வில் ஸ்மித் மனைவிக்கு ஏற்பட்டுள்ள `Alopecia' குறைபாடு; ஏன் ஏற்படுகிறது? தீர்வு என்ன?

`மென் இன் ப்ளாக்’ திரைப்படம் மூலம் நமக்குப் பரிச்சயமான ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். பல திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய நடிகராகத் திகழும் இவர், இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் `கிங் ரிச்சர்டு’ திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான பிரிவில் நாமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில், மேடையில் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கட் ஸ்மித்தின் முடி உதிர்ந்த தலை குறித்து கேலி செய்யும் விதத்தில் பேசியிருக்கிறார். … Read more

ஆப்கானிஸ்தான்: `தாடி எடுத்தால் அலுவலகத்துக்குள் அனுமதி இல்லை!' – தாலிபன் அரசு புதிய நிபந்தனை

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானிலிருந்து, அமெரிக்க ராணுவம் வெளியேறியதையடுத்து ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தனர். தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பல்வேறு சவால்களை ஆப்கனிஸ்தான் சந்தித்து வருகிறது. அதிலும், பெண்களுக்கு எதிராக தாலிபன்கள் விதித்துவரும் நிபந்தனைகளால் ஆப்கனிஸ்தான் மக்கள் தாலிபன்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட தாலிபன்கள், பள்ளிகளில் மாணவிகளை அனுமதிக்காததற்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐ.நா குரல்கொடுத்து வருகிறது. மேலும், பெண்கள் விமானத்தில் தனியாக பயணிக்கவும் தாலிபன் அரசு தடைவிதித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் தாலிபன் … Read more

ஓடும்போதே தீப்பிடித்த கார்; தீக்காயங்களுடன் உயிர்தப்பிய குடும்பத்தினர்! – திருச்சியில் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ். இவர் நத்தம் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படைவீரராக வேலை பார்த்து வருகிறார். ராகேஷ், அவரின் 2 குழந்தைகள் உட்பட 6 பேருடன் திருப்பதிக்குச் சென்றுவிட்டு காரில் வீடு திரும்பியுள்ளார். இன்று காலை திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பி.கே அகரம் பகுதி அருகே கார் வந்து கொண்டிருந்த போது, திடீரென காரில் இருந்து புகை வரத் தொடங்கியிருக்கிறது. அதனைப் பார்த்து பதறிப்போனவர்கள், காரை ஓரம்கட்டி … Read more

RRR போன்றே 'டபுள் ட்ரீட்' கொடுத்த Dual Hero's தமிழ்ப்படங்கள் இவைதாம்!

RRR படத்தில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் ஜூனியர் என்.டி.ஆர். , ராம்சரண் இணைந்து நடித்தனர். அதுபோல தமிழில் மாஸ் ஹீரோக்கள் ஒன்றாக நடித்த படங்களைப் பற்றி பார்ப்போம். ரஜினி, மம்முட்டி இணைந்து நடித்த தளபதி படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியானது. “நட்புன்னா என்னன்னு தெரியுமா” சூர்யா-தேவாவின் நட்பு, இன்றைக்கு வரை ரசிகர்களின் பேவரைட். RRR -ல் நடித்திருக்கிற ராம் சரணின் அப்பாவும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி – நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் … Read more

செம்பா: “உயிர் காத்த அந்த உருவத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமே” | பகுதி 28

அவன் கோட்டைக்குள்ளிருந்து வெளியேற வழிதேடலாம் என்று சொன்னதும் தலையசைத்து மறுத்தாள் செம்பா. “புதிய வழி கண்டறிய இனி காலமில்லை. ஏன் நீங்கள் வந்த வழி இருக்கும் தானே? அது தான் இப்போதைக்குச் சிறந்த வழி” “அதுவும் சரி தான்.” இருவரும் பேசுவதைக்கேட்டு அதிர்ந்து நின்றாள் எழினி. மீண்டும் அந்த அகழி நீரில் நீச்சலா? “ஐயோ! நான் மாட்டேன். பேசாமல் நாமிருவரும் வெளியிலேயேக் காத்திருந்திருக்கலாம். செம்பாவே வெளியே வந்திருப்பாள்.” “இல்லை எழினி… அந்த அறையிலிருந்து தப்பியிருக்கலாம். ஆனால் மருதனாரின் … Read more

