காலி தொடங்கொட பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது

காலி, தொடம்கொட பகுதியில் கிங் ஆற்றின் குறுக்கே உள்ள தொடம்கொட பாலத்தில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கையொன்று கடற்படையினரால் 2023 ஜனவரி 17 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. சீரற்ற காலநிலையால் இலங்கைக்கு பெய்து வரும் கனமழை காரணமாக கிங் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதுடன், நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படும் குப்பைகள், மரக்குற்றிகள், மூங்கில் புதர்கள் மற்றும் பிற குப்பைகள் கிங் ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்களின் கீழ் சேகரிக்கப்பட்டு, ஆற்றின் நீரின் சீரான ஓட்டத்திற்கு இடையூறாக உள்ளது. … Read more

இலங்கையில் தேசிய பாதுகாப்பு பற்றிய முதன்மையான சிந்தனைக் குழுவாக, INSS அறிவுசார் ஆய்வுகளின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. – பாதுகாப்பு செயலாளர்

“தேசியப் பாதுகாப்புத் துறையில், அறிவு என்பது அதிகாரம் மட்டுமல்ல; இது நமது பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தின் அடித்தளமாக உள்ளது” என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று பத்தரமுல்லையில் உள்ள தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தில் (INSS) நேற்று  (ஜனவரி 19) நடைபெற்ற ‘பாதுகாப்பு மீளாய்வு-2023’ வெளியீட்டு விழாவின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார். INSS வேலைபார்க்கும் பணிப்பாளர் நாயகம் மற்றும் பதில் பணிப்பாளர் (ஆராய்ச்சி) கர்னல் நலின் ஹேரத் அவர்கள் நிகழ்விற்கு வருகை … Read more

சீனத் தூதுவர் கௌரவ சபாநாயகரை சந்தித்தார்

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று (19) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவும் கலந்துகொண்டார். சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) கௌரவ ஸாவோ லெஜி (Zhao Leji) அவர்களின் புதுவருட வாழ்த்துச் செய்தியை இதன்போது சீனத் தூதுவர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்தார். மேலும், இரு தரப்பினருக்குமிடையில் கலந்துரையாடல் … Read more

கோரளைப்பற்று மத்தி பிரதேச அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல்!!

கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கடந்த ஆண்டு நடைமுறைப் படுத்தபட்ட திட்டங்களின் மீளாய்வுகள், இவ்வாண்டு அமுல்ப்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட திட்டங்கள், திணைக்களங்கள் ரீதியான சவால்கள், போதைப்பொருள் பாவனை மற்றும் குடிநீர் பிரச்சினை போன்றவை ஆராயப்பட்டன. இதன்போது தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டன. கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மிலின் … Read more

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி ரன்விமன வீடுகள் திறந்துவைக்கப்பு!!

2023ம் ஆண்டு விசேட வீட்டு திட்டத்தின் கீழ் சமுர்த்தி ரன்விமன வீடுகள் கையளிக்கும் நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் முசமில் தலைமையில் (19) இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளிடம் வீடுகளை கையளித்தார். கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகர் பிரிவின் மாவடிச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் இவ் வீடுகள் அதிதிகளிளால் கையளிக்கப்பட்டது. சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் 7.5 இலட்சம் பெறுமதியான நிதி உதவி … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் மழை

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் மழை அதிகபட்சமாக 76.9 மீற்றர் மழை விழ்ச்சி மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது மாவட்டத்தில் (19) அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 76.9 மில்லி மீற்றர் மழை மட்டக்களப்பு பகுதியில் பதிவாகியுள்ளது. இதேவேளை மழைவீழ்ச்சியை அளவிடும் பிரதேசங்களான வாகனேரியில் 26.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கட்டுமுறிவு குளத்தில் 12.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணியில் 24.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும உறுகாமத்தில் 17.0 மில்லி மீற்றர் மழை … Read more

மட்டக்களப்பு வெல்லாவெளியில் விசேட நடமாடும் சேவை

வெல்லாவெளி பிரதேச செயலக பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான அசுவெசும கொடுப்பனவுக்கு தேசிய அடையாள அட்டை அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான விசேட நடமாடும் சேவை திருப்பழுகாமம் கலாசார நிலையத்தில் (19) பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது வன்னிநகர், மாவேற்குடா, வீரஞ்சேனை, பழுகாமம் – 01, பழுகாமம் – 02 மற்றும் விபுலானந்தபுரம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட அசுவெசுமக்கு தகுதியுள்ள இதுவரை அடையாள அட்டை இல்லாத பொதுமக்கள் பலர் … Read more

சமூக அபிவிருத்தி திணைக்களத்தினால் வட்டியில்லா கடன் வழங்கி வைப்பு!!

மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேசத்தில் சமூக அபிவிருத்தி திணைக்களத்தினால் வட்டியில்லா கடன் (19) வழங்கி வைக்கப்பட்டது. பிரதேச செயலாளர் எஸ் எச்.முசமில் தலைமையில் சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.நஜிம் ஒழுங்கமைப்பில் 10 பயனாளிகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே. ஜே.முரளிதரன் பயனாளிகளுக்கு நிதியினை வழங்கி வைத்தார். நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ரமிசா மற்றும் கணக்காளர் … Read more

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டு இழப்பீடு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல்

இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக IOM நிறுவனத்தின் அனுசரணையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டு இழப்பீடு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (17) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் இறங்கு துறைமுக மீள்கட்டுமாணம், வீதிப் புனரமைப்பு, வீட்டுத் திட்டங்கள், உள்ளக விளையாட்டு மைதானம் அமைத்தல், போதைப் பொருள் தடுப்பு புனர்வாழ்வு முகாம் அமைத்தல், உள்ளூர் கைத்தொழிலை ஊக்குவித்தல், படகு சேவையின் விஸ்தரிப்பு … Read more

09 மாதங்கள் முதல் 15 வருடங்கள் வரை சின்னம்மை தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு அதனைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம்..

இதுவரையிலும், சின்னம்மை தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத 09 மாதங்கள் முதல் 15 வயது வரையிலானவர்கள், சின்னம்மை தடுப்பூசியை அருகில் உள்ள வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் எஸ். எம். ஆர்னோல்ட் தெரிவித்தார். தெரிவித்தார் .06-09 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு சின்னமம்மை நோயின் மேலதிக டோஸ் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கான கவரேஜை அதிகரிப்பது தொடர்பாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் அண்மையில் (17) நடைபெற்ற … Read more