பொது கணக்கு மீதான குழு (கோப்) வின் தலைவர் பதவி எதிர்க் கட்சிக்கு …
அரச கணக்கீட்டு குழுவின் (கோப்) தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற குழுக்களின் தலைவர் பிமல் ரத்னாயக்க இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய பாராளுமன்ற குழுக்களின் தலைவர்; “அரச கணக்கீட்டுக் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். அது போல் அரச கணக்கீட்டுக் குழுவின் அங்கத்தவர்களின் எண்ணிக்கையை நிலையியற் கட்டளையை விட கூடுதலாக அதிகரித்துள்ளோம்” என்றும் குழுக்களின் தலைவர் பிமல் ரத்னாயக்க மேலும் சுட்டிக் காட்டினார்.