உலக வங்கியின் இலங்கைக்கான பிராந்திய பணிப்பாளர் பிரதமரை சந்தித்தார்.

நேபாளம், மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பிராந்திய பணிப்பாளர் திரு. டேவிட் சிஸ்லென், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (நவம்பர் 26) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். திரு. சிஸ்லென், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் கடன் மறுசீரமைப்பு செயன்முறை, இலங்கையின் சமூகப் பாதுகாப்புக் கொள்கை, காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் பாலின சம்பள இடைவெளியை நீக்குதல் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தி இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த சந்திப்பில் உலக வங்கியில் மாலைதீவு மற்றும் … Read more

தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாகக் கொள்ளாது அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்திருக்கும் பிரதேசங்களுக்கு சென்று மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குக

உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் மனநிலை மற்றும் வசதிகளை கவனத்தில் கொண்டு உரிய செயற்பாடுகளை மேற்கொள்க கடலுக்குச் சென்றிருக்கும் மீனவர்களை பாதுகாப்பாக கரைசேர்க்க நடவடிக்கை எடுக்கவும் அனர்த்த முகாமைத்துவத்துடன் தொடர்புள்ள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்  தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச்  சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.  அதற்காக கீழ் மட்டத்திலிருந்து வலுவான பொறிமுறையொன்றை … Read more

மட்டக்களப்பில் உலங்கு வானூர்தி மூலம் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கில் உயிர் ஆபத்தில் சிக்கியுள்ள மக்களை உலங்கு வானூர்தி மற்றும் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். செங்கலடி பிரதேச செயலக பிரிவில் மாவடியோடை பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு உயிர் ஆபத்தில் உள்ளவர்களை காப்பாற்றுவதற்காக இரண்டு உலங்குவானுர்திகள் மற்றும் படகுகள் பயன்படுத்தி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் டிசம்பர் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை கூடும்

தீர்மானம் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த விவாதம் டிசம்பர் 3, 4ஆம் திகதிகளில் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு குறித்த தீர்மானம் டிசம்பர் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் பாராளுமன்றத்தை டிசம்பர் 03 ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூட்டுவதற்கு சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல தலைமையில் அண்மையில் (25) கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இதற்கமைய டிசம்பர் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கௌரவ ஜனாதிபதி … Read more

சீரற்ற காலநிலை காரணமாக யாழ் ஏ 09 வீதியின் வாகன போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

சீரற்ற காலநிலை காரணமாக யாழ் ஏ 09 வீதியின் வாகன போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது ஓமந்தை பொலிஸ் பிரிவு. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலைக் காரணமாக ஓமந்தை பொலிஸ் பிரிவிட்குற்பட்ட நொச்சிமோட்டை பாலம் மற்றும் அதன் அண்டிய பிரதேசங்கள் வெள்ளத்தால் முற்றாக மூழ்கியுள்ளது. இவ் வீதியினூடாக இலகு ரக வாகனங்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அத்தோடு கனாக வாகனங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் ஓமந்தை பொலிஸ் பிரிவின் ஊடாக 09 வீதியை பயன்படுத்தும் பொது மக்களும், … Read more

இன்று  ஒருசூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம்

2024 நவம்பர் 27ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம் நவம்பர் 26ஆம் திகதி பிற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலைக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 190 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது. இத் தொகுதி வடக்கு – வடமேற்குத் திசையில் நாட்டின் கிழக்குக் கரைக்கு அண்மையாக நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேலும் வலுவடைந்து இன்று (நவம்பர் 27ஆம் திகதி) ஒருசூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் … Read more

மறு அறிவித்தல் வரை கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம் நவம்பர் 26ஆம் திகதி பிற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலைக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 190 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது.   இத் தொகுதி வடக்கு – வடமேற்குத் திசையில் நாட்டின் கிழக்குக் கரைக்கு அண்மையாக நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேலும் வலுவடைந்து இன்று (நவம்பர் 27ஆம் திகதி) ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  கடலில் பயணம் செய்வோரும் … Read more

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தல்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்குப் புதிய அரசு எதிர்பார்த்துள்ளது. இதற்கான அனுமதி நேற்று (25.11.2024) நடைபெற்ற அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுகின்ற வகையில் அபிவிருத்தியின் ஆரம்பப் படிமுறைகளை மேற்கொள்வதற்கான வரவு செலவுத் திட்டமாக 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் மூலம் … Read more

பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் கொண்ட நிகழ்ச்சித் திட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் கொண்ட நிகழ்ச்சித் திட்டம்’ நவம்பர் 25ம் திகதி கொழும்பு நகர மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘பாலின அடிப்படையிலான வன்முறை இல்லாத இலங்கையை நோக்கி: அனைவருக்கும் பாதுகாப்பான பொது இடைவெளி’ என்ற தொனிப்பொருளில் இந்த வருடம் குறித்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பங்கேற்றிருந்தார். பாலின அடிப்படையிலான வன்முறைகளை(GBV) இல்லாமல் செய்தல் மற்றும் இலங்கைக்குள் பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கும் பொது … Read more

2024 நவம்பர் 27, 28, 29 ஆகிய தினங்களில் க.பொ.த. (உயர் தர) பரீட்சை நடைபெறமாட்டாது – பரீட்சைத் திணைக்களம் 

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண காலநிலை மேலும் தீவிரமடைந்து தென்மேல் வங்காள விரிகுடா பிரதேசத்தில் வலுவடைந்துள்ள தாழமுக்கமானது 27.11.2024ஆம் திகதியளவில் சூறாவளியாக வளர்ச்சிடையலாம் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. இந்நிலைமையுடன் நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, வடமேல், மத்திய மாகாணங்களில் மிகக் கடுமையான மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எதிர்கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த அசாதாரண காலநிலையுடன் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்த நிலைமைகள் காரணமாக 2024 க.பொ.த. (உயர் தர) பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு எதிர்கொள்ள … Read more