“அரசியலைப் புகுத்தி கட்சியைப் பலப்படுத்த பாஜக நினைத்தால் அது நடக்கவே நடக்காது" – மு.க.ஸ்டாலின்

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்தியதாகக் கூறி பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சட்டப்பேராவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அண்ணாமலை இந்த நிலையில், அயோத்தியா மண்டபப் பிரச்னை தொடர்பாக சட்டப்பேரவையில் பா.ஜ.க-வுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “சாமான்யர்களை பாதிக்கும் பிரச்னைகளில் பா.ஜ.க அதிக கவனம் செலுத்த வேண்டும். … Read more

நீண்ட நாட்கள் வாழ வேண்டுமா? குறைவாக சாப்பிடுங்கள்!

வயதான காலத்தில் ‘உண்ணும் அளவு குறைந்துவிட்டதே’ என்று கவலைப்படத் தேவையில்லை. குறைவான உணவாக இருந்தாலும் அது நிறைவான சத்துள்ள உணவாக இருக்க வேண்டும்; எளிதில் கிடைக்கக் கூடியதாகவும், விரைவில் செரிக்கக் கூடியதாகவும் விலையிம் சற்று மலிவாகவும் இருந்தால் மிகவும் நல்லது. முதுமைக் காலத்தில் திடீர் மாற்றம் எதுவாக இருந்தாலும் அது வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கும். உதாரணமாக, உணவு விஷயத்தை எடுத்துக்கொள்வோம். சில பேர் என் கிளினிக்கில், எனது அப்பாவுக்கு வயது 60-70 என்று கூறி, அதற்கு ஏதாவது … Read more

ரன்பீர் கபூர் ஆலியா பட் திருமணம்: 28 பேர் மட்டுமே பங்கேற்பு; மின் விளக்குகளால் ஒளிரும் ரன்பீர் வீடு!

கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டிற்கு திருமண ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. திருமணத்தேதி தொடர்பாக மாறுபட்ட செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. திருமணம் நடக்கப்போவது நிச்சயம் என்பதை உறுதிபடுத்திய இருவரது குடும்பமும் திருமண தேதியை மட்டும் உறுதியாகச் சொல்லவில்லை. ஆரம்பத்தில் இம்மாதம் 17-ம் தேதி என்று செய்தி வெளியானது. பின்னர் 14, 15, 16 என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தியாக வந்து … Read more

“ரஷ்ய ராணுவம், பாலியல் வன்கொடுமையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது” – ஐ.நாவில் உக்ரைன் காட்டம்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய போரானது கிட்டத்தட்ட 6 வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைனின் கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்றவற்றின் மீது வெடிகுண்டு தாக்குதல், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குதல் மற்றும் உக்ரேனிய குடிமக்களைப் படுகொலை செய்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை ரஷ்ய ராணுவத்தின் மீது உக்ரைன் கூறிவந்தது. இதுதொடர்பாக ஐ.நா சபையில் பலமுறை விவாதிக்கப்பட்டும் ரஷ்யா அதனைத் தொடர்ந்து மறுத்து வந்தது. இந்த நிலையில் பாலியல் … Read more

மேஜிக்கல் லேடி – 349 | புத்தம் புது காப்பி | திரைக்கதை எழுத வாங்க!

இது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு கதை காட்சி 1: (தக்க பின்னணி இசையுடன் கூடிய காட்சிகள் ஓர் மிகப்பெரிய அரங்கு. அதில் உலகெங்கும் இருந்து வந்திருக்கும், விஞ்ஞானிகள் எல்லோரும் குழுமி இருக்கிறார்கள். அங்கு ஒரு சிறு மேடை. விஞ்ஞானிகள் ஒவ்வொருவராக, அவர்கள் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்புகளையும், அதன் அறிவியல் கோட்பாடுகளையும் விளக்கி உரையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அரங்கினுள் ஒருவன் அதிரடியாக நுழைகிறான். அவனுடன் சேவகர்கள் சிலரும் வருகிறார்கள். அவன் அந்த மேடை மீது … Read more

“ரஷ்ய – உக்ரைன் பேச்சுவார்த்தை அமைதிக்கு வழிவகுக்கும்!” – ஜோ பைடனுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி

