அரச ஊழியர்கள் தொடர்பில் மற்றுமொரு அறிவிப்பு! பணி நாட்களை குறைக்க மாற்றுத் திட்டம்

வெள்ளிக்கிழமையை, அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் நாளாக பிரகடனப்படுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   அரச ஊழியர்கள்  ஒரு கிழமையில் பணிபுரியும் நட்களை குறைப்பதற்கு   தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  வெள்ளிக்கிழமையில் அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் திட்டம் குறித்து அவதானம்  செலுத்தப்பட்டு வருவதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.  எரிபொருள் பாவனையை குறைக்கும் திட்டம்  இதன்படி, அரச ஊழியர்களை வாரத்தில் 4 நாட்கள் மாத்திரம் … Read more

பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்த 8 மாற்றங்கள்

போக்குவரத்துத் துறையின் மேம்பாட்டிற்காக போக்குவரத்து கட்டமைப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். எட்டு வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் 15ம் திகதியிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்த. போக்குவரத்து அமைச்சு எதிர்பார்த்துள்ளது. பொதுப் போக்குவரத்தில் நிலவும் பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதற்காக அமைச்சர்  துறைசார்ந்த நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தை இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. குறுகிய காலத்தில் பொதுப் போக்குவரத்துத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றி இதன் போது ஆராயப்பட்டது. எரிபொருள் … Read more

இலங்கையின் விவசாயத் துறையின் மேம்பாட்டிற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு

இலங்கையில் விவசாயத் துறையை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்திற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனைக் கூறினார். இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை 3ஆம் திகதி இடம்பெற்றது. 60 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் அனுமதி வழங்கியுள்ளார். ஓமானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் உரத்தையே இலங்கைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கோபால் பாக்லே தெரிவித்தார். … Read more

இலங்கை அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது குறித்து வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையில் மீண்டும் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதன்படி, அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது. குறைக்கப்படும் ஓய்வுபெறும் வயதெல்லை கடந்த ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்து. எனினும் 55 வயதில் தங்களுடைய சுய விருப்பத்திற்கு அமைய ஓய்வு பெறமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 3 வருடங்களாக குறைத்து 62 ஆக … Read more

உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக,உணவு உற்பத்திக்காக வீட்டுத் தோட்ட உற்பத்தி திட்டம்

தட்டுப்பாடு நிலவும் உணவுப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்காக வீட்டுத் தோட்டச் செய்கையை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான கிராமங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக இது நடைமுறைப்படுத்தப்படுமென்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். தற்போதைய சந்தர்ப்பத்தில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். கிராம உத்தியோகத்தர்கள், விவசாய அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் இந்த வேலைத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும். விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதைத் தடுக்கும் வகையில் சிலர் செயற்படுவதாக அமைச்சர் … Read more

உடலில் சிவப்பு கொப்புளங்கள் ஏற்படலாம்! குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இலங்கையில் உள்ள பெற்றோர்களுக்கு சுகாதார அதிகாரிகள் அவசர அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.   இதன்படி, கொழும்பு உள்ளிட்ட பல பிரதேங்களில் உள்ள சிறுவர்களுக்கு தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.  உடலில் சிவப்பு கொப்புளங்கள் வைரஸினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதாக குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நோய் இலகுவாகப் பரவும் எனவும், ஒரு தடவை தொற்றுக்கு உள்ளான சிறுவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. … Read more

சீனத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரை மரியாதை நிமித்தம் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கைக்கான சீனத் தூதருடன் 2022 ஜூன் 02ஆந் திகதி அமைச்சில் வைத்து கலந்துரையாடினார். இச் சந்திப்பின் போது, தூதுவர் ஜென்ஹோங் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள் குறித்து விளக்கியதுடன், இருதரப்பு ஈடுபாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினார். குறிப்பாக தற்போதைய சூழ்நிலையின் போது சீனாவின் தாராளமான உதவிகளையும் ஆதரவையும் பாராட்டிய அதே வேளையில், இலங்கையில் பொருளாதார சவால்களைத் தணிப்பதற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு சீன அரசாங்கத்திடம் … Read more

நாட்டின் சில பிரதேசங்களின் நாளைய தினம் முற்றாக முடங்கும் பேருந்து சேவை

நாட்டில் சில பகுதிகளில் நாளையதினம் தனியார் பேருந்து சேவை முழுமையாக முன்னெடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.   தனியார் பேருந்து சேவை முடங்கும் பிரதேசங்கள்  தென் மாகாணம், கம்பஹா மாவட்டம், மன்னார், வவுனியா, கேகாலை, மாவனல்லை, பொலன்னறுவை, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் முழுமையாக பேருந்து சேவையில் ஈடுபடாது.  குறித்த பகுதிகளின் டிப்போக்கள் ஊடாக டீசல் விநியோகம் செய்யப்படாத காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் … Read more

எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிப்பு! ஏழாயிரம் ரூபாவை அண்மித்தது

லாஃப் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.   இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 6,850 ரூபாவாகவும், 5 கிலோகிராம் 2,740 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  உடனடி விநியோகத்திற்கு நடவடிக்கை  3500 மெட்ரிக் டன் லாஃப் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நேற்று வந்தடைந்தது. இந்த நிலையில் குறித்த சமையல் எரிவாயு கொள்கலன்களை மக்களுக்கு உடனடியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லாஃப் சமையல் நிறுவனம் அறிவித்துள்ளது. Source link