நாளை முதல் எரிபொருள் வழங்குவதில் புதிய திட்டம்! அரசாங்கம் தீர்மானம்

எரிபொருளை விநியோகம் செய்வதற்கு டோக்கன் முறையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் திங்கட்கிழமை (27) முதல் நடைமுறைக்கு வரும் எனவும், இந்தச் செயற்பாடுகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை காவல்துறை மற்றும் இலங்கை இராணுவத்தினரின் உதவிகள் பெறப்படும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். தாமதமான எரிபொருள் ஏற்றுமதி குறித்த சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த அமைச்சர், பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய் மற்றும் ஜெட் எரிபொருள் இறக்குமதியில் அமைச்சகத்தின் … Read more

PMB அரிசி நாளை முதல் சந்தைக்கு விநியோகம்

நெல் சந்தைப்படுத்தல் சபை கையிருப்பிலுள்ள நெல்லைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள PMB என்ற அரிசி சந்தைக்கு உத்தியோகபூர்வமாக நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளது. ஐந்து கிலோ மற்றும் 10 கிலோ பொதிகளாக இந்த அரிசி விநியோகிக்கப்படுமென்று விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. பத்தரமுல்லை விவசாய அமைச்சின் வளவில் விற்பனைக் கூடமும் திறக்கப்படவுள்ளது. இங்கு பாலுடன் தொடர்பான தயாரிப்புகள், முட்டை என்பனவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அரிசி பொதிகள் கொழும்பு மாவட்டத்தில் உணவு மேம்பாட்டு சபைக்கு உட்பட்ட 3 … Read more

இலங்கை தேசிய உதைபந்தாட்டக் குழுவிற்கு வீரர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை

20 வயதிற்கு உட்பட்ட இலங்கை தேசிய உதைபந்தாட்டக் குழுவிற்கு வீரர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை நாளையும் நாளை மறுதினமும் நடைபெறும் என்று இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிலையத்தில் குழப்பம்: பொலிஸாரை தாக்கிய இளைஞர்கள் (Video)

திருகோணமலையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற இளைஞர்கள் சிலர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவமொன்று இன்று(25) இடம்பெற்றுள்ளது. திருகோணமலை – கந்தளாய் எரிபொருள் நிலையமொன்றில் எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற இளைஞர்கள் சிலர் குடிபோதையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு பொலிஸார் ஒருவரையும் தாக்க முயன்றுள்ளனர். தாக்குதல் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் – 91ம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் பெருந்திரளான பொதுமக்கள் எரிபொருளுக்காக காத்து கொண்டிருந்துள்ளனர். இந்த நிலையில் சில இளைஞர்கள் முச்சக்கரவண்டிகள் மற்றும் … Read more

மித்தெனிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் சம்பவம்

மித்தெனிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று காலை குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் எம்பிலியப்பிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 45 வயது நிரம்பிய இரு பிள்ளைகளின் தந்தை ஆவார். மித்தெனிய பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். எரிபொருளுக்காக வரிசையில் நிற்பவர்கள் மத்தியில் உணர்ச்சியை தூண்டும் வகையில் திட்டமிட்டு சிலர் குழப்பங்களை விளைப்பிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து பொது மக்கள் அவதானத்துடன் இருக்கும்படி பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இன்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம்

இன்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினமாகும். மேல் மாகாணத்தில் அபாயகர போதைப்பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அபாயரக ஒசௌத தேசிய கட்டுப்பாட்டு சபை சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துக் காணப்படுவதாக சபையின் கல்வி பிரிவு அதிகாரி மற்றும் ஊடகப் பேச்சாளர் சாமர கருணாரட்ன தெரிவித்தார். போதைப்பொருள் பற்றி ஊடகங்களில் வெளியாகும் சில செய்திகள் மக்களை பிழையாக வழிநடத்துகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார். போதைப்பொருள் பாவனையினால் சமூகத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகள் குறித்த … Read more

எரிபொருள் நிலையத்தில் குழப்பம்: பொலிஸாரை தாக்கிய இளைஞர்கள் (Video)

திருகோணமலையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற இளைஞர்கள் சிலர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவமொன்று இன்று(25) இடம்பெற்றுள்ளது. திருகோணமலை – கந்தளாய் எரிபொருள் நிலையமொன்றில் எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற இளைஞர்கள் சிலர் குடிபோதையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு பொலிஸார் ஒருவரையும் தாக்க முயன்றுள்ளனர். தாக்குதல் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் – 91ம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் பெருந்திரளான பொதுமக்கள் எரிபொருளுக்காக காத்து கொண்டிருந்துள்ளனர். இந்த நிலையில் சில இளைஞர்கள் முச்சக்கரவண்டிகள் மற்றும் … Read more

திரு.மஹிந்த சமரசிங்ஹ ,அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் சந்திப்பு

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்ஹ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்தித்துள்ளார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. அமெரிக்காவின் திறைசேரி மற்றும் இராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகளுடனும் மஹிந்த சமரசிங்ஹ இதன்போது பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கை தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி நிலை சம்பந்தமாக அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் தூதுவர் விளக்கமளித்துள்ளார்.

உரத்தை விநியோகிப்பதற்கு விவசாய அமைச்சு விசேட வேலைத்திட்டம்

எதிர்வரும் 7ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை விவசாயிகளுக்கு உரத்தை விநியோகிப்பதற்கு விவசாய அமைச்சு விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதற்கமைவாக ,விவசாய அமைச்சின் கீழ் செயற்படும் அனைத்து நிறுவனங்களையும் சேர்ந்த ஊழியர்களின் விடுமுறைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதியில் இருந்து இரத்துச் செய்யப்படுவதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 65 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரம் எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி நாட்டுக்கு கிடைக்கவுள்ளது. அந்த உரம் எதிர்வரும்; 7ஆம் திகதியிலிருந்து … Read more

எரிபொருள் விலையேற்றத்தின் எதிரொலி! இன்று முதல் அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இலங்கையில் உணவுப்பொதிகள், கொத்துரொட்டி உட்பட ஏனைய அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விடயத்தை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று முதல் விலை அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிற்றுண்டிகள், கொத்து மற்றும் உணவுப்பொதிகள் என்பவற்றின் விலைகளே 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த … Read more