ஆயிஷா படுகொலை வழக்கு – சந்தேகநபர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி பாத்திமா ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் நாளை (ஜூன் 1ம் திகதி) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் நேற்று (30) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ‘கொத்து பாஸ்’ என்ற சந்தேக நபர் இன்று (31) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாணந்துறை நீதவான் ஜெயருவன் திஸாநாயக்க இந்த உத்தரவை … Read more

எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்தத எச்சரிக்கை

நாட்டின் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, நுவரெலியா, மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இதுபற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, புளத்கொஹுபிட்டிய, வரக்காபொல ஆகிய நகரங்களுக்கும், மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல, பிட்டபெத்தர ஆகிய பகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் கிரி-அல்ல, பெல்மடுல்ல, அயகம, நிவித்திகல ஆகிய பிரதேசங்களிலும் மண்சரிவு அபாயம் காணப்படுகிறது. இரத்தினபுரி மாவட்டத்தின் அலபாத்த, கலவான, குருவிட்ட, எஹலியகொட ஆகிய நகரங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு பற்றிய அறிகுறிகள் தென்படுமாயின் அங்குள்ளவர்கள் உடனடியாக … Read more

துமிந்த சில்வாவிற்கு கோட்டாபய வழங்கிய பொது மன்னிப்பை இடை நிறுத்தி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இடைக்கால உத்தரவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய வழங்கிய பொது மன்னிப்பின் செயற்பாட்டை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது. இலங்கையின் உயர்நீதிமன்றம் இது தொடர்பில் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. மரண் தண்டனை தீர்ப்பு 2016, செப்டெம்பர் மாதம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் அவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும் 2021, ஜூன் 24 ஆம் திகதியன்று அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட ஜனாதிபதி மன்னிப்பின் … Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களிடம் மீண்டும் விசாரணை

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தொடர் பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து சந்தேக நபர்களிடமும் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்ற சட்டமா அதிபரின் உத்தரவிற்கு அமைய அந்த சந்தேக நபர்களை மூன்று மாதங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் டீ. என். எல். மஹவத்தை நேற்று (30) உத்தரவிட்டுள்ளார். இதன்படி, காத்தான்குடியைச் சேர்ந்த ஆதம் லெப்பை அஹமட் அர்ஹம், முஹம்மட் ரபீக் ரிஸ்பான், முஹம்மது மொஹொமிதீன் முஹம்மது றிஸ்வான், … Read more

காகித பயன்பாட்டை மட்டுப்படுத்த இணையவழி தொழில்நுட்பம் முக்கியமானது

எரிபொருள் மற்றும் எரிசக்தியை சேமிக்கவும் மாற்றுப் போக்குவரத்து முறைகளை பயன்படுத்துவதற்கு வசதியாகவும், அரச அலுவலகங்களுக்கு சமூகமளிக்கையில் சீருடைக்கு பதிலாக வசதியான ஆடையில் கடமைக்கு சமூகமளிக்க அனுமதிக்கப்பட வேண்டுமென பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார். நாடு என்ற ரீதியில் இன்று சவாலான நிலையை எதிர்நோக்கும் இத்தருணத்தில் பாரம்பரிய அரச சேவைகளுக்கு அப்பால் சென்று அனைவரும் தமது சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் தனது கடமைகளை … Read more

நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு அறிவித்தல் : நீடிக்கப்பட்ட அபாய எச்சரிக்கை

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இது குறித்து விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.  மழைவீழ்ச்சி இதற்கமைய, மேல்,சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பாகங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பாகங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் … Read more

மின்சக்தி அமைச்சர் – இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகருக்கு இடையில் கலந்துரையாடல்

மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton ஆகியோருக்கு இடையே கடந்த 30 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது இலங்கை எரிசக்தி துறையில் தற்போதைய நெருக்கடி முகாமைத்துவ திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அவசர மற்றும் நீண்ட கால திட்டங்கள் குறித்தும் இக்கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைக்கு நியூசிலாந்து எவ்வாறு … Read more

மலேசியா தொழிற் சந்தையை அடிப்படையாக கொண்டு பயிற்சி நிலையம்

மலேசியாவில் தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு விசேட பயிற்சி நிலையம் ஒன்றை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கைக்கான மலேசியா உயர்ஸ்தானிகர்  Tan Yang Thai உடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதுதொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு மலேசியாவில் பயிற்சி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்றும், அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து பயிற்சி நிலையத்தை விரைவில் … Read more

இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் பணவீக்கம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் முக்கிய பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளது. இது மே மாதத்தில் 39.1 சதவீதமாக உயர்ந்துள்ளதென இன்றைய தினம் வெளியான புதிய புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது. அதிகரிக்கும்  பணவீக்கம் இதேவேளை, மே மாதத்தில் உணவுப் பணவீக்கம் 57.4 சதவீதமாக பதிவாகியுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. மே மாதத்தில் உணவு அல்லாத பணவீக்கம் 30.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. பணம் அச்சிட்டால் பணவீக்கம் மேலும் உயர்வடைந்து பொருட்களின் விலையில் பாரிய அதிகரிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Source link