பெட்ரோல் ஒரு லீட்டர் ஆயிரம் ரூபாய்! இரகசிய விற்பனை அம்பலம்: அரசியல் பிரமுகர் ஒருவரும் சிக்கினார்

நாட்டின் சில பகுதிகளில் எரிபொருட்கள் 1000 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தகல்கள் வெளியாகியுள்ளன.  இவ்வாறு அதிக விலைக்கு, இரகசியமாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.   பாதிக்கப்பட்ட அரசியல்வாதி இதேவேளை,  அவசர பயணம் ஒன்றை மேற்கொள்ள எரிபொருள் கிடைக்காததால் கறுப்புச் சந்தையில் ஒரு லீட்டர் பெட்ரோலை 950 ரூபாவுக்கு  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொள்வனவு செய்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சில இரகசிய குழுக்களைச் சேர்ந்தவர்கள் தமது … Read more

நுவரெலியா மக்களுக்கு வீட்டுத்தோட்டம், உணவு பாதுகாப்பு: பிரபலப்படுத்தும் விசேட வேலைத்திட்டம்

நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா மேற்கு பிரதேச மக்கள் மத்தியில் வீட்டுத்தோட்டம் மற்றும் உணவு பாதுகாப்பினை பிரபலப்படுத்தும் விஷேட நிகழ்ச்சி நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் இடம்பெற்றது. நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து உணவின் அவசியம், காய்கறிகள் பயிரிட வீட்டுத்தோட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வீட்டுத்தோட்டத்திற்கு தேவையான விதைகள் மற்றும் பொருட்களும் மக்களுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் நுவரெலியா பிரதேச செயலாளர் விதுர சம்பத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முதல் ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி

சுற்றுலா  இந்திய மகளிர்  மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட்அணிகளுக்கிடையிலான  மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் இந்திய மகளிர்  அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் மூன்று T 20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் T20 ஓவர் போட்டி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (23) நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் … Read more

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தனர். இந்த சந்திப்பு இன்று பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. ஜனாதிபதியுடன் சந்திப்பு பிரதிநிதிகள் குழு இலங்கையில் ஒரு வார காலம் தங்கியிருந்து பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டுவது தொடர்பான கொள்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து நீண்ட ஆய்வு செய்து வருகின்றனர். தற்போதைய நிலைமை குறித்து பிரதமர், … Read more

நாடு முழுவதும் 2.30 மணி நேர மின் துண்டிப்பு

நாடு முழுவதும் ஜூன் 24 முதல் 26 வரை 2.5 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் ஜூன் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் காலை 9.30 மணி முதல் 10 மணி வரை 2.5 மணித்தியாலங்கள் வரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் (A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W) ஜூன் 24ஆம் தேதி மதியம் 12.00 … Read more

அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து! வெளியானது அறிவிப்பு

உர விநியோகத்தை எளிதாக்கும் வகையில் விவசாய அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களின் விடுமுறையும் ஜூலை 06 முதல் 15 வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட 65,000 மெற்றிக் தொன் யூரியா உரம் ஏற்றிச் செல்லும் கப்பல் எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. விவசாயிகளுக்கு உரம் விநியோகம்  எதிர்வரும் ஜுலை 7ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள கமநல அபிவிருத்தி நிலையங்களுக்கு இந்த உரம் கொண்டு செல்லப்பட்டு … Read more

இன்று முதல் 74 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக சுகாதாரப் ஊழியர்களுக்கு எரிபொருள்

நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. எரிபொருளைப் பெறுவதற்குத் தேவையான சுகாதாரப் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் மருத்துவமனை நிர்வாகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பதிவு செய்த சுகாதார ஊழியர்களுக்கு மாத்திரம் இன்று முதல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எரிபொருள் விநியோகிக்கப்படும். இந்த எரிபொருள் விநியோகம் தேர்ந்தெடுக்கப்பட்டு 74 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விநியோகிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு … Read more