இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்த ஒப்பந்தம் (SLTFTA) தொடர்பான நான்காம் சுற்று பேச்சுவார்த்தை கொழும்பில் ஆரம்பம்

அடுத்த வருடம் (2024) கைசாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்த ஒப்பந்தம் குறித்த நான்காம் சுற்று பேச்சுவார்த்தைகள் கடந்த (27) ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகின. பாரிய மற்றும் வளர்ந்துவரும் பொருளாதாரத்தை கொண்ட தென்கிழக்காசிய சங்கத்திற்குரித்தான நாடுகளுடன் பொருளாதார உறவுகளை பலப்படுத்திக்கொள்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் எதிர்பார்ப்பாகும். அதற்கமைய, இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்திற்காக தாய்லாந்து சந்தைக்குள் நுழைவதற்கான வாய்ப்புக்களை அதிகரித்துகொள்வது மாத்திரமின்றி, அந்த பொருளாதாரச் சந்தையினூடாக ஏனைய ஆசியான் நாடுகளின் பொருளாதார சந்தைகளுக்கான … Read more

இன்று நள்ளிரவு 12 மணி முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும்வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளது என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 340 ரூபாவாகும். அத்துடன் ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும். மேலும், மண்ணெண்ணையின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், … Read more

லங்கா ஐஓசி மற்றும் சிபெட்கோவால் குறைக்கப்பட்டது பெட்ரோல் – டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை

லங்கா ஐஓசி நிறுவனமும் இன்று (29.03.2023) இரவு முதல் சிபெட்கோவின் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  முதலாம் இணைப்பு                                                                              … Read more

கலப்பு உரங்களின் விலை 50 வீதத்தால் குறைவு

மரக்கறி, தேங்காய், தேயிலை, கறுவா உள்ளிட்ட பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் கலப்பு உரங்களின் விலை 50 வீதத்தால் குறைந்துள்ளது என்று கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் நேற்று (28) தெரிவித்துள்ளார். நெல் மற்றும் சோளப் பயிர்களுக்கு அரசாங்கத்தின் உரத் திட்டத்தின் கீழ் இரசாயன உரங்கள் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், ஏனைய பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் உரங்கள் கிடைக்காதமை தொடர்பில் விவசாயிகள் விவசாய அமைச்சுக்கு தொடர்ந்து முறைப்பாடு செய்து வருகின்றனர். அந்த … Read more

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை

நாட்டில் வழமையான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், எரிபொருள் விநியோக கடமைகளில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலும் செயற்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாய விடுமுறையில் சென்றவர்களாக கருதப்படுவர் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. மேலும், இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபன வளாகம், இலங்கை பெற்றோலிய சேமிப்பு … Read more

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு

கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் இன்று (29.03.2023) காலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். டுவிட்டர் பதிவொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் தொடர்ந்தும் ஆதரவளிப்பார்கள். அத்துடன், நாட்டில் போதியளவு எரிபொருள் இருப்புக்கள் உள்ளது. எரிபொருள் விலை திருத்தம் ஏப்ரல் மாத விலை திருத்தத்தை எதிர்பார்த்து சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை ஆர்டர் செய்யவில்லை. எரிபொருள் … Read more

அடக்குமுறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது – கடற்றொழில் அமைச்சர்

தற்போதைய அரசாங்கம் அடக்குமுறைகளை மேற்கொள்வதற்கு இடமளிக்காது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். துஸ்டர்களினால் சின்னாபின்னமாக்கப்பட்ட நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயத்தினை விரைவில் மீண்டும் அமைப்பது தொடர்பாக, நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஆதரவாக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையம் பொது மக்களின் பாவனைக்காக நேற்று (28) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமானும் இந்த விடயத்தினை தன்னோடு … Read more

பதில் ஊடகத்துறை அமைச்சராக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நியமனம்

இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார ஊடகத்துறை அமைச்சின், பதில் ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன வெளிநாட்டுப்பயணமொன்றை மேற்கொண்டுள்ள காரணத்தினால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று (28) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான காப்புறுதி நிறுவன பெண் ஊழியர்கள்

காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பெண் ஊழியர்கள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 45 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் நேற்று புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் பிரிவு … Read more

வலுசக்தி துறையில் பசுமை முதலீடுகளை அணிதிரட்ட இலங்கை தயார் – காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவிப்பு

பசுமை வாய்ப்புக்கள் ஊடாக தற்போதைய நிலையிலிருந்து இலங்கையை மீட்பதே ஜனாதிபதியின் நோக்கு- ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு வலுசக்தி துறைக்குள் பசுமைய முதலீடுகளை அணிதிரட்ட இலங்கை தயாராகவிருப்பதாகவும் அதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீ்ட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் (27) நடைபெற்ற இலங்கை பசுமை வலுசக்தி மாநாடு – 2023 இன் தலைவர் என்ற வகையில் … Read more