சிசிர ஜயக்கொடி சியபத மன்றத்தை கூட்டிணைப்பதற்கான சட்டமூலம் தொடர்பான அறிக்கைக்கு சட்டவாக்க நிலையியற் குழு அனுமதி…

சிசிர ஜயக்கொடி சியபத மன்றத்தை கூட்டிணைப்பதற்கான சட்டமூலம் தொடர்பான அறிக்கைக்கு சட்டவாக்க நிலையியற் குழு திருத்தங்களுடன்  (9) அனுமதி வழங்கியது. இந்த சட்டமூலம் தொடர்பான அறிக்கை 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதியன்று கல்வி அமைச்சரால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதன்படி, குறித்த அறிக்கை சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு நேற்று முன்வைக்கப்பட்டதோடு  இது குறித்து விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சட்டவாக்க நிலையியற் குழுவின் தவிசாளரும் பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் … Read more

மதுபான நிலையங்கள் மூடப்படும்! பொது நிர்வாக அமைச்சின் அறிவிப்பு

மதுபானக் கடைகள், சூதாட்ட விடுதிகள் மற்றும் க்ளப்புகள்  எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  பொது நிர்வாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. சூதாட்ட  விடுதிகளும் மூடப்படும் இம்மாதம் 14ஆம் திகதி அனைத்து மதுபானக் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும்  சூதாட்ட விடுதிகள் ஆகியவற்றை மூடுமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர், எதிர்வரும் 13ஆம் திகதி அரச பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   … Read more

தற்போதைய செலாவணிவீத ஏற்பாடு: பின்னணி, இதுவரையிலான நேர்க்கணிய தாக்கம் , எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள்

இக்குறிப்பு தற்போதைய செலாவணிவீத ஏற்பாட்டிற்கான பின்னணி மற்றும் அது ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள நேர்க்கணிய தாக்கம் மற்றும் எதிர்வரும் காலப்பகுதியில் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள் என்பன தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுபடுத்த எண்ணுகின்றது. நாடு தற்போது மிகவும் சவால்மிக்கதொரு பொருளாதார சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்துள்ள வேளையில் அது வரலாற்றில் மோசமான சென்மதி நிலுவை நெருக்கடியினையும் கடந்து செல்கின்றது. உள்நாட்டு வெளிநாட்டு செலாவணிச் சந்தையில் வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையின் குறைபாட்டிற்கு மத்தியில் இலங்கை ரூபா பெருமளவிலான தேய்மான அழுத்தத்திற்கு உட்பட்டமையானது சமூகத்தில் செலாவணி … Read more

மட்டக்களப்பில் உணவுப்பொருட்கள் பதுக்கல்: தகவல் வழங்க தொலைபேசி இல.

மட்டக்களப்பில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட உணவுபொருட்கள் பதுக்கல் தொடர்பான  நடவடிக்கையின் போது மட்டக்களப்பில் அரிசியினை பதுக்கிவைத்திருந்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஆர்.அன்வர் சதாத் தெரிவித்துள்ளார். மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் அரிசி மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை மாவட்டத்தில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க … Read more

ரணில் பாரம்பரியத்தையும், சுமந்திரன் ஒழுங்கையும் மீறினரா ..! தீர்ப்பு வழங்கப்போகும் சபாநாயகர்!

ரணிலும் சுமந்திரனும் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அனுதாப பிரேரணை தொடர்பான அமர்வில் நாடாளுமன்ற ஒழுங்குகள் தொடர்பான சில விடயங்கள் வெளிப்பட்டன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீ்ர்த்தி அத்துகோரளயின் அனுதாப பிரேரணையின்போது, நாடாளுமன்றில் சாணக்கியனை வன்முறைகளுக்கு ஆதரவானவர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு காரணம், கடந்த மே 20ஆம் திகதியன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, 20ஆவது திருத்தம் மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் என்பவற்றுக்கு ஆதரவளித்தமையே ஆளும் கட்சியினரின் வீடுகள் கடந்த … Read more

தரமான சேவை மற்றும் திருப்தியான பணியாளருக்காக பொது சேவை குறித்து முறையான அவதானத்தை செலுத்தவும்…ஜனாதிபதி தெரிவிப்பு

குறுகிய காலத்தில் தரமான அரச சேவையை வழங்குதல் மற்றும் ஊழியர்களின் திருப்தியை அதிகரிக்கும் நோக்கில் அரச சேவை தொடர்பில் முறையான ஆய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வகிபாகம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட வீட்டுத்தோட்டம் தொடர்பில் நேற்று (10) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். முக்கிய அரச நிறுவனங்களை மாகாணங்களுக்கு பரவலாக்கத் திட்டம்… அரச ஊழியர்களின் … Read more

ஒப்பந்தங்கள் மற்றும் உறுதிமுறிகளை மீறிய மொரட்டுவ பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து 51,649, 961 ரூபா நிதி அறவிடப்பட வேண்டியுள்ளது –

மொரட்டுவ பல்கலைக்கழகத்திலிருந்து கல்விக்கான விடுமுறையைப் பெற்று வெளிநாடு சென்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 35 பேர் ஒப்பந்தங்கள் மற்றும் உறுதிமுறிகளை மீறியமையால் 2021 டிசம்பர் 31ஆம் திகதியாகும்போது அறவிடப்படவேண்டிய தொகை 51,649,961 ரூபா என அரசாங்கப் பொறுப்புகள் பற்றிய குழுவில் புலப்பட்டது.   ஒப்பந்தங்கள் மற்றும் முறிகளை மீறி 08 வருடங்களுக்கு முன்னர் செலுத்தாத விரிவுரையாளர்கள் 16 பேரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய தொகை 23,190, 595 ரூபா என்றும் இங்கு தெரியவந்தது. ஒப்பந்தங்கள் மற்றும் உறுதிமுறிகளை மீறிய விரிவுரையாளர்களின் … Read more

தங்கத்தின் விலையில் சரிவு! இன்றைய தங்க விலை

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 665,680 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த இரு தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சிறு சரிவு ஏற்பட்டுள்ளது.   இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 187,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் … Read more

13 ஆம் திகதி திங்கட் கிழமை விசேட அரசாங்க விடுமுறை தினம்

எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி திங்கட் கிழமை விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை பின்வருமாறு: இதேவேளை 13ஆம்திகதி அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் விடுறை வழங்க்பட்டுள்ளதாக கல்வி அறிக்கையொன்றை விடுத்து அறிவித்துள்ளது. 2022.06.13 සඳුදා දින රජයේ සියළු පාසල් නිවාඩු දිනයක් ලෙස පත්කෙරේ. රජයේ හා රජයේ අනුමත පෞද්ගලික පාසල් සඳහා 2022.06.13 වන දින නිවාඩු දිනයක් ලෙස … Read more