கண்ணீரில் நனையும் முள்ளிவாய்க்கால் மண்! கதறியழும் உறவுகள் (Live)
முல்லைத்தீவு – முள்ளிவாய்காலில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 13 வருடங்களுக்கு பின்னரும் கண்ணீருடன் இந்த நினைவேந்தல் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வரும் அதேவேளை முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறும் பிரதான நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வடக்கு, கிழக்கினை சேர்ந்த பலரும் படையெடுத்து வருகின்றனர். இதேவேளை அப்பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது. Source link