நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி ஆலய திருவிழா: முன்னாயத்த கலந்துரையாடல்

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி ஆலய திருவிழா நடைபெறுவதற்கான சிறப்பான சேவையினை வழங்கும் பொருட்டான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (10.06.2022)  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்தரையாடலில் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவை, அம்புலன்ஸ சேவை, கடற்போக்குவரத்து சேவை , படகுகள் அனுமதி , அரச மற்றும் தனியார் வீதிப்போக்குவரத்து சேவை, அவற்றுக்கான எரிபொருள் ஏற்பாடுகள், சுகாதாரம், மற்றும் குடிநீர் தேவை, மின்சாரத்தேவை, புனரமைக்கவேண்டிய வீதிகள், அமுதசுரபி அன்னதான … Read more

மட்டு. மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கரில் சேதனப் பசளை சிறுபோக நெற்செய்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதனைப் பசளையினை நம்பி சுமார் 80 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக வேளாண்மை செய்கை பண்ணப்பட்டிருப்பதாக அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.யோகவேள் தெரிவித்தார். சேதனப் பசளையை நம்பி செய்கை பண்ணப்பட்டுள்ள சிறுபோக வேளாண்மை நல்ல விளைச்சலைத் தந்துள்ளதாகவும் இரசாயன உரம் கிடைக்கும் பட்சத்தில் மேலும் நல்ல அறுவடையை எதிர்பார்க்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார். அகில இலங்கை விவசாய சம்மேளனம் அண்மையில் விவாசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நடாத்திய பேச்சு வார்த்தையின்போது … Read more

பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தகடு! தோண்டி எடுக்க முற்பட்டவர்களுக்கு நேர்ந்த நிலை

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருபாலை பகுதியிலுள்ள வீடொன்றில் தங்க புதையல் தோண்ட முற்பட்ட 7 பேர் யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கத்தகடு அகழ்வு குறித்த வீட்டின் வளாகத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தகடு புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதனை தோண்டி எடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து வெடிமருந்து … Read more

இலங்கை சனத்தொகையில் 22 வீதமானோருக்கு உணவு நிவாரணம் தேவை

இலங்கை மக்களில் 22 வீதமானோருக்கு உணவு நிவாரணம் தேவையென்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.  இலங்கையின் சனத்தொகையில் 22 வீதமானவர்கள் அல்லது 4.9 மில்லியன் மக்களுக்கு தற்போது உணவு உதவி தேவைப்படுவதாக ஹனா சிங்கர்-ஹம்டி கூறுகையில், குறிப்பிட்டுள்ளார். “குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதையும், அவர்கள் உணவுக்காக பல்வேறு மாற்று வழிகளை கையாண்டுள்ளதை நாங்கள் அவதானித்து உள்ளோம் மேலும் இரசாயன உரம் இல்லாததால் 2021/2022 பெரும் போகத்தில் நெல் அறுவடை 40 … Read more

யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத்திற்கான தேர்தல்

யாழ் பல்கலைக்கழகத்தில் சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர் மாணவர் ஒன்றியத்திற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. தேர்தல் பல்கலையின் 40ம் அணியில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் சி.ஜெல்சின் மற்றும் வி.ஜனார்த்தனன் ஆகிய இருவரும் போட்டியிட்டுள்ளனர். வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் 80% வாக்குகள் பதிவாகியுள்ளன. புதிய தலைவர் 656 பேரில் மொத்தமாக 510 பேர் வாக்களித்துள்ளதோடு, புதிய கலைப்பீட மாணவர் தலைவராக ஜெல்சின் 200 வாக்குகள் வித்தியாசத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். Source link

சர்வதேச நாணய நிதியத்துடன் இம்மாதம் நிறைவடைவதற்கு முன்னர் இணக்கப்பாடு -பிரதமர்

சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாத்தினர் மட்டத்திலான உடன்பாடு இந்த மாதம் முடிவடைவதற்கு முன்னர் எட்டப்படலாமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று மாலை நடைபெற்ற சந்திப்பின் போது இதுதொடர்பாக பிரதமர் தெரிவிக்கையில் நாணய நிதிய பிரதிநிதிகள் குழுவினர் எதிர்வரும் 20ம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக  கூறினார். எதிர் நோக்கப்படும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக, நாட்டில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைத் ஆரம்பிக்கப்போவதாகவும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் மூன்று வேளை … Read more

இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் அவசர வேண்டுகோள் 

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (IFRC) 28 மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு (கிட்டதட்ட 10.4 பில்லியன் ரூபா ) உடனடி நிவாரணம் வழங்குவதற்காகவும், 500,000 பேரின் நீண்டகால மீட்பு பணிக்காகவும் அவசர வேண்டுகோளை முன்வைத்துள்ளது. இலட்சக்கணக்கான மக்கள் உணவு, எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மருந்துப் பற்றாக்குறையை எதிர்கொள்வதால், இலங்கையில் பொருளாதார நெருக்கடி மனிதாபிமான அவசரநிலையாக மாறியுள்ளதாக IFRC இன்று எச்சரித்துள்ளது. “COVID-19 தொற்றுநோய்களின் போது ஏற்கனவே உணவை பெறுவதில் இருக்கும் போராட்டங்களுக்கு மத்தியில் மக்களின் நிலைமை பேரழிவு … Read more

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிப்பு

சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மக்காச்சோள தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமமே இந்த நிலைக்கு காரணம் என அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும் விலைகள் அதிகரிக்கலாம் தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விற்பனை விலை 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.1,200க்கு மேல் விற்பனையாகிறது. விலைகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் … Read more

ரணிலின் உரையில் தவறு!! மறுப்பு வெளியிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம்!

ரணிலின் உரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தவறானது என்றும் அது, நடந்தவற்றின் உண்மையான பிரதிபலிப்பு அல்ல என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் உத்தேச திருத்தங்கள் தொடர்பில் பிரதமர் கூறியது போன்று தமது அமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சட்டத்தரணிகள் சங்க அறிக்கையின்படி, கடந்த புதன்கிழமையன்று பிரதமர் ஆற்றிய … Read more