில் மக்கள் இறப்பதும், அகதிகளாக வெளியேறுவதும் வழக்கமாக … Read more

நெல்லை: மேயர் வாய்ப்புக்காகக் காத்திருந்தவர்கள் ஏமாற்றம்! – இணையத்தில் பரவும் கலகக் குரல்கள்

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 55 வார்டுகளில் தி.மு.க கூட்டணி 51 இடங்களைப் பிடித்து அசுர பலத்துடன் இருக்கிறது. மேயர் வேட்பாளர் என்ற கனவுடன் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பலரும் தங்கள் பெயரைக் கட்சித் தலைமை அறிவிக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ரிசார்ட்டில் கவுன்சிலர்கள்.. கோதாவில் பிரபலங்கள்! – நெல்லை மாநகராட்சி மேயர் ரேஸில் யார் யார்? நெல்லை மாநகராட்சியின் தி.மு.க கவுன்சிலர்கள் சிலருக்கு கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களுடன் நல்ல அறிமுகம் இருந்தது. … Read more

“உக்ரைனின் பாதுகாப்பை முடிந்தவரை உறுதிப்படுத்துவோம்" – ஜெர்மனி திட்டவட்டம்

கிழக்கு ஜெர்மனி – மேற்கு ஜெர்மனி எனப் பிரித்த பெர்லின் சுவர் 1989-ல் அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, ‘போர் நடக்கும் எந்த பகுதிக்கும் ஆயுதங்களை அனுப்புவது இல்லை’ என ஜெர்மனி முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் மத்தியில் கடந்த 7 நாள்களாகப் போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா வான்வெளி, தரைவழி என தன் தாக்குதலைத் தீவிரப்படுத்திவருகிறது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். உக்ரைன் போர் எனவே, உக்ரைன் தன்னை தற்காத்துக்கொள்ள ஜெர்மனி ஆயுதங்கள் … Read more

தஞ்சை மேயர்: முதல்வர் குடும்பத்துடன் நெருக்கம்… டிக்'கான சண்.ராமநாதன்! – பின்னணி என்ன?

தஞ்சாவூர் மாநகராட்சி தி.மு.க மேயர் வேட்பாளராக சண்.இராம நாதன், துணை மேயர் வேட்பாளராக டாக்டர் அஞ்சுகம் பூபதி அறிவிக்கப்பட்டுள்ளனர். மேயர் வேட்பாளர் சீட்டை பிடித்துவிட வேண்டும் என பலர் போட்டியிட்டாலும், ரேஸில் இந்த இருவர் தான் முன்னிலை வகித்தனர். கோடிகளில் செலவு செய்ய சிலர் தயாராக இருந்தும், உயதநிதி சண்.இராமநாதன் பெயரை டிக் செய்ததுடன் அவர்தான் வேட்பாளர் என்பதிலும் உறுதியாக இருந்து அறிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. சண்.இராமநாதன் தஞ்சாவூர் மாநகராட்சியில் மேயர் சீட்டை பிடிக்க தி.மு.க-வுக்குள் மத்திய மாவட்ட … Read more

இயல்பு நிலைக்குத் திரும்பிய சினிமா… மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் என்னென்ன படங்கள் வெளியாகின்றன?

தமிழ் சினிமா இயல்பு நிலைக்கு மாறத் தொடங்கிவிட்டது. கடந்தாண்டு கொரோனா மூன்றாவது அலை பரவலினால், தியேட்டர்கள் மூடல், அதன்பின் ஐம்பது சதவிகித இருக்கைக்கு அனுமதி போன்ற சூழல்களினால் அப்போது வெளியாக வேண்டிய டாப் ஹீரோக்களின் படங்களைத் தள்ளி வைத்தனர். இடையே சின்ன பட்ஜெட் படங்கள் கொத்துக் கொத்தாக வெளியானாலும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. முதல் லாக்டௌனுக்குப் பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ படத்தை எதிர்பார்த்தது போல… மூன்றாவது அலைக்கு பிறகு ‘வலிமை’யை எதிர்பார்த்தனர். இனி வரும் நாள்களில் ராஜமௌலி, … Read more

மதுரை: மேயர் ரேஸில் கடைசியில் இருந்து முதலிடம்! – யார் இந்த இந்திராணி… திமுக தேர்வின் பின்னணி

மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளராக இந்திராணி பொன் வசந்தை திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இந்திராணி மதுரை மாநகர மேயர் பதவியை குறிவைத்து மதுரை மாநகர திமுக-வுக்குள் முக்கிய நிர்வாகிகள் காய் நகர்த்திய நிலையில், அந்த ரேஸில் கடைசியில் இருந்த இந்திராணி அறிவிக்கப்பட்டது கட்சியினர் மத்தியில் ஆதரவையும், இன்னொரு பக்கம் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. யார் இந்த இந்திராணி? எப்படி வாய்ப்பு கிடைத்தது? என்று கட்சியினரிடம் விசாரித்தோம். “ஆரப்பாளையம் பகுதி திமுக செயலாளராக பொன்.வசந்த் இருக்கிறார். பூர்வீகம் உசிலம்பட்டி பக்கம். … Read more

“அதிமுக முடிவைப் பொறுத்திருந்து பார்ப்போம்!” – டிடிவி தினகரன் சொல்வதென்ன?

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓபிஎஸ், அதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அதிமுக செயலாளர் சையது கான் தலைமை தாங்கினார். தேர்தல் தோல்வி காரணமாக சசிகலா, டி.டி.வி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று தேனி அதிமுக மாவட்டச் செயலாளர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலா, தினகரன் இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கட்சியில் … Read more