இன்று அதிகாலை முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

இன்று (24) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (24) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக ஒக்டென் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாவாகவும், ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது

ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 400 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.