காலி முகத்திடல் வன்முறையின் பின்னணியில் இவர்தான்! அநுர பகிரங்க அறிவிப்பு
காலி முகத்திடலில் நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டமைக்கு முழுமையாக பொறுப்புக் கூறவேண்டியது மகிந்த ராஜபக்சதான் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அவர்தான் வன்முறையை ஏற்படுத்திய காடையர்களை அலரிமாளிகைக்கு வரவழைத்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு அங்கு மதுபானமும், பொல்லுகளும் வழங்கப்பட்டு அவர்கள் ஏவிவிடப்பட்டுள்ளனர். அதற்கு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த உள்ளிட்ட உறுப்பினர்கள் காரணமாக உள்ளனர். பின்னர் … Read more