ஜெயம் ரவியின் அகிலன் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

ஜெயம் ரவி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பூலோகம். இந்த படத்தை இயக்குநர் என். கல்யாண கிருஷ்ணன். இது அவர் இயக்குநராக அறிமுகமான முதல் படமும் கூட. இந்நிலையில், அவர் இரண்டாவது முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். அவர்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் அகிலன். பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் அகிலன் திரைப்படத்திற்கு சாம் சி.எஸ்.இசையமைத்திருக்கிறார். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் இந்தப் … Read more

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்த மனு! உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம், நாளை விசாரிக்க உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த  மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மற்றும் ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் தொடர்பாக அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பதில் … Read more

AK62: அறிவிப்பு வெளியாகி ஓர் ஆண்டு! சூசகமாய் விக்னேஷ் சிவன் வைத்த அந்த பாடல்!

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க சிறப்பான படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன்.  ‘நானும் ரவுடி தான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் காதலில் இருந்தவர் தற்போது அவரை திருமணம் செய்துள்ளார், இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளது.  இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் அஜித்குமாரை வைத்து புதிய படமொன்றை இயக்கப்போவதாக செய்திகள் வெளியானது.  ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் ‘துணிவு’ படம் வெளியான பிறகு, … Read more

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை புறக்கணியுங்கள் – முக்கிய தலைவர் பேச்சால் பரபரப்பு!

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலை திடீரென அறிவித்து இருக்கிறார். இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது.  ஒரு தேர்தல் என்றால் வாக்காளர் பட்டியல், வேட்பாளருக்கு கால அவகாசம் உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.  திடீர் சாம்பர், ரசம் போன்று இந்த தேர்தலை அறிவித்துள்ளார்.  தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப … Read more

30+ அமெரிக்க நகரங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ள கைலாசா! வெளியாகும் பகீர் தகவல்கள்!

நியூயார்க்: இந்தியாவில் இருந்து தப்பியோடிய நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். நித்யானந்தாவின் ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா’ 30 அமெரிக்க நகரங்களுடன் ‘கலாச்சார கூட்டாண்மை’ ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரம் கற்பனையான நாட்டுடனான ‘சகோதரி நகரம்’ ( Sister City) ஒப்பந்தத்தை ரத்து செய்ததாகக் கூறிய சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வந்துள்ளது. நெவார்க் மற்றும் கற்பனை நாடான ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் … Read more

பிக்பாக்கெட் அடிப்பது போல் ஒரு பொதுச் செயலாளர் தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் காட்டம்

திருச்சியில் ஏப்ரல் 2 வது வாரத்தில் மாநிலம் தழுவிய மாநாடு நடைபெறும் என்றும் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘அதிமுகவில் பொதுவாக கழக அமைப்பு ரீதியாக  5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுச்செயலாளர் தேர்தல் நடப்பது வழக்கம். அதற்கு உறுப்பினர் அட்டை, படிவம் உள்ளிட்டவை கொடுக்கப்பட … Read more

அண்ணாமலைக்கு பதில் சொல்ல மாட்டேன்: ஜெயக்குமார் கூலாக போட்ட சூடு

அதிமுக – பாஜக இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று பேசியதாக தகவல் வெளியானது. அவரின் இந்த கருத்துக்கு அதிமுகவின் மூத்த தலைவர் ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது, அதிமுக தலைமையில் தான் கூட்டணி, இதில் எந்த மாற்றமும் இல்லை. அண்ணாமலை பேசியதற்கு பதில் சொல்ல முடியாது … Read more

மக்களே உஷார்! 126 நாட்களுக்குப் பிறகு அதிக அளவில் கொரோனா பாதிப்பு

India Covid Cases: மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, 126 நாட்களுக்குப் பிறகு, சனிக்கிழமையன்று இந்தியாவில் ஒற்றை நாளில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 800 ஐத் தாண்டியுள்ளது. அதே நேரத்தில் செயலில் உள்ள எண்ணிக்கை 5,389 ஆக உயர்ந்துள்ளது. 843 புதிய நோய்த்தொற்றுகளுடன், நாட்டின் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.46 கோடியாக (4,46,94,349) அதிகரித்துள்ளது. நான்கு பேர் பலியானதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,30,799 ஆக உயர்ந்தது. இந்த தரவு காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்டது.  ஜார்கண்ட் … Read more

நீலகிரி: பொம்மன் – பெல்லியுடன் புகைப்படம் எடுக்க குவியும் சுற்றுலாப் பயணிகள்..!

அண்மையில் அறிவிக்கப்பட்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இசையமைப்பாளர் கீராவாணி மற்றும் பாடலாசிரியர் ஆகியோர் ஆஸ்கர் மேடையில் விருதை பெற்றுக் கொண்டனர். இந்த மகிழ்ச்சியில் இந்திய சினிமா உலகம் மற்றும் ரசிகர்கள் திளைத்திருந்த நேரத்தில் மற்றொரு ஆஸ்கர் விருது ’தி எலிபன்ட் விஸ்பரஸ்’ என்ற இந்திய ஆவணப்படத்துக்கு கிடைத்தது. இதில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்னவென்றால் இந்த படம் எடுக்கப்பட்டது நீலகிரி மாவட்டம் முதுமலையில்.  அங்கு … Read more

நீங்கள் வெர்ஜினா? நெட்டிசனின் கேள்விக்கு பதிலடி கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன்!

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தமிழ் மொழிப்படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப்படங்களிலும் பிசியாக இருந்து வருகிறார்.  தமிழில் இவரது படங்கள் வரவில்லையென்றாலும் மற்ற மொழிகளில் இவரது படங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது.  இவரது நடிப்பில் இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகை சமயத்தில் இரண்டு படங்கள் வெளியானது.  பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ‘வீர சிம்மா ரெட்டி’ படத்திலும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக ‘வால்டர் வீரைய்யா’ படத்திலும் நடித்திருந்தார்.  தற்போது ‘கேஜிஎஃப்‘ புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் … Read more