தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில்சார் அமைப்புக்களுடன் கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்ட தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில்சார் அமைப்புக்களுடனான கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று (18) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் தொழில் முயற்சியாளர்களுக்கான கடன்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் கைத்தொழில் மேம்பாடு தொடர்பாக ஆராயப்பட்டது. தொழில் முயற்சியாளர்களுக்கான கடனுதவி, சந்தை வாய்ப்பு, தரச் சான்றிதழ், நிதி மூலம், தொழில் நிலையங்களை பதிவு செய்தல் முதலான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.மேலும், யாழ் மாவட்ட சிறுதொழில் … Read more

தணிக்கை சபை ரத்து

பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் ஆக்கப்பூர்வ உரிமைகளை பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டு பொது அரங்கக்கலை வகைப்படுத்தல் சட்ட வரைவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உறுப்பினர் குழுவினால் அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. இந்த புதிய வரைவை தயாரிப்பதற்காக தணிக்கை சபையின் முன்னாள் தலைவர் சமன் அதாவுதஹெட்டி தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் திரைப்படவியலாளர் அசோக ஹாதகம, நாடகக் கலைஞர் ராஜித திஸாநாயக்க, படைப்பாளர் அனோமா ராஜகருணா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஜகத் … Read more

96வது தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பாதுகாப்பு செயலாளர் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார்

நேற்றுமுன்தினம் (ஜனவரி 17) கொழும்பு ரோயல் கல்லூரியின் MAS அரங்கில் நடைபெற்ற 96வது தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் நிறைவு விழாவில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். 2023ஆம் ஆண்டின் மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரராக இலங்கை பொலிஸ் வீரர் உமயங்க மிஹிரன் தெரிவு செய்யப்பட்டார். 96ஆவது தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 23 தங்கப் பதக்கங்களுடன் இலங்கை இராணுவ குத்துச்சண்டைக் கழகம் 2023ஆம் ஆண்டின் வெற்றிகரமான கழகமாகப் பாராட்டுகளைப் பெற்றது. … Read more

IOM நிறுவன பிரதிநிதிகளுக்கும் மாவட்டச்செயலக அதிகாரிகளுக்குமிடையில் சந்திப்பு.

கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் உள சமூக, வாழ்வாதாரமேம்பாடு,இழப்பீடுகள் தொடர்பான கடந்தகால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் IOM நிறுவன பங்களிப்புடன் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியதுடன் எதிர்காலத்தில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் S.முரளிதரன்,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி இ.நளாஜினி,IOM நிறுவன பிரதிநிதிகள் மற்றும் விடயத்தோடு … Read more

நாட்டின் பல பிரதேசங்களுக்கு பி.;ப 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜனவரி 19ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு. 2024 ஜனவரி 19ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ … Read more

இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான புதிய முதலீடுகள் தொடர்பில் நம்பிக்கை வைத்துள்ளோம் – ஜனாதிபதி

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான குறுகிய கால மூலோபாயமாக சுற்றுலா ஊக்குவிப்பு, விவசாய நவீனமயமாக்கல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவற்றுக்காக இலங்கை தற்போது புதிய முதலீடுகளை ஈர்க்கும் நம்பிக்கையில் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நேற்று (17) சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் (WEF) பங்குதாரர்கள் உரையாடலின் ஒரு அங்கமான நிபுணர் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். விளிம்பிலிருந்து பின்வாங்குதல் (‘Pulling back from the brink)என்ற … Read more

இலங்கையின் பொருளாதார நோக்கு தொடர்பாக இந்திய நிறுவனத் தலைவர்களுக்கு ஜனாதிபதி விளக்கினார்

நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் பல முக்கிய சவால்களை இலங்கையினால் வெற்றிகொள்ள முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இந்திய கைத்தொழில் குழு (CII) மற்றும் உலக பொருளாதார மன்றம் இணைந்து (16) சுவிட்சர்லாந்தில் ஏற்பாடு செய்திருந்த வட்டமேசை கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இலங்கையின் பரந்த பொருளாதார நோக்கு குறித்து விளக்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விநியோகத்திற்கான தடைகளுக்கு வெற்றிகரமாக தீர்வு வழங்கல், இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குதல் மற்றும் அந்நிய செலாவணி … Read more

அனர்த்த பாதுகாப்பு உபகரணங்கள் கையளிப்பு!!

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அனுசரணையில் அவசர அனர்த்த பாதுகாப்பு உபகரணங்கள் இன்று(18) காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்களினால் இராணுவ மற்றும் கடற்படை கட்டளை தளபதிகளிடம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர், அனர்த்த முகாமை துவ உத்தியோகத்தர்கள் மற்றும் ராணுவ கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு – வடக்கு மாகாண ஆளுநர் இடையிலான சந்திப்பு

நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு 14.01.2024 வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழு, வர்த்தகப் பிரதிநிதிகள், சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் பிரதிநிதிகள் என பலரும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர். சர்வதேச நாணய நிதியத்தை (IMF) பிரதிநிதித்துவப்படுத்தி, சிரேஷ்ட பிரதம அதிகாரி தலைமையில் நிரந்தர வதிவிட பிரதிநிதி, சிரேஷ்ட … Read more

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் அரசாங்க அதிபரிடம் கையளிப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்பினால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களுக்கு கிழக்கு மாகாண சமுக சேவைத்திணைக்களத்தினால் வழங்கப்படும் உலர் உணவுப் பொதிகள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் நேற்று (17) கையளிக்கப்பட்டது. கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் கே. இளங்குமுதன் இவ்வுலர் உணவுப் பொதிகளை அரசாங்க அதிபர் திருமதி. ஜே.ஜே. முரளிதரனிடம் மாவட்ட செயலகத்தில் வைத்து கையளித்தார். இவ்வருடம் ஜனவரி 1ம் திகதி முதல் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டும் வெளியேறி … Read more