இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஜெய்கா தலைவர் பாராட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) தலைவர் கலாநிதி தனக்கா அகிஹிக்கோவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. புதிய பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமான செயலாக இருந்தாலும் இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பை கலாநிதி தனக்கா அகிஹிக்கோ பாராட்டினார் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புத் திட்டம், இலகு ரயில் திட்டம் மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட ஜப்பானிய … Read more

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கைக்கு மாபெரும் வெற்றி

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நேற்று (14) நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடியதுடன், 49 ஓவர்களில் அனைவரும் ஆட்டமிழந்து 266 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர். துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக  Rahmat Shah 65 ஓட்டங்களையும், Azmatullah Omarzai 54 ஓட்டங்களையும், Rahmanullah Gurbaz 48 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணி சார்பில் பிரமோத் … Read more

இலங்கை பொருளாதார வளர்ச்சியின் கவர்ச்சிகரமான மையமாக திகழ்கிறது… – ஜைக்கா நிறுவனத்தின் தலைவர்

இலங்கையில் ஜைக்கா நிறுவனத்தின் புதிய அபிவிருத்தி திட்டங்கள்.. இலங்கையை உலகளாவிய பொருளாதார அபிவிருத்தியின் கவர்ச்சிகரமான மையமாக குறிப்பிட்டு இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு ஜைக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) தலைவர் கலாநிதி தனாகா அகிஹிட்டோ தெரிவித்தார். பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) தலைவர் கலாநிதி தனாகா அகிஹிட்டோவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (14) அலரி மாளிகையில் இடம்பெற்றது. 1968 ஆம் ஆண்டு … Read more

வடக்கு கடலில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த 06 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், கல்முனை துடுவ கடல் பகுதியில் 12ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளைப் பிடித்த ஆறு (06) பேர், சுமார் 774 கடல் அட்டைகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் ஒரு டிங்கி படகு (01) கைது செய்யப்பட்டன. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், கடற்படை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை … Read more

வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதற்கு தற்போது நாடு தகுந்த தருணத்தில் அல்ல – அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன

நாட்டில் வேலை நிறுத்தங்களை மேற்கொள்வதற்குத் தகுந்த தருணத்தில் அல்ல தற்போது நாடு காணப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவைப் பேச்சாளர் இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது தொடர்ந்தும் குறிப்பிடுகையில்; நமது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியில் அரசாங்கமொன்று மக்களுக்கு நிவாரணமாக மேற்கொள்ளக்கூடிய அனைத்தும் வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, பொய் பிரசாரம் மேற்கொள்ளும் நபர்கள் தவிர்ந்த ஏனைய அறிவு … Read more

இராணுவத்தினரால் இரண்டாம் கட்டமாக ஆழ்ந்த சிக்கலில் உள்ள குடும்பங்களுக்கு பால்மா பொதிகள் விநியோகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் வாழும் ஆழ்ந்த சிக்கலில் உள்ள குடும்பங்களுக்கான பால்மா பொதிகள் இராணுவத்தினரால் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வாக இன்று (14) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. உதவி பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு 233 இலக்க இராணுவ படையின் அனுசரணையுடன் நடைபெற்றது. இதன்போது செங்கலடி பிரதேசத்திலுள்ள பத்து கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த … Read more

வாழைச்சேனையில் 3ம் கட்டமாக காணி அனுமதிப்பத்திரம் விநியோகம்!!

மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு (09) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது அரச காணிகளில் குடியிருந்து அவற்றை பராமரிக்கின்ற மக்களுக்கு காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மாகாண காணி நிருவாகத் திணைக்களத்தின் அனுமதியுடன் காணிக் கச்சேரிகளை நடாத்திய பயனாளிகளுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ். எச் முஸம்மில் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதார மாற்றத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதற்கு உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை அவசியம்

துறைசார் நிபுணர்களை உருவாக்கக்கூடிய கல்வி முறை எதிர்காலத்தில் உருவாக்கப்படும் – 2024 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் விநியோகிப்பதற்கான தேசிய நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டை பொருளாதார மாற்றத்திற்கு இட்டுச் செல்வதற்கு, உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை அவசியமானது எனவும், அதன் மூலம் போட்டி நிறைந்த உலகச் சந்தைக்குத் தேவையான துறைசார் நிபுணர்களை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க சுட்டிக்காட்டினார். பரீட்சை சுமையை குறைத்து, ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை … Read more

ஜனாதிபதி நிதியத்தின் புதிய இணையத்தளம் அறிமுகம்

ஜனாதிபதி நிதியத்தின் புதிய இணையத்தளம் (https://www.presidentsfund.gov.lk) நேற்று (13) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் மூலம், ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான புதிய தகவல்களை மும்மொழிகளிலும் பொதுமக்கள் பெறமுடிவதுடன், மருத்துவ உதவி பெறுவது தொடர்பான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யும் வசதியும் உள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான சரத் குமார, ஜனாதிபதி நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் கயான் மொரலியகே மற்றும் ஜனாதிபதி … Read more

தேசிய சாரணர் ஜம்போரிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்

10வது தேசிய சாரணர் ஜம்போரிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என்று சாரணர் துணைத் தலைமை ஆணையாளர் எம்.எஸ்.எப். முஹீன் தெரிவித்தார். 10வது தேசிய சாரணர் ஜம்போரியை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, தேசிய சாரணர் ஜம்போரிக்கு எவ்வாறான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… விசேடமாக எமது கிழக்கு மாகாண … Read more