“சேவை செய்யவே அதிகாரம்; ஆணவத்தைக் காட்டுவதற்கு அல்ல" – பாஜக-வை சாடிய கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநிலத்தின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப்பில் `வீடு தேடி ரேஷன்’ திட்டத்தை அறிமுகப்படுத்திய பக்வந்த் மானுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். அதையடுத்து, “டெல்லியில் நாங்கள் 4 ஆண்டுகளாக இத்திட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறோம், ஆனால் மத்திய அரசு தடுத்துவருகிறது” என குற்றம் சாட்டியிருந்தார், இந்த நிலையில், தனியார் ஊடக பேட்டியொன்றில், “பாஜக, காங்கிரஸுக்கு எதிராக நான் இங்கு இல்லை. நான் நினைப்பதெல்லாம் நாட்டைப் பற்றி மட்டுமே” என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். மோடி … Read more

ஆர்யன் கான் மீது குற்றப்பத்திரிக்கை… மேலும் 3 மாத அவகாசம் கேட்கும் அதிகாரிகள்!

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் மாதம் மும்பையிலிருந்து கோவா சென்ற பயணிகள் கப்பலில் நண்பர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்திய போது கைது செய்தனர். ஆர்யன் கானும், அவருடன் கைது செய்யப்பட்டவர்களும் ஒரு மாதம் வரை சிறையில் இருந்தனர். ஆரம்பத்தில் இவ்வழக்கு விசாரணையை, ரெய்டு நடத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே நடத்தினார். ஆனால் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக், … Read more

சிலந்தி வலைப் பின்னல் | உலக சினிமா

The Girl and the Spider இந்தப் படத்தின் இயக்குநர்கள்: ரமோன் ஸுர்ச்சர், சில்வன் ஸூர்ச்சர். ரமோன் ஸுர்ச்சர் 1982-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் ஆர்பெர்க்கில் பிறந்தார். இவர் ஓர் இயக்குநர் மற்றும் எழுத்தாளர், தி ஸ்ட்ரேஞ்ச் லிட்டில் கேட் (2013), தி கேர்ள் அண்ட் தி ஸ்பைடர் (2021) மற்றும் ஹியூட் மேக் இச் டைஸ் லைட் (2007) ஆகிய படங்களால் அறியப்பட்டவர். மற்றொரு இயக்குநரான Silvan Zürcher தயாரிப்பாளர், இரண்டாம் யூனிட் இயக்குநர், உதவி இயக்குநர் … Read more

ஒரு தொலைக்காட்சியால் ஒரு குடும்பத்தின் வாழ்க்கை மாறுமா? | உலக சினிமா

விசாரணை WORLD CINEMA | The Judgement | De Veroordeling | 2021 | Dutch | 130 min | ’தி ஜட்ஜ்மெண்ட்’ படத்தில் தொலைக்காட்சி பத்திரிகையாளர் பாஸ் ஹான் கொலை வழக்கு விசாரணையில் தனது சொந்த கருத்தை உருவாக்குகிறார். அவரது தொலைக்காட்சி அறிக்கையின் விளைவாக ஒரு குடும்பத்தின் வாழ்க்கை தாறுமாறாகி, தடம்புரண்டு போகிறது. இனி என்ன ஆகும்? இந்தப் படத்தின் இயக்குநர் Sander Burger 1975-ம் ஆண்டில் ஐவரி கோஸ்ட்டில் பிறந்தவர். அடிப்படை … Read more

இரண்டு பெண்களின் இயக்கத்தில் ஒரு படம்: பெண்களும் அழுவார்கள்! | உலக சினிமா

WORLD CINEMA | Women Do Cry | ஒரு தாய் நாரை புகைபோக்கியிலிருந்து சுட்டு வீழ்த்தப்பட்டது. பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் பால்கனியில் இருந்து குதிக்கிறாள். ஒரு பெண் எச்.ஐ.வி.யின் களங்கத்தை சமாளிக்க வேண்டும். வரும் நாள்களில் ஏதேனும் மேஜிக் நடக்குமா என ஒரு தாய் நாட்காட்டியில் பார்க்கிறாள். வன்முறையான பாலின-சமத்துவ எதிர்ப்பு போராட்டங்களின் பின்னணியில் இந்த சமகால பல்கேரிய குடும்பத்தின் பலவீனமும் அபத்தமும் அமைக்கப்பட்டுள்ளன. இது உண்மைக் கதையை அடிப்படையாகக் … Read more