இலங்கை வங்கிகளின் வட்டி விகிதம் மேலும் உயர வாய்ப்பு

இலங்கை வங்கிகளின் வட்டி விகிதம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான தீர்மானம் இன்று மத்திய வங்கியின் ஆளுநரால் அறிவிக்கப்படும் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. 2022 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வை ஆரம்பிக்கும் வகையில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நந்தலால் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் … Read more

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு ,இன்று தமிழ் நாட்டில் போராட்டம்

  பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்த உள்ளனர். மாநிலம் முழுக்க பல முக்கிய இடங்களில் இன்று (19) தமிழக காங்கிரஸ் கட்சியினர் சார்பாக வாயில் வெள்ளை துணி கட்டி அறப்போராட்டம் நடத்தப்பட உள்ளது.பெரும் போராட்டம் மற்றும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 வருடமாக சிறையில் இருந்த பேரறிவாளன் நேற்று விடுதலை செய்யப்பட்ட்டார்.இது தொடர்பாக காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் கே எஸ் … Read more

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் இன்று

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கiடையிலான   டெஸ்ட்  கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் (19) இன்றாகும். முதலாவது இன்னிங்க்காக துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி நேற்றைய தினம் ஆட்ட நிறைவின் போது  3 விக்கெட் இழப்புக்கு 385 ஓட்டங்களை எடுத்திருந்தது. 3 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 318 ஓட்டங்கள் பெற்றிருந்தது. பங்களாதேஷ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியில் … Read more

நினைவேந்தலுக்கு சென்ற பேருந்தை திடீரென சோதனையிட்ட புலனாய்வாளர்களால் முறுகல் நிலை (VIDEO)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குச் சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் புலனாய்வாளர்களுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவேந்தல் இன்று அனுஷ்ட்டிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து இன்று காலை 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நோக்கி பேருந்தில் பயணித்துள்ளனர். இந்த நிலையில், மாணவர்களை ஏற்றுவதற்காக காலை 9 மணியளவில் பரந்தன் சந்தியில் பேருந்து நிறுத்தப்பட்டபோது நபர் ஒருவர் திடீரென பேருந்தில் ஏறி கண்காணித்துவிட்டு இறங்கியதுடன், அருகிலிருந்த கடையொன்றிற்குள் சென்றுள்ளார். இதன்போது … Read more

நுவரெலியா மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

நுவரெலியா மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. தற்போது நிலவும் நிலைமைகள் காரணமாக அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிலைமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்த கலந்துரையாடலில் பொலிஸ் அதிகாரிகள், சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், விவசாயத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கடனை அடைக்க முடியாத நிலையில் இலங்கை – பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 5.5 பில்லியன் டொலர்கள் அடுத்த 12 மாதங்களில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், பிரதமரிடம் உள்ள திட்டங்கள் என்னவென்றும் கேள்வியெழுப்பினார். இந்நிலையில், குழுக்கள் ஊடாக தனது பூரண ஆதரவை வழங்குவதாகவும், அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை எனவும் நாடாளுமன்ற … Read more

இலங்கை அரசியல்வாதிகள் யாருக்கும் சர்வதேச சமூகம் அடைக்களம் கொடுக்க கூடாது – யஸ்மின் சூக்கா

இலங்கையில் முழுமையான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும் என முன்வைக்கப்படும் கோரிக்கைகள் வெறுமனே அதிகாரவர்க்கத்தால் மேற்கொள்ளப்படும் ஊழலையும் பொருளாதாரக் குற்றங்களையும் மட்டுமே கையாழ்வதற்கானதாக அல்லாமல் பெரும் வன்கொடுமைக்குற்றங்களிலில் ஈடுபட்டு தண்டனை பெறாமல் தப்பியிருப்போர் தொடர்பிலும் தமிழர்களது நீதிக்கும் பொறுப்புக்கூறலுக்குமான நீண்ட போராட்டத்திற்கும் தீர்வுவழங்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும் என இலங்கையில் நடைபெற்றுவரும் பாரிய மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்திவரும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் அமைப்பானது கூறியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட 2009 இறுதிப்போரின் இந்தச் சோகமான ஆண்டுதினத்தை நினைவுகூரும் … Read more

இலங்கை போன்று தோற்றமளிக்கும் இந்தியா – ராகுல் காந்தி எச்சரிக்கை

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து பாஜக அரசாங்கத்தை தாக்கி பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா இலங்கை போன்று தோற்றமளிக்கிறது என்று எச்சரித்துள்ளார். அந்தவகையில், வேலையின்மை, எரிபொருள் விலை மற்றும் வகுப்புவாத வன்முறையின் வரைபடங்களைப் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்துள்ளார். “மக்களை திசை திருப்புவது உண்மைகளை மாற்றாது. இந்தியா இலங்கையைப் போன்றே தோற்றமளிக்கிறது,” என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பாஜக அரசு தனது தோல்விகளையும், … Read more

அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள முடிவு – மைத்திரியின் தீர்மானத்தை மீறும் சிரேஷ்ட உறுப்பினர்கள்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் அமைச்சுப் பதவிகளைப் பெற்று அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கட்சிக்குள் கடும் போராட்டத்தை முன்னெடுத்துளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்த திஸாநாயக்க, ஜகத் புஷ்ப குமார, சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட பலர் இந்த குழுவில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளும் மூன்று பிரதி அமைச்சுப் பதவிகளும் மாத்திரமே … Read more