இந்தியாவை பிடிக்குமென்றால் அங்கேயே போய்விடுங்கள்: இம்ரான் கானை சாடிய நவாஸ் ஷரீப் மகள்
மிக அரிய நிகழ்வாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 8, 2022) அன்று இந்தியாவை புகழ்ந்தார். இதற்கு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் ஷெரீப், இம்ரான் கானை கடுமையாக சாடியுள்ளார். பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸின் (பிஎம்எல்-என்) துணைத் தலைவரான மரியம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம், இந்தியாவை அவ்வளவு பிடிக்கும் என்றால், நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்குச் செல்லுமாறு கூறினார். “அதிகாரம் கையை விட்டு போவதைக் கண்டு ஒருவருக்கு … Read more