இந்தியா, அமெரிக்கா இடையிலான ராணுவ ஆலோசனைக் கூட்டம் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நேற்று நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர். உக்ரைனில் நிலவும் போர் சூழ்நிலைகள் குறித்து இந்தியமற்றும் அமெரிக்க அமைச்சர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துரையாடினர். இந்த நிகழ்ச்சியில் … Read more

கைப்பேசியோடும் வாழக் கற்போம்! | பெற்றோருக்கான உளவியல் வழிகாட்டி

கொரோனாவை எப்படி முற்றிலும் ஒழிக்க முடியாதோ அதுபோல குழந்தைகளின் கைகளில் செல்போன் தவழ்வதையும் முற்றிலும் ஒழிக்க முடியாது. கொரோனா தீநுண்மியின் பிரவேசத்தால் பலியானோர் ஒரு புறமிருக்க, ஆன் லைன் வகுப்புகளை சாக்காக வைத்து கைப்பேசி மூலம் தேவையற்றதையும் கற்று மனச்சிதைவுக்கு ஆளாகும் அடுத்தடுத்த தலைமுறைகளைக் காணும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே எனத்தான் பாடத் தொன்றுகிறது. ’கைப்பேசி படிப்பைக் கெடுக்கும்’ என்பது போய், கைப்பேசி மூலம் கல்வி கொடுக்கும் காலம் வந்துவிட்டது. திடீரென்று எப்படிக் குழந்தைகள் இந்தத் தலைகீழ் மாற்றத்தை … Read more

நச்சு நீக்கம் முதல் எடை குறைப்புவரை – பவர்ஃபுல் அறுகம்புல்! – மூலிகை ரகசியம் – 2

வானிலிருந்து பொழியும் மழையை பஞ்சுபோல செயல்பட்டு, ஈர்த்து சேமித்துவைத்து ஆறாக உருமாற்றும் பெரும்பணி புல்வெளிகளுக்கு உண்டு. பல புல் ரகங்கள் வீடுகளின் கூரையாகவும் உருமாறி பாதுகாப்பளிப்பதுண்டு. மருந்தாக உருமாற்றமடைந்து நோய்களைத் தகர்க்கும் ஆபத்பாந்தவனாகவும் புற்கள் இருப்பதுண்டு. பல பெருமைகளைக் கொண்ட புல் ரகத்தில் அறுகம் புல் குறித்து புல்தரையில் சம்மணமிட்டு அமர்ந்து ஆசுவாசமாகப் பேசுவோமா?! சிறிய புல் தான்! ஆனால் தனக்குள் பல அதிசயங்களைச் சேமித்து வைத்திருக்கும் பசும்புல் இது! மழை லேசாக எட்டிப்பார்த்தால் போதும், மறுநாள் … Read more

தொழில்நுட்ப கோளாறு; தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதிய எக்ஸ்பிரஸ் – 7 பேர் பரிதாப பலி

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் அருகே ரயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது, எதிர்திசையில் வந்த கொல்கத்தா செல்லும் கொனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், “உயிரிழந்த 7 பேரும் செகந்திராபாத் – கவுஹாத்தி அதிவிரைவு ரயில் பயணிகள். தொழில்நுட்ப கோளாறு காரணமாக படுவ கிராமம் அருகே ரயில் நின்றபோது, இந்த 7 பேரும் ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர்திசையில் அதிவேகமாக வந்த கொல்கத்தா … Read more

“கட்சிகளின் இலவச திட்டங்களில் தலையிட முடியாது” – தேர்தல் ஆணையம் கைவிரிப்பது சரியா?

வழக்கறிஞர் அஸ்வின் உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் நேரங்களில் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் தொடர்பாக ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் நிறைவேற்றமுடியாத இலவசங்களை அறிவிப்பது லஞ்சம் வழங்குவதற்குச் சமம். நேர்மையான தேர்தல் முறைக்கு எதிரான இந்த செயலுக்குத் தடை விதிக்க வேண்டும். இலவசத் திட்டங்களால் பின்னாளில் மக்கள் தான் சிரமத்தைச் சந்திக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிவிப்புகள், வாக்குறுதிகளை நெறிப்படுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார். உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்த … Read more