சுவிஸ் வங்கியில் கருப்பு பண முதலீடு… 4வது பட்டியலை பெற்றது இந்தியா..!!

இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்கும் வகையில் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்வதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.  இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் வங்கிகளில் கறுப்புப் பணத்தை வைத்திருக்கும் இந்தியர்கள் விபரம் வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ஏற்று, சுவிஸ் வங்கிகள் தற்போது, சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. இது இந்தியா பெற்றுள்ள நான்காவது பட்டியல் இதுவாகும். பல அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்களின் கணக்குகளும் இதில் அடங்கும். இந்த கணக்கு வைத்திருப்பவர்களின் … Read more

வாடகை தாய் சர்ச்சை : நயன்தாரா விவகாரத்தில் தீவிரம் காட்டும் அரசு – விரைவில் அறிக்கை?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் 9ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த  இவர்களின் திருமண வரவேற்பில், அழைப்பிதழ் வைத்திருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர்.  திருமண நிகழ்வின் ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் வாங்கிவைத்திருந்ததன் காரணமாக திருமண அரங்குக்குள் செல்போனில் படம் பிடிக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. … Read more

இறந்து கரை ஒதுங்கிய 500-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்

நியூசிலாந்தின் சாத்தம் தீவு 800-க்கும் குறைவான மக்கள் வசிக்கும் தீவு ஆகும். இத்தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் ஏராளமான சுறாக்கள் இருப்பதால், இத்தீவு மிகவும் சவாலான பகுதியாகும். சாத்தம் தீவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சுமார் 250 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. இதனைத் தொடர்ந்து, இன்று அருகிலுள்ள பிட் தீவில் 240 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. சுறாக்களின் தாக்குதலினால் இந்தத் திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளன. இந்தத் தீவு நிலப்பரப்பில் இருந்து வெகு தொலைவில் உள்ளதால், உயிரிழந்த திமிங்கலங்களின் உடல்கள் … Read more

மீண்டும் மீண்டுமா… ஒரே கழிவறையில் 2 டாய்லெட்கள் – அதுவும் முதல்வர் திறந்துவைத்ததாம்!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றப்பின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளில் உரிய முறையில், பணிகள் மேற்கொள்ளாமல் அதற்கு மாறாக  மேற்கொள்ளப்பட்டு பல்வேறு  சர்ச்சைகளுக்கு உண்டாகி பேசும் பொருளாக மாறியது. குறிப்பாக, கை பம்பை அகற்றாமல் சிமெண்ட் சாலை அமைத்தது, கார், இரு சக்கர வாகனங்களை அகற்றாமல் சிமெண்ட் சாலை அமைத்தது, முறையற்ற குடிநீர் குழாய்கள் அமைத்தது போன்ற பல்வேறு சர்ச்சைகளை சமீப நாள்களாகவே  நடந்து வருகிறது. அந்த வகையில், தற்போது மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் காஞ்சிபுரம் … Read more

நாமினேஷன் லிஸ்ட்டில் சிக்கிய போட்டியாளர்கள்: முதல் நாளே ஆப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. கடந்த சீசன்களைவிட இந்தமுறை அதிக போட்டியாளர்களை களமிறக்கும் பிக்பாஸ், ஒவ்வொரு துறையில் இருந்தும் ஸ்டாராக இருப்பவர்களை அலசி ஆராய்ந்து தூக்கியுள்ளது. குறிப்பாக, சமூகவலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் களமிறக்கப்பட இருப்பதால், பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கன்டென்டுக்கும், ரணகளத்துக்கும் பஞ்சமிருக்காது என்பதால் அவர்களை பிக்பாஸ் டீம் … Read more

தம்பியை தொடர்ந்து அண்ணனும்.. தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்?

PM Modi Visit Tamil Nadu: தமிழகத்துக்கு வரும் 30 ஆம் தேதி வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, ராமநாதபுரத்தில் நடைபெறும் தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை வரும் 30 ஆம் தேதி  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் நடக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் 30 … Read more

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருப்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி … Read more

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் பரிந்துரை செய்த யுயு லலித்

DY Chandrachud: உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட்டின் பெயரை உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். தற்போதைய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித் நவம்பர் 8 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அடுத்த நாள் (நவம்பர் 9 ஆம் தேதி) நீதிபதி சந்திரசூட் 50வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார் மற்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியில் … Read more

ஐநாவில் ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை இந்தியா நிராகரித்தது ஏன்?

India vs Russia at UN: ஐநாவில் உக்ரைன் விவகாரத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் கலந்துக் கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது, ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியிட அவர் மறுத்துவிட்டார். எனினும், ‘போர்’ என்ற கருத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும் அவர் கூறினார். உக்ரைனில் நான்கு பிராந்தியங்களை மாஸ்கோ இணைத்ததைக் … Read more

குப்பை கொட்டினால் அபராதம்! அபராத பலகை முன்பே குப்பை கொட்டிய மக்கள்!

வேலூர் மாநகராட்சி 60 வார்டுகளில் 10 ஆம் தேதி முதல் குப்பை கொட்டினால் அபராதம் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டது.  ஆனால், காட்பாடி தாராபடவேட்டில் மாநகராட்சி அறிவிப்பு போஸ்டரின் எதிரில் குப்பை கொட்டி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களை சேர்ந்த 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மூலம் குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் குப்பை … Read more