மீண்டும் ஏற்படுகிறதா கொரோனா அலை?…சீனாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் தொற்று உயர்வு
உலகம் முழுவதும் பரவலாக குறைந்து வந்த கொரோனா தொற்று சீனாவில் கடந்த வாரத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. தொடக்கத்தைப் போலவே 6 ஆயிரம் படுக்கைகளைக் கொண்ட புதிய மருத்துவமனையை அவசரம் அவசரமாக கட்டி சீனா சிகிச்சை அளித்து வருகிறது. கொரோனா பாதிப்பு தொடந்து அதிகரிப்பதால் சீனாவில் 13 மாகாணங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் ஒமைக்ரானும், அதன் திரிபான BA.2 வைரசுமே பெருமளவில் ஏற்பட்டுள்ளன. சீனாவைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. … Read more