மதுபான விற்பனை நிலையங்கள் 02 நாட்களுக்கு மூடப்படும்

2024.11.14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாடு பூராவும் உள்ள கலால் உரிமம் பெற்ற அனைத்து மதுபான சில்லறை விற்பனை நிலையங்களும் இம்மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மூடப்பட வேண்டும் என்று இலங்கை மது வரித் திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட (03 stars) 3 நட்சத்திர வகைப் பிரிவுக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தங்கி இருக்கும், மதுபானங்களை விற்பனை … Read more

பாராளுமன்ற தேர்தல் –  நாளை முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, நாளை (13) முதல், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள், அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்துள்ளதாகவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. … Read more

அறுகம்பே பிரதேசத்தின் பாதுகாப்பு நிலமை தொடர்பில் ஆராய பாதுகாப்பு செயலாளர் நேரில் விஜயம்

கிழக்கு மாகாணத்திற்கு இன்று (நவம்பர் 10) விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அறுகம்பே பகுதியின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கண்டறிந்தார். இந்த விஜயத்தின் போது, பிரதேசத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், உள்ளூர் சிரேஷ்ட இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதற்கமைவாக, பிரதேசத்தின் பாதுகாப்பைப் பேணுவதற்கும், நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள சுற்றுலாத் … Read more

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் முடிவு

2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிய வீடுகளுக்கு அஞ்சலில் விநியோகிக்கும் பணிகள் 2024.11.07 ஆம் திகதி முடிவடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காத வாக்காளர்களுக்கு 2024 நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை அலுவலக நேரத்தில் அவர்கள் தேருநர் இடாப்பில் பதிவுசெய்துகொண்ட முகவரிக்கு உரிய பிரதேச அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று தமது ஆளடையாளத்தை வெளிப்படுத்தி தமது வீட்டுக்குரிய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  … Read more

கொழும்பு கோட்டை – தலைமன்னார் வரையிலான புகையிரத சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம் 

கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரையிலான புகையிரத சேவை நாளை (12.11.2024) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி பொதுமுகாமையாளர் (போக்குவரத்து) அறிவித்துள்ளார்.  மஹவ மற்றும் அநுராதபுரம் வரையிலான புகையிரத வீதி அபிவிருத்தி காரணமாக தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும் தலைமன்னார் புகையிரத சேவை 2024.11.12 ஆம் திகதியிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதனடிப்படையில் 2024.11.12ம் திகதியிலிருந்து கொழும்பு கோட்டை மற்றும் தலைமன்னார் இடையிலான புகையிரத சேவையானது பின்வரும் வகையில் அமையவுள்ளது.  இலக்கம் 5003 – கொழும்பு கோட்டையிலிருந்து – தலைமன்னார்  கொழும்பு … Read more

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் எனவும் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களத்தின் வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் … Read more

மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00யின் பின்னர் மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 நவம்பர் 09ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 நவம்பர் 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00யின் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் மேல், சப்ரகமுவ … Read more

வடக்கு,  வடமத்திய மாகாணங்களில்  இடியுடன் கூடிய மழை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வழிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ … Read more

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புச் செலவு பொலிஸ் வைத்தியசாலையின் வருடாந்த செலவை விட அதிகம் – அமைச்சர் விஜித ஹேரத்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் மருந்து வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட அதிகம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை விவரித்தார். அதற்காக நூற்றுக்கும் … Read more

வடக்கில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு

  வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வழகமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  … Read more