ட்ரெண்டான'மல்லிப்பூ’ பாடல் உருவானது எப்படி?… அனுபவம் பகிரும் பாடலாசிரியர் தாமரை

சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் கடந்த 15ஆம் தேதி வெளியான படம் வெந்து தணிந்தது காடு. ஜெயமோகன் எழுதிய ‘ஐந்து நெருப்புகள்’ என்ற கதையை அடிப்படையாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. படம் மட்டுமின்றி படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பா படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த இந்தப் பாடலை தாமரை எழுதியிருந்தார்.  மதுஸ்ரீ பாடியிருக்கிறார். இந்நிலையில் மல்லிப்பூ பாடல் உருவான … Read more

விடியல் இல்லை, விலை ஏற்றம் மட்டுமே உள்ளது: அரசை சாடும் அண்ணாமலை

திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் மக்கள் நலனுக்காக எதையுமே செய்யவில்லை என்றும், பால், மின்சாரம், சிமெண்ட், செங்கல், மணல், என பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டு மக்கள் அவதியில் ஆழ்ந்துள்ளார்கள் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆளும் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.   ‘திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்களில் விலையேற்றம் முன்னிலையில் இருக்கிறது. மக்களின் மேல் அக்கறை கொண்டவர்களை போல … Read more

380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருதயம் எப்படி இருந்தது? அபூர்வ தகவல்கள் தரும் இதயம்

சிட்னி: உலகின் பழமையான இதயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில், 380 மில்லியன் ஆண்டுகள் பழமையான மீன் வகைகளில் இந்த இதயம் கண்டறியப்பட்டுள்ளது. பெர்த்தில் உள்ள கர்டின் பல்கலைக்கழகத்தின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்த அரிய கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. மனித உடல்கள் எவ்வாறு உருவாகியுள்ளன என்பதை வெளிப்படுத்தும் இந்த ஆய்வு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பகுதியில் உள்ள கோகோ அமைப்பில் உள்ள ஆராய்ச்சியாளர்களால் மீன்களின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த புதைபடிமங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் … Read more

சேவையின் அடையாளம்தான் மோடியின் வாழ்க்கை – நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அமித் ஷா

பிரதமர் மோடி இன்று தனது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு அரசியல் கட்சியினர் முதல் கட்சியினர்வரை பலரும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் மத்திய உள்துறை அமைச்சரும், மோடியின் உற்ற நண்பருமான அமித் ஷா தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், “இந்தியா முதலில் என்ற அணுகுமுறை, ஏழைகளின் நல்வாழ்வுக்கான உறுதி உள்ளிட்டவை மூலம் முடியாத பணிகளைக்கூட பிரதமர் மோடி சாத்தியமாக்கியுள்ளார். நல்ல நிர்வாகம்,வளர்ச்சி, தேசப்பாதுகாப்பு, வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான முயற்சிகள் … Read more

ஆத்தாடி… இத்தனை கெட்டப்பா! – சிறுத்தை சிவா படத்தில் சூர்யா புது முயற்சி

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சூர்யாவின் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.  சமீபத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற இந்த நடிகர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.   சூர்யா இப்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார், இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது, மேலும் இந்த படத்தின் பிரம்மாண்டமான மோஷன் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு இருக்கின்றது.  … Read more

பாஜகவின் ஊதுகுழலாக செயல்படும் பச்சமுத்துவின் எம்பி பதவியை பறிக்க வேண்டும்: ஜிஜி சிவா

சென்னை: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பச்சமுத்துவின் எம்பி பதவியை பறிக்க வேண்டும் என்று தேசிய முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜிஜி சிவா கேட்டுக் கொண்டுள்ளார். தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில்  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பச்சமுத்துவிற்கு  பெரம்பலூர்  தொகுதி ஒதுக்கப்பட்ட  நிலையில், பச்சமுத்துவை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தீவிர பிரச்சாரம் … Read more

பாகுபலி நடிகருடன் 'தேவசேனா' அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்?

நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினி, அஜித், விஜய், சூர்யா என தமிழ் நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்த இவர், அருந்ததீ போன்ற பெண் முக்கியத்துவ கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.  இவருக்கு வயது 40. இவரது திருமணம் குறித்து பல்வேறு தகவல்கள் அடிக்கடி செய்தியாகும். மேலும், இவர் நடிகர் பிரபாஸை காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதை இருவரும் உறுதிசெய்யவில்லை.  அனுஷ்கா – பிரபாஸ் ஆகியோர் இணைந்து பில்லா (தெலுங்கு), மிர்சி, பாகுபலி … Read more

திருமாவளவன் பட்ட அசிங்கத்தை நானும் படணுமா? – சீமான் ஆவேசம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாலராக சீமான் இருக்கிறார்.நாடாளுமன்றம், சட்டப்பேரவை என எந்தத் தேர்தல் நடந்தாலும் திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்பது அக்கட்சியின் நிலைப்பாடு. ஆனால் நாம் தமிழர் கட்சி அவ்வாறு செயல்படுவதால் வாக்குகள் பிரிந்துவிடுவதாகவும், அது மாநில நலனுக்கு பாதகமாக அமையும் என்றும் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். அதுமட்டுமின்றி நாம் தமிழர் கட்சி பாஜகவின் பி டீம் என்றும் பேசப்படுகிறது. இந்தச் சூழலில் விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் சமீபத்தில் … Read more

ஜார்ஜ் பொன்னையாவை அடுத்து இந்து சாமியாரை சந்தித்த ராகுல்!

‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்தியாவின் ஒற்றுமைக்கான நடைபயணம்) என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். இதை முன்னிட்டு, கடந்த செப்.7ஆம் தேதி சென்னை வந்த ராகுல் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற ராகுல் அன்று மாலையே தனது நடைபயணத்தை தொடங்கினார். முதல்நாள் நடைபயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் … Read more

மக்களின் பிரச்னையை பிக்பாஸில் தீர்க்கலாம் என நினைக்கக்கூடாது – கமலை வறுத்தெடுக்கும் வானதி

கோவை சிவனந்தகாலனி பகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பிரதமரின் 72ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடுதல் மற்றும் தூய்மை பணியில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தெற்கு தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களை எல்லாம் சீரமைத்து அவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள், அவர்களுடைய வேண்டுகோளின் படி அரசாங்கத்திடம் கேட்க வேண்டிய உதவிகள் என ஒவ்வொரு அங்கன்வாடி சார்பாக நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம் … Read more