அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள முடிவு – மைத்திரியின் தீர்மானத்தை மீறும் சிரேஷ்ட உறுப்பினர்கள்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் அமைச்சுப் பதவிகளைப் பெற்று அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கட்சிக்குள் கடும் போராட்டத்தை முன்னெடுத்துளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்த திஸாநாயக்க, ஜகத் புஷ்ப குமார, சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட பலர் இந்த குழுவில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளும் மூன்று பிரதி அமைச்சுப் பதவிகளும் மாத்திரமே … Read more

புத்த ஜெயந்தி நன்னாளில் பிரதமர் நரேந்திர மோடி லும்பினிக்கு விஜயம்

புனித புத்த ஜெயந்தி தினமான 2022  மே மாதம்  16ஆம் திகதி புத்த பெருமானின் பிறப்பிடமான லும்பினிக்கு  மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விஜயம் மேற்கொண்டார். நேபாள பிரதமர் மாண்புமிகு ஷேர் பகதூர் தூபாவின் அழைப்பை ஏற்று இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 2.      பிரதமர் மோடி  அவர்கள்,  பிரதமராக லும்பினிக்கு மேற்கொண்ட தனது முதல் விஜயத்தை, புத்த பெருமான் பிறந்த இடத்தில் அமைந்திருக்கும் புனித மாயாதேவி கோயிலில் இடம்பெற்ற சிறப்பு பிரார்த்தனையுடன் ஆரம்பித்தார். புத்தர் பிறந்த இடம் லும்பினி என்பதற்கான முதல் கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அசோகத் தூணையும் இந்திய மற்றும் … Read more

நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சர்வகட்சிகளை உள்ளடக்கிய அரசாங்கம் அவசியம்

கடந்த 9ம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற விவாதம் இரண்டாவது தினமாக இன்றும் நடைபெற்றது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சர்வகட்சிகளை உள்ளடக்கிய அரசாங்கத்தின் அவசியத்தை பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா வலியுறுத்தினார். சகல சந்தர்ப்பங்களிலும் மக்களின் பக்கம் நின்று பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் கூறினார். சட்டத்தை அமுல்படுத்துவதில் பொலிசார் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென்று விவாதத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரஜனாதிபதி, பதவியிலிருந்து … Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! இலங்கை நாடாளுமன்றில் ஒரு நிமிட அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நினைவுக்கூறும் வகையில் இன்று நாடாளுமன்றில் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், இன்று தமது நாடாளுமன்ற உரையின்போது, இந்த அஞ்சலி நிகழ்வுக்கான அனுமதியை, சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரிடம் கோரிய நிலையில் அஞ்சலி நிகழ்வு நிகழ்த்தப்பட்டது, இந்த நிகழ்வு நிறைவடைந்த பின்னர், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுந்து தமிழ்தேசியக்கூட்டமைப்பினர், முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக இந்த ஒரு நிமிட அஞ்சலி செலுத்தியதாக குறிப்பிட்டார். எனவே … Read more

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை வெற்றிகரமாக நடாத்துவதற்கான அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன

நெருக்கடியான சூழலிலும் கூட க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 23(திங்கட்கிழமை) தொடக்கம் யூன் மாதம் 01 ஆம் திகதி வரை நடாத்துவதற்குத் தேவையான அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன அவர்கள் தெரிவித்துள்ளார். ஆணையாளர் இதுதொடர்பாக இன்றைய தினம் (18) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடாத்துதல் தொடர்பாக மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர்களைத் தெளிவுபடுத்தும் ஊடகக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார். பாடசாலை … Read more

இரண்டு வாரங்கள் தாருங்கள்! வழிக்கு கொண்டு வருகிறேன்! -ரணில் நாடாளுமன்றில் கோரிக்கை!

இன்னும் இரண்டு வாரங்களில் அரசாங்க கட்சியை ஒரு நிலைப்பாட்டுக்கு கொண்டு வரமுடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த கால அவகாசத்துள் ஆளும் மற்றும் எதிர்கட்சி என்ற இரண்டு தரப்பையும் ஒரு வழிப்படுத்தமுடியும் என்றும் ரணில் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே ரணில் விக்கிரமசிங்க இ்தனை தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவின் சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஆளும் கட்சி ஆதரவு வழங்குவதாக கூறியபோதும், ஆளும் கட்சி இன்னும் … Read more

கொல்கத்தா – லக்னோ அணிகளுக்கிடையில் அரையிறுதிக்கு தகுதி காணும் போட்டி இன்று

மும்பை டி.ஒய் பட்டீல் மைதானத்தில் இன்று (18) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் IPL 66 ஆவது லீக் போட்டியில், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணியும் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் விளையாடுகின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 10 அணிகளுக்கும் தலா 13 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் இன்னும் ஒரு போட்டியில் விளையாடவுள்ளது. லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி; சுற்றுக்கு தகுதி பெறும். குஜராத் டைட்டன்ஸ் … Read more

எரிவாயு விநியோகத்தில் தாமதம் – வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்

எரிவாயு விநியோக நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என்று லிட்ரோ நிறுவனம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. நேற்று காணப்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கப்பலில் இருந்து எரிவாயுவை தரை இறக்குவதில் தடை ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அதனை தரை இறக்குவதற்கு இன்னும் 03 நாட்கள் தேவைப்படும் எனறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்தவுக்காக வந்து சவப்பெட்டி வாகனத்தில் ஊர் திரும்பிய உறுப்பினர்கள்

கடந்த 9ஆம் திகதி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க அலரி மாளிக்கைக்கு வந்தவர்கள் சவப்பெட்டிகளை ஏற்றி செல்லும் வாகனத்தில் ஊர் திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடலில் அமைதி ஆர்ப்பாட்டத்தில் தாக்குதல் நடத்தியமையினால் வன்முறையாக மாறியது. இந்த நிலையில் தாக்குதல் மேற்கொள்வதற்கு வந்த சிலரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சிலர் பேரே ஏரியில் தள்ளிவிட்ட காட்சிகள் வெளியாகியிருந்தது. இவர்களில் கம்பஹா மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உட்பட நால்வர் போராட்டக்காரர்களால் … Read more