நாளை மற்றுமொரு விசேட வர்த்தமானி அறிவித்தல் – வெளியாகியுள்ள தகவல்

அரச சேவையின் அத்தியாவசிய கடமைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களை மாத்திரம் அழைக்குமாறு அறிவிக்கும் அரச நிர்வாக அமைச்சின் விசேட (24) வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட உள்ளார். சேவைக்கு அழைக்கப்பட வேண்டிய அத்தியவசிய உத்தியோகத்தர்களை தீர்மானித்தல் மற்றும் அதனை நிறுவன தலைவருக்கு வழங்குதல் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   … Read more

பயன்படுத்தப்படாத அனைத்து காணிகளையும் பயிர் செய்கைக்காக பயன்படுத்த உத்தரவு

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள பயன்படுத்தப்படாத அனைத்து காணிகளையும் பயிர் செய்கைக்காக பயன்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடிக்கு தீர்வாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், எந்தவொரு நிறுவனத்திற்கும் வெற்று நிலம் இருக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். முதலீட்டிற்காக ஒதுக்கப்பட்ட காணிகள் இதுவரையிலும் பயன்படுத்தப்படாவிடின் காணிகளை உடனடியாக மீளப் பெற்று புதிய முதலீட்டாளர்களிடம் கையளிக்க … Read more

புதிய அமைச்சரவை பேச்சாளரும், இணைப் பேச்சாளர்களும் நியமனம்

புதிய அமைச்சரவை பேச்சாளர் ஒருவர் மற்றும் இணை அமைச்சரவை பேச்சாளர்கள் மூவர் இன்று (23) கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சரவை பேச்சாளராக வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள் பெயரிடப்பட்டுள்ளார். விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனூஷ நாணயக்கார, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் இணை அமைச்சரவை பேச்சாளர்களாவர். மொஹான் … Read more

தேசபந்து தென்னகோனுக்கு இடமாற்றம்! சட்டமா அதிபர், பொலிஸ் அதிபருக்கு பணிப்பு

 மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். காலி முகத்திடல் போராட்டத்தின் மீது கடந்த மே 9ஆம் திகதியன்று நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையில் இடையூறுகள் விளைவிக்கப்படுவதை தடுப்பதற்காகவே இந்த இடமாற்ற பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. Source link

மட்டக்களப்பு மாநகர சபையினால் சூரிய சக்தியில் இருந்து மின்சாரத்தை பெறும் திட்டம்

மட்டக்களப்பு மாநகர சபையினால் சூரிய சக்தியில் இருந்து மின்சாரத்தை  (Solar panel) பெறும் திட்டம் உலகவங்கி அனுசரணையுடன் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. மட்டக்களப்பு மாநகர சபை சந்தைக் கட்டிடத் தொகுதியின் மேல் கூரையில் இந்த சூரிய மின் பிறப்பாக்கி தகடுகள் (Solar panel) பொருத்துவதற்கான கள ஆய்வு இன்று இடம்பெற்றது. சுமார் 08 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் இந்த சூரிய மின் திட்டத்தின் மூலம் 40 கிலோ வாட்ஸ் அளவிலான மின்சாரத்தினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தற்சமயம் ஏற்பட்டுள்ள மின்சார … Read more

விஜித ஹேரத்தை தாக்க முயற்சித்த சனத் நிஷாந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை தாக்க முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது. அலரி மாளிகைக்கு எதிரிலும் காலிமுகத் திடலிலும் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சனத் நிஷாந்த, சிறைச்சாலை அதிகாரிகளால் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். அரசியல்வாதிகளின் வீடுகள், சொத்துக்கள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விவாதத்தின் … Read more

பயன்படுத்தப்படாத அனைத்து காணிகளையும் பயிர் செய்கைக்காக பயன்படுத உத்தரவு

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள பயன்படுத்தப்படாத அனைத்து காணிகளையும் பயிர் செய்கைக்காக பயன்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடிக்கு தீர்வாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், எந்தவொரு நிறுவனத்திற்கும் வெற்று நிலம் இருக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். முதலீட்டிற்காக ஒதுக்கப்பட்ட காணிகள் இதுவரையிலும் பயன்படுத்தப்படாவிடின் காணிகளை உடனடியாக மீளப் பெற்று புதிய முதலீட்டாளர்களிடம் கையளிக்க … Read more

புதிய வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன் புதிய வெகுசன ஊடக அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள், அதற்கு சிறிது நேரத்தின் பின்னர் பொல்ஹேன்கொட வெகுசன ஊடக அமைச்சிற்கு வருகை தந்து உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்னரும் வெகுசன ஊடக அமைச்சராக பதவி வகித்த கலாநிதி குணவர்தன, வெகுசன ஊடக அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராகவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ … Read more

இலங்கையில் தொடர்பில் சாதகமான தகவலை வெளியிட்ட மத்திய வங்கி

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி விரையில் சாதகமான நிலையை எட்டும் என இலங்கை மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் பொருளாதார ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் உள்ளிட்ட தற்போதைய நடவடிக்கைகள் வெற்றியடையும் பட்சத்தில் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேசத்துடான பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால் அடுத்த 12 மாதங்களில் பொருளாதார ஸ்திரத்தன்மை அடையும் சாத்தியப்பாடுகள் தென்படுவதாக மத்திய … Read more

காலி முகத்திடல் வன்முறையின் பின்னணியில் இவர்தான்! அநுர பகிரங்க அறிவிப்பு

காலி முகத்திடலில் நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டமைக்கு முழுமையாக பொறுப்புக் கூறவேண்டியது மகிந்த ராஜபக்சதான் என  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  அவர்தான் வன்முறையை ஏற்படுத்திய காடையர்களை அலரிமாளிகைக்கு வரவழைத்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு அங்கு  மதுபானமும், பொல்லுகளும் வழங்கப்பட்டு அவர்கள்  ஏவிவிடப்பட்டுள்ளனர். அதற்கு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த உள்ளிட்ட உறுப்பினர்கள் காரணமாக உள்ளனர். பின்னர் … Read more