இலங்கையின் நிலை குறித்து பிரித்தானியா வெளியிட்ட அறிவிப்பு

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சவால்களைத் தீர்ப்பதற்கு அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் கண்டறிய இலங்கையின் அனைத்துத் தரப்புகளுக்கும் பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் நாடாளுமன்ற துணைச் செயலாளர் விக்கி ஃபோர்ட் இதனை தெரிவித்துள்ளார். மே 9 அன்று அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து வன்முறை வெடித்ததில் இருந்து இலங்கையின் நிலைமையை பிரித்தானியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியா அரசு வெளிநாடுகளில் உள்ள … Read more

பொலிஸார் தாக்கியதாக கூறி கிளிநொச்சியில் ஒருவர் வைத்தியசாலையில் (VIDEO)

எரிபொருள் நிரப்புவதற்காக வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி மீது இன்று பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.  சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டதாக தெரிவித்து கல்லாற்று பிரதான வீதியில் வைத்து தாக்கப்பட்டதாக தெரிவித்து சாரதியொருவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.  சம்பவம் தொடர்பாக டிப்பர் வாகன உரிமையாளர் தெரிவிக்கையில், எரிபொருள் நிரப்புவதற்காகவே டிப்பர் வாகனம் தனது வீடு நோக்கி வந்ததாகவும், எனினும் வீதியில் சென்ற பொலிஸார் … Read more

வங்கிகள் ஊடாக டொலர்களை வழங்க மத்திய வங்கி இணக்கம் – அமைச்சர் வெளியிட்ட தகவல்

வங்கிகள் ஊடாக இறக்குமதியாளர்களுக்கு டொலர்களை வழங்குவதாக மத்திய வங்கியின் ஆளுநர் உறுதியளித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அத்தியாவசிய பொருட்களுக்கு தேவையான டொலர் வங்கிகளால் வழங்கப்படும். தேவையான இறக்குமதிகள் வெற்றிகரமாக தொடர வழிவகை செய்யப்படும் என மத்திய வங்கி ஆளுநர் உறுதியளித்துள்ளார். சராசரியாக, அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய ஒரு மாதத்திற்கு சுமார் 100-125 மில்லியன் … Read more

அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்…….  

அமைச்சரவை அமைச்சுக்களின் புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (24) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில்  வைத்துக் கையளிக்கப்பட்டன. புதிய அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர்களின் பெயர்ப் பட்டியல் பின்வருமாறு. 01- திரு. ஆர்.டபிள்யூ.ஆர். பேமசிறி             –     போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு 02- திரு. எம்.எம்.பி.கே. மாயாதுன்னே          –     பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மாகாண                                 … Read more

இவர்களுக்கு மாத்திரமே அனுமதி! குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு

 ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது  திகதி மற்றும் நேரம் ஆகியவற்றை முன்பதிவு செய்து கொண்டு வருமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 17ஆம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், பலர் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வருவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.  ஒரு நாள் மற்றும் சாதாரண கடவுச்சீட்டு வழங்கும் சேவையின் கீழ் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு … Read more

எரிபொருள் விலை சூத்திரம்

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை எரிபொருள் விலை சூத்திரம் அமுல்படுத்தப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், போக்குவரத்து கட்டண திருத்தம் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, கடந்த மூன்று நாட்களில் நாடளாவிய ரீதியில் உள்ள 1044 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் மற்றும் பெற்றோல் … Read more

மூன்றாம் தரப்பினரிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம்

மூன்றாம் தரப்பினரிடமிருந்து பெற்றோலிய பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பிட்ட சிலர் எரிபொருள் சேகரிப்பில் ஈடுபட்டு, கலப்படம் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறான வியாபார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் எனவும், அவற்றை உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கைக்கு உதவி வழங்கவுள்ளதாக உறுதியளித்த அமெரிக்காவின் பெரும்புள்ளி

பொருளாதார நெருக்கடியால் நலிவடைந்துள்ள இலங்கைக்கு உதவி செய்ய அமெரிக்காவின் முன்னாள் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் சமந்தா முன்வந்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் உரையாடிய போதே இந்த உறுதிமொழியை அவர் வழங்கியுள்ளார். கலந்துரையாடலின் போது சமகால நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் , G7 நாடுகள் போன்ற அமைப்புகளுடன் நெருங்கி செயற்படவுள்ளதாகவும் சமந்தா பவர் உறுதியளித்தார் . இந்த மாத தொடக்கத்தில் அரசியல் அமைதியின்மையால் கொல்லப்பட்ட அல்லது … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப பேச்சுவார்த்தை நிறைவு

இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான தொழில்நுட்ப கலந்துரையாடல்களை இன்று நிறைவு செய்வதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. வீடியோ தொழில்நுட்பத்தினூடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பேச்சாளர் ஜெரி ரைஸ் இதனை தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கு உதவுவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு எரிபொருள்

எரிபொருட்கள் இல்லாமல், வயல் உழுதல் மற்றும் பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ள விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம், எதிர்வரும் இரு தினங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதியளித்துள்ளார். அதன்படி விவசாயிகளுக்கு கலன்களுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். விவசாய அமைச்சில் நேற்று கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.